ஊரடங்கின்போதும் செயல்படும் அஞ்சல் அலுவலகங்கள்
கடிதங்களை அனுப்பவும், பணம் எடுக்கவும் அஞ்சல் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள்.
இந்தியாவில் 1.52 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இந்திய அஞ்சல் துறை ஊடரங்கு நேரத் திலும் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, கிராமங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல் படுவதால், குறிப்பிட்ட சேவைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
மதுரை தலைமை அஞ்சல் அலு வலகத்துக்கு வரும் பொதுமக்கள், வாசலில் வைக்கப்பட்டுள்ள சோப்புத் தண்ணீரில் கைகளை கழுவிவிட்டு, முகக்கவசத்துடன் வருமாறு வாயிற்காவலர் அறி வுறுத்துகிறார்.
உள்ளே பதிவுத் தபால், மணி ஆர்டர், அஞ்சலகச் சேமிப்புப் பிரிவு ஆகியவை வழக்கம்போல் செயல்படுகின்றன. அதேபோல தபால்களைப் பிரிக்கிற பணியும், உள்ளூர் முகவரிகளுக்கு விநி யோகம் செய்யும் பணியும் நடை பெறுகின்றன.
இதற்கான தபால்காரர்கள் காலை 7.30 மணிக்கே பணிக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், அஞ்சல் அலுவலகச் சேவையா னது காலை 9.30 மணி முதல் 12 மணி வரை மட்டுமே நடை பெறுகிறது. பிறகு நுழைவு வாயிலை அடைத்துவிடுவதால், உள்வேலைகள் மட்டுமே நடை பெறுகின்றன.
இது குறித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (சி பிரிவு) கோட்டச் செயலாளர் நாராயணன் கூறியதாவது:
தனியார் துறைகள் மக்களை கைவிட்டதுபோல் பொதுத்துறை நிறுவனமும் கைவிடக்கூடாது என் பதாலேயே, இந்த நேரத்திலும் நாங்கள் வேலை பார்க்கிறோம்.
வாகனங்கள் செல்லாததால் வெளியூர் தபால்கள் அனைத்தும் அலுவலகத்தில் தான் இருக் கின்றன. அரசு அலுவலகங்கள், உள்ளூர் முகவரிக்கான கடிதங்கள், மணியார்டர்கள் ஆகியவற்றை எவ்வளவு விரைவாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைந்து கொடுக்கிறோம்.
அஞ்சல் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வருபவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பென்ஷன் தொகை போன்றவற்றையும் வழங் குகிறோம்.
எங்களுக்குப் பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்படவில்லை. எனவே மிகமிக அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே பொது மக்கள் அஞ்சலகம் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment