Wednesday, August 28, 2019

கருணை அடிப்படையில் 42 பேருக்கு அரசு பணி

Added : ஆக 27, 2019 22:24

சென்னை,: தொழில்நுட்ப கல்வித் துறையில், 42 பேருக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.உயர்கல்வித் துறை கீழ் செயல்படும், தொழில்நுட்ப கல்வித்துறையில், பணியின்போது இறந்த, 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், பணி வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம் பணி நியமன ஆணை வழங்கினார்.நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன், தலைமை செயலர், சண்முகம், உயர்கல்வித் துறை செயலர், மங்கத்ராம் சர்மா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024