Friday, May 15, 2015

இன்ஜி., கவுன்சிலிங்கில் சாதிக்க மதுரையில் இன்று தினமலர் நிகழ்ச்சி

மதுரை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலை நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்று பயனுள்ள படிப்புகளை தேர்வு செய்வதற்கு ஆலோசனை வழங்கும் தினமலர் நாளிதழின் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி மதுரையில் இன்று (மே 15) நடக்கிறது. பசுமலை மன்னர் கல்லுாரியில் மாலை 4 மணிக்கு நடக்கும் இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் சென்னை இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்குகிறது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜி., கல்லுாரி உடன் இணைந்து(பவர்டு பை) வழங்குகிறது. மாணவர்கள் அண்ணா பல்கலை நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்று எவ்வாறு சாதிக்கலாம் என்பது குறித்து அண்ணா பல்கலை நுழைவுத் தேர்வு மைய இயக்குனர் ராஜேந்திர பூபதி பேசுகிறார்.

மாணவர்களின் 'கட் ஆப்'

மதிப்பெண்ணிற்கு ஏற்ப பலன் தரும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி, தரமான கல்லுாரிகள் எவை, எந்த பாடப் பிரிவுகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன உட்பட பல்வேறு ஆலோசனைகளை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி வழங்குகிறார். கவுன்சிலிங் தொடர்பாக மாணவர்களின் அனைத்து கேள்விக்கும் நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்படும். சிறந்த ஐந்து கேள்விகள் கேட்கும் மாணவர்களுக்கு 'பென்டிரைவ்'கள் பரிசளிக்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் 50 மாணவர்களுக்கு இலவச இன்ஜி., படிப்புக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். 1000 மாணவர்கள் இலவச ரோபோட்டிக் வொர்க்ஷாப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்களுக்கு 'உங்களால் முடியும்' புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். அனுமதி இலவசம். பயன்தரும் உயர் கல்வியை தேர்வுசெய்ய வாருங்கள் மாணவர்களே! பங்கேற்று பயனடையுங்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024