Monday, August 26, 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்

Added : ஆக 25, 2019 23:29

சென்னை:கடந்த, 2018 - 19ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வருவாய் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.கட்டாயம்வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது, ஓராண்டுக்கு முன் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.இதன்படி, 2018 - 19க்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ர லில் துவங்கியது. இந்த அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்படி, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இன்னும் ஐந்து நாட்களில் அவகாசம் முடிகிறது. அதன் பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், அபராதம் செலுத்த வேண்டும்.

அபராதம்

ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், 1,000 ரூபாய் அபராதத்துடன், 2020 மார்ச் வரை கணக்கு தாக்கல் செய்யலாம்.ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், இந்தாண்டு டிசம்பர் வரை, 5,000 ரூபாய்; 2020 மார்ச் வரை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்யலாம்.'கணக்கு தாக்கல் செய்யாதோர், வரும்,31ம் தேதிக்குள் தாக்கல் செய்து, அபராதம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்' என, வருமான வரி அதிகாரிகள்அறிவுறுத்தி உள்ளனர்.ஜி.எஸ்.டி.,க்கும்31ம் தேதி கடைசிஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி சார்ந்த, ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய, 'படிவம் - 9' பயன்படுத்தப்படுகிறது. இந்த படிவத்தை, ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு - செலவு உள்ள அனைத்து வணிகர்களும் தாக்கல் செய்ய வேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், வரவு - செலவு உள்ள நிறுவனங்கள், 'படிவம் 9ஏ - 9சி'யை பயன்படுத்த வேண்டும். இதற்கான அவகாசமும், வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024