Sunday, March 15, 2020

அச்சம் என்பது மடமையடா... கைகள் கழுவுவது கடமையடா.
..
Added : மார் 14, 2020 22:19

இந்தியர்களுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், 'கொரோனா'வை கண்டு அஞ்ச தேவையில்லை.

'வைரஸ்' பாதிக்காதவர்களுக்கு முகக்கவசம் அவசியமில்லை. கைகளை நன்றாக கழுவினாலே போதும். கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து, 'கோவிட் - 19' வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கிளம்பியது. இப்போது இந்தியா, இத்தாலி உட்பட உலக நாடுகளை மிரட்டுகிறது.

இந்த வைரசை விட ஆயிரம் மடங்கு வேகமாக, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுகின்றன. மக்கள் அச்சத்தில் உறைந்துஉள்ளனர். இறப்பு குறைவுஉண்மையில், கொரோனாவால் உயிரிழப்பு குறைவு. வூஹானில் இறப்பு சதவீதம், 5.6 என்றால், ஒட்டுமொத்த சீனாவில், 0.7 சதவீதம் தான். 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.அதேபோல, 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பெரிய பாதிப்பு இல்லை. 80 வயதை கடந்து சர்க்கரை, இதய பாதிப்பு, கேன்சர், மூச்சுப் பிரச்னை உள்ளவர்களை தான் அதிகம் தாக்குகிறது. தற்போது, மருந்து கள் இல்லாததால், முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் எளிதில் தப்பலாம்.

காக்குமா கவசம்?

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணம்அடைந்து வருவதால், பதற்றப்பட வேண்டாம். கள்ள சந்தையில், ஆறு மடங்கு விலை கொடுத்து, 'மாஸ்க்' வாங்க வேண்டாம். முகக்கவசம் உங்களை முழுமையாக பாதுகாக்காது.ஏனெனில் காற்று மூலம், கொரோனா பரவாது. பாதிக்கப்பட்டவர், தும்மும் போது தெறிக்கும் நீர்த்துளிகள் மூலமே பரவும். யாராவது உங்களது முகத்திற்கு நேராக தும்மினால் அல்லது இருமினால் மட்டுமே கவசம் பாதுகாக்கும்.நீங்கள், 'மாஸ்க்' அணிந்திருந்தால், அதை சரி செய்வதற்கு அடிக்கடி கையால் முகத்தை தொடுவீர்கள். ஒவ்வொரு முறையும் கைகளை கழுவி இருக்க மாட்டீர்கள்.ஒருவேளை, வைரஸ் பரவி இருக்கும் மேஜை, நாற்காலியை தொட்ட பின், மாஸ்கை சரி செய்யும் போது, உங்களது அசுத்தமான கைகள் முகத்தில் படும். அப்போது கண், மூக்கு, வாய் வழியாக வைரஸ் உடலில் செல்லும். எனவே, வைரஸ் உங்களை பாதித்திருக்கும் என்று உணர்ந்தால் மட்டும் மாஸ்க் அணியுங்கள்.

இதன் மூலம் மற்றவர்களுக்கு, வைரஸ் பரவாமல் தடுக்கலாம்.பலமான இந்தியாஉலகில் இந்தியர்களுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அசுத்தமான சூழலில், மாசுபட்ட பகுதியில் வாழ்ந்து பழகியவர்கள். இதனால், வளர்ந்த நாடுகளின் மக்களைவிட நமக்கு எதிர்ப்பு சக்தி கூடுதல். 2003ல், 'சார்ஸ்' வைரஸ், 29 நாடுகளில் பரவியதில், ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.அப்போது இந்தியாவில் வெறும், மூன்று பேரே பாதிக்கப்பட்டனர்.

அவர்களும் விரைவாக குணம்அடைந்தனர். கடந்த, 2012ல் மத்திய கிழக்கு நாடுகளை தாக்கிய, 'மெர்ஸ்' வைரஸ், இந்தியா பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை. அமெரிக்காவில், 2010 - 11 முதல், 2018 - 19 வரை புளூ காய்ச்சலால், ஆண்டுக்கு, 37 ஆயிரத்து, 444 பேர் என்ற விகிதத்தில், 3 லட்சத்து, 37 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். இதுவே, இந்தியா வில் புளூ காய்ச்சலுக்கு, 2010 - 19 கால கட்டத்தில், 11 ஆயிரத்து 30 பேர் மட்டுமே மரணம் அடைந்தனர்.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக மக்கள் இருந்த போதும், நமது இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. நாம் எதையும் தாங்கும் பலமான உடல் அமைப்பை பெற்றவர்கள்.தேவையில்லாமல் பீதியடையாதீர்கள். அவசியமில்லாமல் மாஸ்க் வாங்கி பணத்தை வீணாக்காதீர். சாப்பிடுவதற்கு முன் கை கழுவும் பழக்கம் நமக்கு உண்டு. இனி அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவோம். எதற்கும் அஞ்சாமல் அன்றாட வாழ்க்கையை தொடருவோம்.

No comments:

Post a Comment

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High Court

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High ...