Thursday, August 8, 2019

'நீட்' விண்ணப்ப கட்டணம் குறைக்க கோரி வழக்கு

Added : ஆக 08, 2019 00:16

மதுரை : முதுகலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை குறைக்க கோரிய வழக்கில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த, டாக்டர் முகமது காதர்மீரா தாக்கல் செய்த பொதுநல மனு:முதுகலை மருத்துவப் படிப்பிற்கான, 'நீட்' தேர்வை, தேசிய தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இது, கணினி மூலம், 'ஆன்லைனில்' நடத்தப்படும். இதற்காக, பொது மற்றும் இதர பிற்பட்டோரிடம், 3,750, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களிடம், 2,750 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது, 'எய்ம்ஸ்' முதுகலை படிப்பு நுழைவுத்தேர்வு கட்டணத்தை விட பல மடங்கு அதிகம். கட்டணம் மூலம், தேசிய தேர்வுகள் வாரியம், ஆண்டுக்கு, 48 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இதில், 8 கோடி ரூபாய் மட்டுமே, தேர்விற்கு செலவிடப்படுகிறது.இது தவிர, கவுன்சிலிங்கில் பங்கேற்போரிடம், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதுகலை மருத்துவப் படிப்பிற்கான, நுழைவுத் தேர்வு கட்டணத்தை குறைக்க மற்றும் அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை கொண்டு வர, தேசிய தேர்வுகள் வாரியம், பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு, 'மனுதாரர் கூடுதல் ஆவணங்களை, ஆக., 26ல் தாக்கல் செய்ய வேண்டும்' என்றது.

No comments:

Post a Comment

T.N. orders merging of govt. data centre and pension directorate with treasuries dept.

T.N. orders merging of govt. data centre and pension directorate with treasuries dept. The Hindu Bureau CHENNAI 17.11.2024  The Tamil Nadu g...