அரசு ஊழியர்கள் விரைவில் போராட்டம் : ஜூலை 21, 22 மாநாட்டில் முடிவு
Added : மே 22, 2018 02:38மதுரை: புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடு வது குறித்து, ஜூலை 21, 22 தேதிகளில் மதுரையில் நடக்கும் மாநில பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில், அரசு ஊழியர்கள் முடிவு செய்கின்றனர்.அரசு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், மாநில பேரவை பிரதிநிதிகள் மாநாடு ஆண்டிற்கு ஒரு முறையும் நடக்கும். நடப்பாண்டிற்கான பேரவை மாநாடு மதுரை யில் ஜூலை 21, 22 நடக்கிறது. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மதுரையில் நடந்தது. மாநில பொது செயலர் அன்பரசு, மாநில நிர்வாகிகள் செல்வம், பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநில நிர்வாகிகள் கூறியதாவது: மாநிலத்தில் 148 அரசு துறைகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. வேலைவாய்ப்புக்காக 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதுடன், மக்களிடம் திட்டங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன. இந்நிலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை அகற்றிவிட்டு அவுட்சோர்சிங் முறையை கொண்டு வர அரசு முயற்சிக்கிறது.புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, சம்பள முரண்பாடு களைதல், சத்துணவு, அங்கன்வாடி போன்ற தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள்குறித்து பேரவை மாநாட்டில் முடிவு செய்யப்படவுள்ளது, என்றனர்.
No comments:
Post a Comment