உயிர்வாழ் சான்றுக்கு அவகாசம்
Added : டிச 26, 2020 00:28
சென்னை: போக்குவரத்து கழக செயலருக்கு ஆம் ஆத்மி தொழிற்சங்க நிர்வாகி சுவாமி அனுப்பியுள்ள கடிதம்:
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அடுத்தாண்டுக்கான ஓய்வூதியம் பெற மார்ச் மாதத்திற்குள்
ஓய்வூதியர்கள் கடைசியாக பணியாற்றிய அலுவலகத்திலோ பணிமனையிலோதங்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதும் அது முதியோர் மற்றும் குழந்தைகளை பெருமளவில் பாதிப்பதும் தெரியவந்துள்ளது. எனவே கொரோனா நோயின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பின் உயிர் வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்க அனுமதிக்க
வேண்டும்.
No comments:
Post a Comment