Thursday, June 21, 2018

வங்கிகள், தபால் அலுவலகங்களில் 18 ஆயிரம், 'ஆதார்' மையங்கள் திறப்பு

Added : ஜூன் 21, 2018 01:15


புதுடில்லி: வங்கிகள், தபால் அலுவலகங்களில் மட்டும், ௧௮ ஆயிரம், 'ஆதார்' அட்டை வழங்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என, யு.ஐ.டி.ஏ.ஐ.,தெரிவித்துள்ளது.மக்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் வழங்கி வருகிறது. இந்நிலையில், யு.ஐ.டி.ஏ.ஐ.,யின் தலைமை செயல் அதிகாரி, பூஷண் பாண்டே கூறியதாவது:ஆதார் அட்டை வழங்கும் வசதியை துவக்கும்படி, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம், யு.ஐ.டி.ஏ.ஐ., கடந்த ஆண்டு வலியுறுத்தியது. குறைந்தது, ௧௦ கிளைகளுக்கு, ஒரு கிளையிலாவது, ஆதார் மையம் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தபால் அலுவலகங்களிலும், ஆதார் மையங்கள் திறக்கப்பட்டன.தற்போது, வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும், ௧௮ ஆயிரம், ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.வங்கிகளில், ௧௦ ஆயிரம் மையங்களும், தபால் அலுவலகங்களில், ௮,000 மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. வங்கிகள், தபால் அலுவலகங்களில், மேலும், ௮,000 மையங்கள் திறக்கப்பட உள்ளன.வங்கிகளில் ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதால், வங்கி கணக்கு துவக்குவது, சாதாரண மக்களுக்கு, மிகவும் எளிதாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் அங்கீகாரம்: கமல் நம்பிக்கை

dinamalar 21.06.2018

''மக்கள் நீதி மையம் கட்சிக்கான அங்கீகாரத்தை, வெகுவிரைவில் அளிப்பதாக, தேர்தல் ஆணையம் உறுதியளித்து உள்ளது,'' என, கமல்ஹாசன் கூறினார்.



நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற பெயரில், அரசியல் கட்சி துவக்கியுள்ளார். இருப்பினும், கட்சியின் பெயர் மற்றும் கொடிக் கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை, தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை.

இந் நிலையில், கட்சியின் பெயருக்கான அங்கீ காரம் அளிப்பது குறித்து,ஆலோசனை மேற்கொள்ள, நேரில் வரும்படி, தேர்தல்

ஆணையம் சார்பில் விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்று, நேற்று டில்லிக்கு கமல் வந்து இருந்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு, காலை, 11:00 மணிக்கு வந்த கமல், அங்கு அதிகாரிகளைசந்தித்து பேசினார்.அரைமணி நேரம் நடந்த சந்திப்புக்கு பின், வெளியில் வந்த கமல்,நிருபர்களிடம் கூறிய தாவது: ஆலோசிப்பதற்காக வரும்படி அதிகாரிகள் கூறியிருந்தனர்; அதற்காக வந்தேன். சில கேள்வி கள் இருந்தன; அதற்கான பதில்களை தந்துள்ளோம். கூடிய விரைவில் அங்கீகாரம் அளிப்பதாக கூறி உள்ளனர்.

குறிப்பிட்ட சின்னத்தை தரும்படி, இதுவரையில் நாங்கள் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை.சின்னம் குறித்து, முதலில் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்து விட்டு, அதன் பின், அது குறித்து கோரிக்கை வைக்கப்படும்.

தனக்கு சம்பள பாக்கி வைத்திருந்ததாக, நடிகை கவுதமி கூறியிருந்தார்; அது, அவருக்கு கொடுக்கப் பட்டு விட்டது. அது குறித்து, வெளிப்படையாக,

இதுவரை கூறாமல் இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

ராகுலுடன் திடீர் சந்திப்பு

கமல்ஹாசன் நேற்று மாலை, 4:00 மணிக்கு, காங் கிரஸ் தலைவர் ராகுலை நேரில் சந்தித்து பேசினார். ராகுலின் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சில வாரங்களுக்கு முன், பெங்க ளூரில், குமாரசாமி பதவியேற்பு விழாவின் போது, பங்கேற்று, முக்கிய எதிர்க் கட்சிகளின் தலைவர்களை, கமல் சந்தித்து பேசினார்.

அப்போது, ராகுலையும் சந்தித்து பேசியிருந்த நிலையில், மீண்டும் தனியாக இந்த சந்திப்பு, டில்லி யில் நடந்துள்ளது; இது, தமிழக அரசியல் களத்தில், பல்வேறு அரசியல் யூகங் களுக்கும், பரபரப்புக்கும் வித்திட்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் பேசிய கமல், ''மரியாதை நிமித்தமாகவே ராகுலை சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது, அரசியல் குறித்தும் பேசி னோம்; அதை மறுக்கவில்லை. அதேநேரம், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -




சென்னை: ''மதுரை மாவட்டம், தோப்பூரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசின், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்த மருத்துவமனை திறக்கப் பட்டால், தமிழகத்திற்கு வரப்பிரசாத மாக அமையும். மருத்துவமனை மூலம், 19 மாவட்ட மக்களுக்கு இலவச உயர் தர சிகிச்சை கிடைக்கும்.
'தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, 2015 - 16 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் - செங்கிப்பட்டி, மதுரை - தோப்பூர், புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டம் - பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் - செங்கல்பட்டு ஆகிய பகுதிகள், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஐந்து இடங்களிலும், 2015 ஏப்., 23 முதல், 25 வரை, மத்தியக் குழு ஆய்வு செய்தது.
அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பகுதிக்கு, எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என வலியுறுத்தியதால், இடத்தை தேர்வு செய்வதில், தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, மதுரை மாவட்டம், தோப்பூர், அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, முதல்வர் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:முதல்வராக, ஜெயலலிதா இருந்த காலத்தில், 'தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்குகோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில், மத்திய அரசு, ஐந்து இடங்களை பார்வையிட்டது. முதலாவதாக செங்கல்பட்டு, இரண்டாவது மதுரை, மூன்றாவது செங்கிப்பட்டி, நான்காவது பெருந்துறை, ஐந்தாவது புதுக்கோட்டை ஆகிய இடங்களில், மத்தியக் குழு பார்வை யிட்டது.
தற்போது, மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற ஆணையை, தமிழக சுகாதார துறை செயலருக்கு, மத்திய








 அரசு அனுப்பி உள்ளது. மதுரை அருகில் உள்ள தோப்பூரில், 200 ஏக்கர் நிலப் பரப்பில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. 750 படுக்கை வசதிகளுடன் கூடிய, நவீன மருத்துவமனை அமைய உள்ளது.
மேலும், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், புதிய மருத்துவ கல்லுாரியும் ஏற்படுத்தப்படும். செவிலியர்கள், 60 பேர், பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் உண்டு.எய்மஸ் மருத்துவமனை, 1,500 கோடி ரூபாய் மதிப்பில், உருவாக்கப்பட உள்ளது. மருத்துவமனை அமைப்பதற்கு, தமிழக அரசுசார்பில், அனைத்து உதவிகளும் செய்யப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி. இதற்காக, விரைந்து செயல்பட்ட, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கும் நன்றி. இவ்வாறு முதல்வர் கூறினார்.

சாதித்தார் உதயகுமார்!

'மதுரை, தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால், என் பதவியை ராஜினாமா செய்வேன்' என, கடந்த ஆண்டு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருந்தார்.மேலும், 'மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்' என   , முதல்வரிடமும் வலியுறுத்தி வந்தார்.தற்போது, 'மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், அமைச்சர் உதயகுமார் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. 'இது, அவருக்கு கிடைத்த வெற்றி' என, மதுரை மாவட்ட,அ.தி.மு.க., வினர் தெரிவித்தனர்.

பிரதமருக்கு கடிதம்!

மதுரை மாவட்டம், தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்டதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.'எய்ம்ஸ் மருததுவமனை அமைவதற்கு தேவையான உதவிகளை செய்யும்படி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே, மருத்துவமனை பணிகளை, விரைவாக துவக்க வேண்டும்' என்றும், அக்கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

நிருபர்களை தவிர்த்தார்!

முதல்வர் பழனிசாமி, நேற்று காலை, சென்னை,

தலைமைச் செயலகத்தில், பேட்டி அளிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், பேட்டிக்கு, நிருபர்களை அனுமதிக்கவில்லை. 'டிவி' கேமராமேன்களை மட்டும் அனுமதித்தனர். முதல்வர் கூறியதை மட்டும், பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.நிருபர்கள் வந்தால், பல்வேறு பிரச்னைகள் குறித்து, கேள்வி எழுப்புவர் என்பதால், அவர்களை தவிர்த்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்னென்ன பயன்கள்?

* எய்ம்ஸ் மருத்துவமனை, 750 படுக்கை வசதிகளை கொண்டது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் இருந்தும், உயர் தர சிகிச்சைக்கு, நோயாளிகளை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய முடியும்
* மேலும், மதுரையை சுற்றியுள்ள, 18 மாவட்ட மக்கள்; கேரளா போன்ற தென் மாநில மக்கள் பயனடைவர்.
* 100 எம்.பி.பி.எஸ்., மற்றும் 60 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் உருவாகும்.

என்னென்ன நிபந்தனைகள்?

* 200 ஏக்கர் நிலத்தை, இலவசமாக வழங்க வேண்டும்
* எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில், நான்கு வழிச்சாலை அமைத்து, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்
* 20 மெகாவாட் மின் வசதி, இரண்டு வழித்தடங்கள் வாயிலாக வழங்க வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
* போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
* தோப்பூரில், எண்ணெய் குழாய் பதித்துள்ள, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து, ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
ஏ.டி.எம்.,மில் குளறுபடி: 5 மடங்கு பணம் வந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Added : ஜூன் 21, 2018 05:20



நாசிக்: மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில், தனியார் வங்கி, ஏ.டி.எம்.,மில், பணம் எடுத்தவர்களுக்கு, ஐந்து மடங்கு பணம் வந்ததால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், சிட்கோ பகுதியில், ஆக்சிஸ் வங்கியின், ஏ.டி.எம்., மையம் உள்ளது. சமீபத்தில், இந்த ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்தவர்களுக்கு, தாங்கள் பதிவு செய்த தொகையை விட, ஐந்து மடங்கு அதிகமான பணம் வந்ததால், பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த ஏ.டி.எம்.,மில், 'டெபிட்' அட்டை மூலம், 1,000 ரூபாய் எடுத்தவருக்கு, 5,000 ரூபாயும்; 4,000 ரூபாய் எடுத்தவருக்கு, 20 ஆயிரம் ரூபாயும் வந்தன. ஆனால், அவர்கள் பதிவு செய்த தொகை மட்டுமே, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து கழிந்தது.

இது குறித்து, வங்கி மற்றும் அப்பகுதி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த போலீசார், வாடிக்கையாளர்களை பணம் எடுக்கவிடாமல் தடுத்தனர்.

இது குறித்து, வங்கி துணை மேலாளர் பிரவீன் பைஸ் கூறியதாவது: இதுவரை இரண்டு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.,மில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பண அட்டை பதிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களிடம் இருந்து, அவர்கள் கூடுதலாக பெற்ற தொகை திரும்ப பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது




மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

ஜூன் 21, 2018, 06:03 AM

சென்னை,

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என்ற தகவலை அறிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு குறிப்பிட்டு தந்த 5 இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில் உயர்மட்டக்குழுவினர் வந்தனர். அவர்களும் பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கினார்கள்.

2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணத்துக்கு எந்த ஒரு முற்றுப்புள்ளியும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழகம் மட்டும் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் இதுதொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்கை கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்தார். அந்த வழக்கு அவ்வப்போது கோர்ட்டில் விசாரணைக்கு வந்து, நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய வண்ணம் இருந்தனர். கடைசியாக ஜூன் மாதம்(2018) இறுதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறி, ஜூன் மாதம் 20-ந்தேதிக்கு(நேற்று) வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது. 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது.

இதுதொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சிறந்த மருத்துவ சிகிச்சையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என்ற ஆணையை சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.

இந்த மருத்துவமனை மதுரைக்கு அருகில் இருக்கும் தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் அமைய இருக்கிறது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அத்தனை உதவிகளையும் செய்யும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த பேட்டியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மத்திய உயர்மட்டக்குழுவினர் தேர்வு செய்து அனுப்பி இருந்தாலும், தமிழக அரசு அடுத்த கட்டமாக 2 நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

அதாவது, முதலாவதாக அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அடுத்ததாக, அதில் தமிழக அரசு இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து, தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

அப்படி செய்த பின்னர் தான், மதுரை தோப்பூரில் கட்டுமான பணிகள் தொடங்கும். இந்த பணிகள் ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை மாவட்டம், தோப்பூரில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (எய்ம்ஸ்) நிறுவுவதற்காக தமிழக மக்கள் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களும், பல்வேறு தரப்பினரும் உயர்ரக மருத்துவ சிகிச்சையை பெறும் வகையிலும், தரமான மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த மாநிலத்தில் எய்ம்ஸ் போன்ற தரமான மருத்துவமனை அமையவேண்டும் என்பதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவனமாக இருந்தார் என்பதை இப்போது நினைவுகூர்கிறேன்.

அந்த வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு தமிழகத்தில் 5 தகுதி வாய்ந்த இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அந்த பெருமைமிகு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கும் திட்டத்துக்காக மதுரையில் தோப்பூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

தமிழகம் பரிந்துரைத்த 5 இடங்களில் ஒன்றான தோப்பூரை தேர்வு செய்ததன் மூலம் இந்தத் திட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றதற்கு உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்.

இந்தத் திட்டப் பணிகள் உடனடியாக தொடங்குவதற்கான அனைத்து தேவையான ஆதரவை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் பெண்கள் கதறல்




சேலம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கான நில அளவீடு செய்யும் பணி 3-வது நாளாக நேற்று நடந்தது.

ஜூன் 21, 2018, 04:45 AM
அயோத்தியாப்பட்டணம்,

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு பணியை அரசு தொடங்கி உள்ளது.

இந்த சாலை திட்டத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள், 8 மலைகள் உடைக்கப்பட உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான மஞ்சவாடியில் இருந்து சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி வரை இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விவசாய நிலங்களில் எல்லைக்கல் ஊன்றி அளவீடு செய்யும் பணியில் கடந்த 18-ந் தேதி முதல் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து நில அளவீட்டின் போது அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடைபெற்றது. குறிப்பாக முதல் 2 நாட்களில் மஞ்சவாடி, அடிமலைப்புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நில அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக குப்பனூர் ஊராட்சி சீரிக்காடு பகுதியில் இருந்து நில எடுப்பு தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகநாதன் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சீரிக்காடு அருகே உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் நில அளவீடு செய்ய முருகன் என்ற விவசாயியின் தோட்டத்திற்குள் செல்ல முயன்ற அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயி முருகன் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

‘என்னிடம் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 4 ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்கள், நெல் சாகுபடி செய்து வருகிறேன். இப்போது 8 வழிச்சாலைக்காக நில அளவீடு செய்து எல்லைக்கல் போடப்பட்டதில் 2 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த 2 ஏக்கரில் 150-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இருக்கிறது. தோட்டத்தின் நடுவே இந்த சாலை செல்கிறது. சாலையின் இரு பக்கமும் எனது மீதி நிலம் உள்ளது. இதனால் தோட்டத்திற்கு செல்லவும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சவும் முடியாது. அதனால் 8 வழிச்சாலையை தள்ளி போட வேண்டும். இல்லையென்றால் எனது நிலத்தை எல்லாம் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.’

இவ்வாறு அவர் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் வந்து அவரை சமாதானம் செய்தனர்.

வெள்ளியம்பட்டியில் நில அளவீடு செய்து ராமசாமி, நைனாமலை ஆகியோரின் தோட்டத்தில் எல்லைக்கல் நடப்பட்டது. இவர்கள் இருவரும் அண்ணன், தம்பி ஆவார்கள். எல்லைக்கல் நடப்பட்டவுடன் ராமசாமியின் மனைவி பச்சியம்மாள் நில எடுப்பு தாசில்தார் அன்புக்கரசியிடம் கதறி அழுதார். அப்போது அவர், ‘எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 3½ ஏக்கரும், நாங்கள் குடியிருக்கும் வீடு, கிணறும் பசுமைச்சாலைக்காக போகிறது. இங்கு கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விவசாயம் மட்டுமே செய்து வருகிறோம். இதற்கு மேல் என்ன செய்யபோகிறோம் என்று தெரியவில்லை’ என்றுக்கூறி கதறி அழுதார்.

அந்த பெண்ணிடம் தாசில்தார் அன்புக்கரசி கூறும்போது, ‘நிலம் எடுப்பின் போது உங்களது வீடு, கிணறு, தென்னை மரங்கள், நிலங்கள் ஆகியவற்றுக்கு இழப்பீடு தரப்படும். அடுத்த மாதம்(ஜூலை) 6-ந் தேதி இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நடைபெறும். அப்போது நீங்கள் உங்கள் கோரிக்கை குறித்து முறையிடலாம்’ என்று கூறி சமாதானம் செய்தார்.

இதேபோல் சந்திரனின் மனைவி லட்சுமி குடும்பத்தினருக்கு 3½ ஏக்கர் நிலம் உள்ளது. லட்சுமி கண்ணீர் விட்டு அழுது கொண்டே ‘நாங்கள் 30 ஆண்டாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் படித்து விட்டு வேலைக்கு செல்லவில்லை. மகளுக்கு திருமணம் ஆகவில்லை. எங்களது 3½ ஏக்கர் நிலமும், வீடு, கிணறு ஆகிய அனைத்தும் போய் விட்டது’ என்று கூறி கதறி அழுதார். தாசில்தார் அன்புக்கரசி அவரையும் சமாதானம் செய்தார்.

மேலும் இந்த பெண்கள் கதறி அழுதபோது, ஒரு கட்டத்தில் ‘எங்களை வாழ விடுங்கள் இல்லை என்றால் சாகவிடுங்கள்‘ என்று ஆவேசமாக கூறினர். மேலும் விவசாய நிலங்கள் பறிபோனால் நாங்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும், அரசு இந்த விஷயத்தில் எங்களின் நிலையை கருத்தில் கொண்டு மாற்றுப்பாதையை தேர்வு செய்ய வேண்டும், விளைநிலங்களை எடுக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், தொடர்ந்து குள்ளம்பட்டி அருகே உள்ள காட்டூர் வரை நில அளவீடு பணியை மேற்கொண்டனர்.

Wednesday, June 20, 2018

விகடன் பொக்கிஷம் 

கழுகார் பதில்கள்!

 Image may contain: 1 person, closeup

வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார். இந்த வாத்தியார் பாடம் போதுமே!

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...