Thursday, June 21, 2018

விரைவில் அங்கீகாரம்: கமல் நம்பிக்கை

dinamalar 21.06.2018

''மக்கள் நீதி மையம் கட்சிக்கான அங்கீகாரத்தை, வெகுவிரைவில் அளிப்பதாக, தேர்தல் ஆணையம் உறுதியளித்து உள்ளது,'' என, கமல்ஹாசன் கூறினார்.



நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற பெயரில், அரசியல் கட்சி துவக்கியுள்ளார். இருப்பினும், கட்சியின் பெயர் மற்றும் கொடிக் கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை, தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை.

இந் நிலையில், கட்சியின் பெயருக்கான அங்கீ காரம் அளிப்பது குறித்து,ஆலோசனை மேற்கொள்ள, நேரில் வரும்படி, தேர்தல்

ஆணையம் சார்பில் விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்று, நேற்று டில்லிக்கு கமல் வந்து இருந்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு, காலை, 11:00 மணிக்கு வந்த கமல், அங்கு அதிகாரிகளைசந்தித்து பேசினார்.அரைமணி நேரம் நடந்த சந்திப்புக்கு பின், வெளியில் வந்த கமல்,நிருபர்களிடம் கூறிய தாவது: ஆலோசிப்பதற்காக வரும்படி அதிகாரிகள் கூறியிருந்தனர்; அதற்காக வந்தேன். சில கேள்வி கள் இருந்தன; அதற்கான பதில்களை தந்துள்ளோம். கூடிய விரைவில் அங்கீகாரம் அளிப்பதாக கூறி உள்ளனர்.

குறிப்பிட்ட சின்னத்தை தரும்படி, இதுவரையில் நாங்கள் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை.சின்னம் குறித்து, முதலில் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்து விட்டு, அதன் பின், அது குறித்து கோரிக்கை வைக்கப்படும்.

தனக்கு சம்பள பாக்கி வைத்திருந்ததாக, நடிகை கவுதமி கூறியிருந்தார்; அது, அவருக்கு கொடுக்கப் பட்டு விட்டது. அது குறித்து, வெளிப்படையாக,

இதுவரை கூறாமல் இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

ராகுலுடன் திடீர் சந்திப்பு

கமல்ஹாசன் நேற்று மாலை, 4:00 மணிக்கு, காங் கிரஸ் தலைவர் ராகுலை நேரில் சந்தித்து பேசினார். ராகுலின் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சில வாரங்களுக்கு முன், பெங்க ளூரில், குமாரசாமி பதவியேற்பு விழாவின் போது, பங்கேற்று, முக்கிய எதிர்க் கட்சிகளின் தலைவர்களை, கமல் சந்தித்து பேசினார்.

அப்போது, ராகுலையும் சந்தித்து பேசியிருந்த நிலையில், மீண்டும் தனியாக இந்த சந்திப்பு, டில்லி யில் நடந்துள்ளது; இது, தமிழக அரசியல் களத்தில், பல்வேறு அரசியல் யூகங் களுக்கும், பரபரப்புக்கும் வித்திட்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் பேசிய கமல், ''மரியாதை நிமித்தமாகவே ராகுலை சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது, அரசியல் குறித்தும் பேசி னோம்; அதை மறுக்கவில்லை. அதேநேரம், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...