வீட்டிற்குள்ளும் முக கவசம் அணிவது அவசியம்'
Updated : ஏப் 24, 2021 06:20
சென்னை :''கொரோனா தொற்று அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில் இனி வீட்டிற்கு உள்ளேயும் முக கவசம் அணிந்தாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது'' என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறினார்.
அவர் கூறியதாவது:கொரோனா தொற்று இதுவரை இல்லாத வகையில் உச்சத்துக்கு சென்றுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஒருவருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு எங்கிருந்து தொற்று பரவியது என்பதை கண்டறிவது கடினமாக இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் எவரெவர் என்பதை தேட வேண்டிய நிலை இருந்தது.தற்போதோ குடும்பம் குடும்பமாக கொரோனா பாதிப்பு கண்டறியப் படுகிறது.
கணவருக்கு கொரோனா இருந்தால் அதற்கு அடுத்த சில நாட்களில்மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அறி குறிகள் தென் படுகின்றன.அவர்கள் அனைவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படுவதற்குள்ஏறத்தாழ 25 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. அதன்பின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய அவசியம்எழுகிறது. இதற்கு முக்கிய காரணம் குடும்பஉறுப்பினர்கள் ஒரே அறைக்குள் பல மணி நேரம் அருகருகே இருப்பது தான்.
அதேபோல கோடை காலத்தில் மூடப்பட்ட அறைக்குள் ஏ.சி. சாதனங்களை நீண்ட நேரம் இயக்குவதும் தொற்றுபரவுதலுக்கு வழிவகுக்கிறது.நாள்தோறும் வெளியே பணிக்கு சென்று வரும் குடும்ப உறுப்பினர்பிற உறுப்பினர்கள், குழந்தைகளிடம் இருந்து சற்று விலகி இருப்பதன் வாயிலாக நோய் தொற்று பரவலை தடுக்கலாம்.
அதேபோல அவர் தனியே தூங்குவதும், தூங்கும் நேரம் தவிர பிற நேரங்களில் வீட்டிற்கு உள்ளேயும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. சில காலத்துக்கு இத்தகைய கஷ்டங்களை சகித்து கொண்டால் கொரோனாவை வெல்ல முடியும். நம் குடும்பத்தின் நலனையும் காக்கமுடியும்.இவ்வாறு சுதா சேஷய்யன் கூறினார்.
No comments:
Post a Comment