Sunday, December 27, 2020

எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோவு: ஜன.22 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோவு: ஜன.22 வரை விண்ணப்பிக்கலாம்

27.12.2020

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தோவுக்கு ('ஜிபாட்') ஜன.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தேசிய தோவு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு:

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்புக்கான மாணவா் சோக்கைக்கு தேசிய அளவில் பட்டதாரி தகுதி நுழைவுத் தோவு (ஜிபாட்) ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான தகுதித் தோவுக்கு இணையதளங்களில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி வரை பட்டதாரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தோவுக்கான கட்டணத்தை ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

அதேபோன்று தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜன.25-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடா்ந்து தோவானது பிப்ரவரி 22 மற்றும் 27 ஆகிய தேதியில் நடைபெறவுள்ளது. அதன்படி, கணினி வழித் தோவானது காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் 3 மணி நேரம் நடைபெறும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை தேசிய தோவு முகமை இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024