Sunday, March 15, 2020

மாநகராட்சி பணியில் அசத்தும் கோவை எம்.பி.ஏ.,பட்டதாரி

Updated : மார் 14, 2020 06:51 | Added : மார் 14, 2020 06:49 |

கோவை: கோவையில் எம்.பி.ஏ., படித்துவிட்டு எம்.என்.சி நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய கோவை பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்து வியப்பளிக்கிறார்.





கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது, தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எம்.பி.ஏ., பட்டாதாரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
நேர்காணல் நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமீபத்தில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் பணி நியமனம் பெற்ற பட்டதாரிகளில் எம்.பி.ஏ., படித்த சையத் முக்தார் அகமது என்பவரும் ஒருவர். கோவையை சேர்ந்த இவர் ஐதாராபாத்தில் எம்.என்,சி நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். அந்த பணியை உதறிவிட்டு துப்புரவு பணியை கையில் எடுத்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றி வருகிறார்.




அரசு வேலையில் பணி நிரந்தரம், பாதுகாப்பு இருப்பதால், ரூ.35 ஆயிரம் மாத சம்பளம் பெற்ற, தனியார் நிறுவன வேலையை உதறிவிட்டு, ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளதாகவும்,எந்த பணியும் இழிவானது இல்லை எனவும், இது டாக்டர் சேவை பணிக்கும் மேலானது என்ற மன நிறைவுடன் பணிபுரிவதாக கூறும் சையத் முக்தார் அகமதுவை நாமும் பாராட்டுவோம்.

No comments:

Post a Comment

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High Court

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High ...