Saturday, December 12, 2020

பொங்கல் பஸ் முன்பதிவுக்கு கூடுதல் இணையதளங்கள்


பொங்கல் பஸ் முன்பதிவுக்கு கூடுதல் இணையதளங்கள்

Added : டிச 11, 2020 23:14

சென்னை:பொங்கல் பஸ் டிக்கெட்முன்பதிவுக்கு,
 கூடுதல்இணையதளங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து, தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:அடுத்த மாதம், 14, 15, 16ம் தேதிகளில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.ஏற்கனவே, அரசு போக்குவரத்து கழக இணையதளமான, www.tnstc.in மற்றும் tnstc என்ற, மொபைல் போன் செயலி வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போது, தனியார் டிக்கெட் முன்பதிவு இணையதளங்களான, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்றவற்றிலும், டிக்கெட் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் உட்பட, அனைத்து மாவட்ட விரைவு போக்குவரத்து கழக அலுவலகங்களில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024