தனியார் பஸ்கள் ஓடத் துவங்கின
Added : செப் 15, 2020 23:00
சென்னை:தமிழகத்தில் நேற்று முதல், தனியார் பஸ்கள் இயக்கம் துவங்கி உள்ளது. தமிழகத்தில், இம்மாதம் முதல், மாவட்டத்திற்கு உள்ளான பஸ் போக்குவரத்துக்கும், செப்., 7 முதல், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கும், தமிழக அரசு அனுமதி அளித்தது.
ஆனால், பஸ்சின் மொத்த இருக்கைகளையும்நிரப்ப, அனுமதிக்க வேண்டும்; பஸ்கள் இயங்காத நாட்களுக்கு வரி வசூலிப்பதை, ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு ஏற்றால் மட்டுமே, தனியார் பஸ்களை இயக்குவதாக, தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம், தனியார்பஸ் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 'பஸ்களை இயக்காத நாட்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், 'ஸ்டாப்பேஜ்' என்ற படிவத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு, இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்துவதில் அவகாசம் நீட்டிக்கப்பட உள்ளது. 'அதற்கான நடவடிக்கைகளை, அனைத்து பஸ் உரிமையாளர்களும் செய்ய வேண்டும். பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், பஸ்களை இயக்க வேண்டும்' என, முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து, திருச்சி மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில், நேற்று குறைந்தளவு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று, தமிழகம் முழுதும், தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment