தமிழ்நாடு
'நீட்' தேர்வு தில்லுமுல்லு: மாணவி, டாக்டரை கைது செய்ய முடிவு
Added : டிச 19, 2020 02:08
சென்னை:'நீட்' தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து, மருத்துவ கல்லுாரியில் சேர முயன்ற வழக்கில், மாணவி மற்றும் அவரது தந்தையான பல் டாக்டரை கைது செய்ய, போலீசார் முடிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் பாலசந்திரன். இவரது மகள் தீக் ஷா, 18. இவர், சென்னை, நேரு விளையாட்டு அரங்கில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றார். தந்தையுடன் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்த மாணவி தீக் ஷா அளித்த, நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலி என, தெரியவந்தது.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலசந்திரன், தீக் ஷா ஆகியோர் மீது மோசடி உள்பட, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, இரண்டு முறை, 'சம்மன்' அனுப்பியும் வரவில்லை.அதனால், இருவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment