பாஸ்போர்ட் விண்ணப்பதாரரிடம் காணொலி வாயிலாக விசாரணை
Added : டிச 11, 2020 23:12
சென்னை:சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தோருக்கு, காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவல் நிலையை கட்டுப்படுத்தும் வகையில், கூட்ட நெரிசலை குறைத்து, நிலுவையில் உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிக்க, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்படுகிறது.
இதன்படி, 'ஸ்கைப், கூகுள் டியோ' வழியாக, நவ., 23ல் இருந்து, வேலை நாட்களில், காலை, 10:00 முதல், பகல், 12:30 மணி வரை, இந்த காணொலி விசாரணை நடக்கிறது.'ஸ்கைப்'பில், 'Rpo chennai என்ற, 'லிங்க்' வழியே, live:.cid.1a27fe4d2074be7a என்ற இணைப்பிலும்; கூகுள் டியோவில், rpochennaipublic@@gmail.com என்ற இணைப்பு வழியாகவும் விசாரணைக்கு இணையலாம். விண்ணப்பதாரர்கள் மட்டுமே, காணொலி அழைப்பில் பங்கேற்க முடியும்.
மேலும் விபரங்களுக்கு, 1800 258 1800 என்ற, இலவச தொலைபேசி எண்ணில் பேசலாம்; rpo.chennai@mea.gov.in என்ற, மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment