Wednesday, August 28, 2019

149 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின

Added : ஆக 27, 2019 22:29

சென்னை, முத்து குமரன் மருத்துவ கல்லுாரிக்கான மாணவர் சேர்க்கையில், 149 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நேற்று நிரம்பின.சென்னை, மாங்காடு, முத்து குமரன் மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, முத்துகுமரன் மருத்துவ கல்லுாரியை, உறுப்பு கல்லுாரிகள் பட்டியலில் இருந்து நீக்கியது.உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 75 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில், 74 இடங்கள் என, 149 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள ஓரிடம் விரைவில் நிரப்பப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024