Sunday, April 11, 2021

பட்டா மாறுதல் மனுக்களை நிராகரிக்க அதிகாரிகள் புது வழி

பட்டா மாறுதல் மனுக்களை நிராகரிக்க அதிகாரிகள் புது வழி

Added : ஏப் 10, 2021 20:45

சென்னை:'வேறு பெயரில் பட்டா உள்ளது' என்ற காரணத்தை கூறி, பட்டா மாறுதல் விண்ணப்பங்களை, வருவாய் துறையினர் நிராகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் சொத்து வாங்குவோர், பத்திரப்பதிவுக்கு பின், பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். 'இ - சேவை' இவ்வாறு விண்ணப்பிப்பவர்களை அலைக்கழிப்பதையே, வருவாய் துறையினர் வழக்கமாக வைத்துள்ளனர்.'இ - சேவை' மையங்கள் வாயிலாக, பட்டா பெயர் மாறுதலுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு செல்லும். இந்த சமயத்தில், தரகர் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ, சம்பந்தப்பட்ட அலுவலரை அணுகி உரிய முறையில், 'கவனித்தால்' மட்டுமே, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், அடுத்த கட்டத்துக்கு செல்லும். தவறினால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இந்நிலையில், பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்க, புதிய வழியை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன்படி, 'வேறு பெயரில் பட்டா உள்ளது என்பதால், இந்த விண்ணப்பத்தை நிராகரிக்கிறோம்' என்று, பதில் அனுப்பப்படுகிறது.இது குறித்து, பாதிக்கப் பட்ட மக்கள் கூறியதாவது:பட்டாவில் வேறு பெயர் இருக்கிறது என்றால், அதை எப்படி புரிந்து கொள்வது என்று, தெரியவில்லை. சொத்தை கடைசியாக விற்றவர் பெயரில் பட்டா இருக்கும்.

குளறுபடி

சில சமயங்களில், சொத்தை விற்றவருக்கு முந்தைய உரிமையாளர் பெயரில் பட்டா இருக்கும். இவ்வாறு இருந்தால், அதற்கான கூடுதல் ஆவணங்களை கேட்க வேண்டும்.சொத்துக்கு தொடர்பில்லாத நபரின் பெயரில், பட்டா இருக்கிறது என்றால், அது யாருடைய தவறு என்பது, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? அரசு தலையிட்டு, இது போன்ற குளறுபடிகளை தீர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024