Tuesday, May 22, 2018

'2வது மனைவிக்கு ஓய்வு கால பணப்பலன்'

Added : மே 22, 2018 01:16

மதுரை: மரணமடைந்த ஆசிரியரின் இரண்டாவது மனைவி குடும்பத்துக்கு, ஓய்வு கால பணப்பலன்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் கலைச்செல்வி தாக்கல் செய்த மனு:இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த ஜேம்ஸ் என்பவரின், இரண்டாவது மனைவி நான். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஜேம்ஸ், 2017ல் இறந்தார். அவரது இறப்பு மற்றும் ஓய்வுக்கால பணப் பலன்களில் பங்கைப்பெற, எங்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. மாநில கணக்காளர் தலைவர், திண்டுக்கல் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கலைச்செல்வி மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். அரசு வழக்கறிஞர், 'இரண்டாவது மனைவியின் மகன் உட்பட அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் உரிமை உள்ளது பற்றி, ஜேம்சின் இரு மனைவியரிடமும் விசாரித்து முடிவு செய்யப்படும்' என்றார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் மற்றும் அவரது மகன், இறந்த ஜேம்சின் முதல் மனைவி மற்றும் இதர சட்டப்பூர்வ வாரிசுகள் விளக்கமளிக்க, துவக்கக் கல்வி அலுவலர் சமவாய்ப்பளிக்க வேண்டும். மனுதாரர் மனுவை தகுதி அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவு
பிறப்பிக்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...