தன்னுடைய இடமாற்றத்திற்கு தானே கையெழுத்திட்ட ராஜீவ் ரஞ்சன்
Updated : மே 08, 2021 02:23 | Added : மே 08, 2021 02:22
சென்னை : தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக வெ. இறையன்பு நியமனத்தையொட்டி, பணியிடமாற்றம் செய்யப்பட்ட ராஜீவ் ரஞ்சன், தன்னுடைய இடமாற்றத்திற்கான உத்தரவில் தானே கையெழுத்திட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (மே.,7) தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்களுக்கும் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமனம் செய்யப்பட்டார்.
அரசு விதிமுறைப்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தலைமை செயலாளர் தான் மாற்ற முடியும். எனவே புதிய தலைமை செயலாளருக்கான உத்தரவில் ராஜீவ் ரஞ்சன் கையெழுத்திட்டார்.
புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட வெ. இறையன்பு ( ஐ.ஏ.எஸ்.) முன்னதாக, நாகப்பட்டினத்தில் சப் கலெக்டராகவும், காஞ்சிபுரத்தில் மாவட்ட கலெக்டராகவும், கடலூரில் இணை ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் இயக்குநராகவும், முதல்வரின் செயலர், செய்தி மற்றும் சுற்றுலாத்துறையின் செயலராகவும், சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறையில் தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநர் அண்ணா மேலாண்மை நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தொடர்ந்து, தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான பணி நியமன உத்தரவில் விதிமுறைகளின்படி, அவரே கையெழுத்திட்டுள்ளார். அவரது பெயரில் தான் பணி நியமனத்திற்கான ஆர்டரும் வந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment