Friday, May 15, 2015

அவதி: சிவகங்கையில் ஸ்கேன் இன்றி நோயாளிகள்... மனித உயிர்களுடன் விளையாடும் நிர்வாகம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் உள், வெளி நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். விபத்து, அடிதடி, வயிறு கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகளில் சிக்குவோருக்கு தேவையான துரித சிகிச்சை இங்கு கிடைப்பதில்லை. காரணம் பாதிப்பை உடனே கண்டறிய உதவும் எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் வசதியில்லை. சி.டி., எடுக்க நேரு பஜாரிலுள்ள பழைய மருத்துவமனை வளாகத்திற்கு அனுப்புகின்றனர். இதற்கு தயங்குவோரை மதுரைக்கு அனுப்புகின்றனர். போகும் வழியில் ஒரு சிலர் ஆபத்தை சந்திக்கின்றனர். இவற்றை தடுக்க, தற்போது எக்ஸ்ரே பிரிவு செயல்படும் இடத்தில் எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் வசதியை ஏற்படுத்திட கட்டடம் சீரமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கையை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சென்னை மருத்துவ இயக்குனரகத்திற்கு அனுப்பியது.

ஓராண்டுக்கு மேலாகியும் கிடப்பில் உள்ளது. இதனால் நோயாளிகள் தொடர்ந்து பாதிக்கப் படுகின்றனர். மருத்துவக் கல்லூரி யில் டாக்டர்களால் பரிந்துரைக்கப் படும் நோயாளிகள் பழைய மருத்துவமனைக்கு சென்று, சி.டி., எடுத்து வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. உடனடி சிகிச்சை, ஆபத்தை தடுக்க, மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் எம்.ஆர்.ஐ., சி.டி., வசதியை ஏற்படுத்த வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுகின்றனர். மருத்துவ நிர்வாகம் கூறுகையில், ஒரே வளாகத்தில் இரண்டையும் ஏற்படுத்துவதற்கான கட்டட வசதியை ஏற்பாடு செய்து, அதற்கான அறிக்கையை தமிழ்நாடு மருத்துவக் கழக கார்ப்பரேஷனுக்கு அனுப்பி யுள்ளோம். அவர்கள் ஸ்கேன் இயந்திரங்களை வாங்கி ஒப்படைக்க வேண்டும். பழைய மருத்துவமனை வளாகத்திலுள்ள பழைய சி.டி., ஸ்கேன் மெஷினை இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...