அடுத்த கல்வியாண்டு முதல் 4 வருட பட்டப்படிப்பு?
ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் பட்டு வரும் தன்னாட்சி அமைப்பு யுஜிசி ஆகும். கல்வி மேம்பாடு தொடர்பாக யுஜிசி சார்பில் அவ்வப்போது குழுக்கள் அமைத்து ஆலோசனை கோருவது வழக்கம்.
அந்த வகையில், பெங்களுரு ஐஐஎஸ்சி முன்னாள் இயக்குநர் ஆர்.பலராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூஜிசிக்கு தனது அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளது. அதில், 4 வருடப் பட்டப்படிப்புகளை அறிமுகம் செய் யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த 4 வருடப் பட்டப்படிப்புக்கு பின் நேரடியாக முனைவர் பட்டத் திற்கான ஆய்வில் மாணவர்கள் சேரலாம். இதற்கு ஏற்றவாறு, கடந்த 2016-ல் அமலாக்கப்பட்ட முனைவர் பட்டத்திற்கான விதி முறைகளிலும் மாற்றங்களை செய்ய குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது முனைவர் பட்டம் பெறுவோர், குறைந்தபட்சம் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு இதழில் வெளியிட்டிருக்க வேண்டும். மாணவர் சமர்ப்பிக்கும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் அவரது ஆசிரியருக்கு நேரடிப் பொறுப்பு எதுவும் இல்லை.
இந்த விதிமுறைகள் மாற்றப் பட்டு, புதிய பரிந்துரையில், மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ் களில் வெளியிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறப் பட்டுள்ளது.
மாறாக அந்த ஆய்வுக் கட்டுரை களை மாணவர்களின் வழிகாட்டி யான குறிப்பிட்ட பேராசிரியர்களே மதிப்பிடு செய்யலாம். இதேபோல், மாணவர்களின் ஆய்வுக்கு அவர் களது வழிகாட்டிகளும் பொறுப்பு நிர்ணயிக்கும் வகையில் பேராசிரி யர் பெயரும் முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட வேண்டும்.
இதனால், முனைவர் பட்டத்திற் கான மாணவர்களின் ஆய்வின் மீது எழும் புகார்களுக்கு அவர்களது பேராசிரியர்களையும் பொறுப்பாக் கும் வாய்ப்புகள் உள்ளன.
நான்கு வருடப் பட்டப்படிப்புகள் தற்போது வெளிநாடுகளில் மட்டும் உள்ளன. அதனை முடித்தவர்கள் நேரடியாக முனைவர் பட்டத்திற் கான படிப்பில் சேர முடியும். ஆனால், இந்தியாவில் பட்டப்படிப் புக்கு பிறகு, பட்டமேற்படிப்பும் முடித்த பின்பே முனைவர் பட்டத் திற்கான கல்வியில் சேர முடியும்.
இதனிடையில், எம்.பில் எனும் ஒரு வருட ஆய்வுக் கல்வியை முடிப் பவர்களுக்கு முனைவர் கல்விக் கான சேர்க்கையில் கூடுதல் சலுகை கிடைக்கிறது. இனி இந்த எம்.பில். கல்வியை முற்றிலும் ரத்து செய்யவும் யூஜிசி ஆலோசனை செய்து வருகிறது.
இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் யூஜிசி வட்டாரங்கள் கூறும்போது, ‘வெளிநாடுகளின் கல்வி நிலையங்களை இந்தியாவில் அதிகமாக அறிமுகப்படுத்த இந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு திட்டம் உதவும். மூன்றாண்டுகளுக்கான பட்டப்படிப்பை தொடர்வதா? வேண் டாமா என்பதை அதை நடத்தும் கல்வி நிலையங்களே முடிவு செய்ய வேண்டும். இவை ரத்து செய்யப் பட்டால், மத்திய, மாநில அரசு களின் பணிகளை பெற திறனாய்வு தேர்வுகள் எழுதுவோர் கூடுதலாக ஒரு ஆண்டு கல்வி பயில வேண்டி வரும்’ எனத் தெரிவித்தனர்.
இதுபோல், நான்கு வருடப் பட்டப்படிப்புகள் சில ஆண்டு களுக்கு முன் டெல்லி பல்கலைக் கழகத்தில் துவக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே அதில் இணைந்த மாணவர்கள் மூன் றாண்டு படிப்புக்கு மாற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment