அனுப்புனர் முகவரி வேண்டாம் அஞ்சல் துறை அறிவுறுத்தல்
Added : ஏப் 10, 2021 22:33
சென்னை:'மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பப்படும் தபால்களில், அனுப்புனரின் பெயர், முகவரியை எழுத கட்டாயப்படுத்த வேண்டாம்' என, தபால் பதிவு ஊழியர்களுக்கு, அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.
'பொதுநலன் சார்ந்த புகார்' என்று கடித உறையின் மேல் தலைப்பிட்டு அனுப்பப்படும் தபால் களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை, அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 'மத்திய, தலைமை ஊழல் கண்காணிப்பு கமிஷனருக்கு அனுப்பப்படும் புகார் தொடர்பான பதிவு அல்லது விரைவு தபால்களை, அனுப்புனரின் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியின்றி பதிவு செய்யலாம்.
'இந்த புகார் தபால்களை பதிவு செய்யும்போது, அனுப்புனரின் தகவல்களை கட்டாயமாக எழுத, ஊழியர்கள் நிர்ப்பந்திக்க வேண்டாம். தபால்களை, சாப்ட்வேரில் பதிவு செய்யும் போது, அனுப்புனரின் பெயர், முகவரிக்கான பகுதியில், பொதுநலன் சார்ந்த தகவல் உள்ள தபால் என்பதை, பி.ஐ.டி.பி.ஐ., என, பதிவிட வேண்டும்' என, அஞ்சல் துறை அறிவுறுத்திஉள்ளது.
No comments:
Post a Comment