Saturday, December 19, 2020

நிர்வாக ஒதுக்கீடு:இன்று முதல் கவுன்சிலிங்



நிர்வாக ஒதுக்கீடு:இன்று முதல் கவுன்சிலிங்

Added : டிச 18, 2020 23:38

சென்னை:சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவக் படிப்புகளில், 2020 -21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, நேரு விளையாட்டரங்கில் நடந்து வருகிறது. அரசு ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.இதையடுத்து, ஈரோடு, பெருந்துறை, ஐ.ஆர்.டி., மருத்துவக் கல்லுாரிகளில், போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கான இடங்கள்; வேலுார் சி.எம்சி., கல்லுாரியில், சிறுபான்மையினர் இடங்களுக்கான கவுன்சிலிங் முடிந்துள்ளது.

இந்நிலையில், சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 952 எம்.பி.பி.எஸ்., மற்றும் 695 பி.டி.எஸ்., பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், இன்று முதல், 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.நாளை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024