சென்னை -- மதுரை தேஜஸ் ரயில் 4ம் தேதியில் இருந்து ரத்து
Updated : டிச 25, 2020 22:44
சென்னை:பயணியர் வருகை குறைவால், சென்னை -- மதுரை தேஜஸ் ரயில், வரும், 4ம் தேதியில் இருந்து, ரத்து செய்யப்படுகிறது.
சென்னை -- மதுரை இடையே, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட்ட தேஜஸ் ரயில், கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தளர்வுக்கு பின், அக்., 2ல் இருந்து, மீண்டும் இயக்கப்பட்டது.இந்த ரயில், எழும்பூரில் இருந்து காலை, 6:00 மணிக்கு புறப்படுவதால், பயணியர் அதிகம் வர முடியவில்லை. நேரம் மாற்றம் செய்ய வேண்டும் என, பயணியர் வலியுறுத்தினர்.
இதனால், அக்., 12ல் இருந்து, நேரம் மாற்றப்பட்டு, எழும்பூரில் இருந்து காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல், 12:50 மணிக்கு சென்றடைந்தது. மதுரையில் இருந்து, மாலை, 3:15 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. இந்நிலையிலும், இந்த ரயிலில் பயணியர் வருகை குறைந்ததால், இருவழியிலும், ஜன., 4 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment