பாரத தரிசன ரயில் மூலம் மதுரையிலிருந்து வட மாநிலங்கள், ஆந்திரத்துக்கு சுற்றுலா செல்ல ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஆகியவை இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை மே 13 முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு ரயில் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்பட 200-க்கும் அதிகமான சுற்றுலாக்களில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுடன் இப்பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வட மாநிலங்கள்: இந்தப் பயண திட்டத்தின் படி, மதுரையிலிருந்து பாரத தரிசன ரயில் ஜூன் 15 அன்று புறப்பட்டு கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக ஜெய்பூர், தில்லி, மதுரா, ஆக்ரா, காசி, கயா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் நபர் ஒருவருக்கு ரூ 9 ஆயிரத்து 940 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரம்: மதுரையிலிருந்து ஜூன் 30 ஆம் தேதி புறப்பட்டு கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக நந்தியாலில் உள்ள மகாநந்தி, யாதகிரிகுட்டாவிலுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி, புஞ்சுகுட்டாவில் உள்ள சாய்பாபா, பத்ராசலத்திலுள்ள ஸ்ரீ ராமர், விஜயவாடாவிலுள்ள கனக துர்கா, அன்னாவரத்திலுள்ள சத்ய நாராயண சுவாமி, சிம்மாச்சலத்திலுள்ள நாராயண சுவாமி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு ரூ 5 ஆயிரத்து 800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வசதிகள்: இந்த சுற்றுலாவுக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் அரங்கம், சுற்றி பார்ப்பதற்கான வாகனம் ஆகிய வசதிகள் அடங்கும். மேலும், உடைமைகள் பாதுகாப்பு வசதி, இசை, அறிவிப்புகளுக்கேற்க ஒலி பெருக்கி வசதி, ஒவ்வொரு ரயில்பெட்டிகளுக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், துப்புரவாளர்கள் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி, எல்எஃப்சி உள்ளிட்ட வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
முன்பதிவுக்கு!
இந்தச் சுற்றுலாவுக்கு கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
சென்னை சென்ட்ரல் : 044-64594959,
ரயில் நிலையம் 9003140681,9003140718
காட்பாடி ரயில் நிலையம் : 9840948484
மதுரை ரயில் நிலையம் : 0452-2345757, 9003140714
கோவை ரயில் நிலையம் : 9003140680
இணையதள முகவரி :www.irctctourism.com