'பல்கலை தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்ய அரசு பரிசீலனை'
Added : மார் 14, 2020 23:13
சென்னை: ''பல்கலைகளில் உள்ள தற்காலிக பணியாளர்களை, பணிநிரந்தரம் செய்வது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - பொன்முடி: அண்ணாமலை பல்கலையில், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை, அரசு ஊழியர்களாக மாற்றுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை தொடர்ந்து, அங்கேயே பணியாற்ற, அனுமதி வழங்க வேண்டும்.உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்: அண்ணாமலை பல்கலையை, 2013ல் அரசு ஏற்றது. அங்கு, 12 ஆயிரத்து, 500 பேர் பணிபுரிந்து வந்தனர்.
அங்கு, 6,000 பேர் போதும். இதனால், மீதமுள்ள, 6,000 பேர் பாதிக்கப்படக்கூடாது என்பதால், அவர்களுக்கு மற்ற அரசு கல்லுாரிகளில், பணி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள், 127 பேர் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என, கோரியுள்ளனர். அரசின், 13 பல்கலைகளிலும், இந்த கோரிக்கை உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க, அரசு பரிசீலித்து வருகிறது.
No comments:
Post a Comment