Sunday, March 15, 2020

பெற்றோரை பராமரிக்காத மகன் வீட்டை ஒப்படைக்க உத்தரவு

Added : மார் 14, 2020 22:43

ஸ்ரீவில்லிபுத்துார்: பெற்றோரை பராமரிக்காமல் சண்டையிட்ட மகன் தனது வீட்டை காலி செய்து தந்தையிடம் ஒப்படைக்க சிவகாசி சப்கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் முத்து. இவர் மனைவியுடன் தனது வீட்டில் வசித்து வருகிறார். மகன் கருப்பையா மற்றும் குடும்பத்தினர் வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர். இவர் பெற்றோரை பராமரிக்காமல் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார்.இதை தொடர்ந்து மகன் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை தங்களிடம் ஒப்படைக்க கோரி சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமாரிடம் முத்து மனு அளித்தார்.விசாரணை நடத்திய சப்கலெக்டர் ஒரு மாத காலத்திற்குள் வீட்டை காலி செய்து முத்துவிடம் ஒப்படைக்க மகன் கருப்பையாவிற்கு உத்திரவிட்டார்.

No comments:

Post a Comment

Pongal exodus begins; over 12L to leave city

Pongal exodus begins; over 12L to leave city  Staggered Travel Plans To Reduce Jams  Ram.Sundaram@timesofindia.com  11.01.2025 Chennai : The...