கனடாவில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று
Updated : ஜூன் 17, 2020 23:04 | Added : ஜூன் 17, 2020 23:01
ஒட்டாவா : கனடாவில் கொரோனா தொற்று அதிகரித்து மேலும் 320 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவில் கொரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நோய் பாதிப்புகள் அதிகரித்து, நேற்று, ஒரே நாளில் 320 பேர் பாதிக்கப்பட்டனர். 38 பேர் பலியாகினர். கொரோனா தொற்றுக்குபாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99,467 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கனடாவில் இதுவரை 8,213 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 61,443 பேர் குணமடைந்துள்ளனர்.
கனடாவின் மொத்த பாதிப்புகளில், பாதியளவு கியூபெக் மாகாணத்தில் பதிவாகிறது. அதன்படி, கியூபெக்கில், புதிதாக 92 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக 54,146 பேர் பாதிக்கப்பட்டும், 5,269 பேர் பலியாகியும் உள்ளனர். ஆனால் 22,350 பேர் மட்டும் குணமடைந்து உள்ளனர். அதற்கடுத்ததாக, ஒன்ராறியோவில், புதிதாக 184 பேர் பாதிக்கப்பட்டதுடன், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 32,744 ஆக உயர்ந்தது. ஒன்ராறியோவில் 2,550 பேர் பலியாகினர். 27,784 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் அல்பெர்ட்டாவில் 29 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment