Saturday, May 16, 2015

2 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, இறுதி அனுமதி கிடைத்துள்ளது. கூடுதல் இடங்கள் கிடைத்த நான்கு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. விழுப்புரம், திருவாரூர் மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யின் இறுதி அனுமதி சமீபத்தில் கிடைத்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகள் உட்பட, ஒன்பது கல்லூரிகளில், அவ்வப்போது, கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெறப்பட்டன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டும். இதில், சேலம், தூத்துக்குடி, திருச்சி, செங்கல்பட்டு மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., அனுமதி கிடைத்து விட்டது. சென்னை, திருவண்ணாமலை, சிவகங்கை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கனவே பெறப்பட்ட கூடுதல் இடங்களில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க, எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தி, அறிக்கையை சமர்ப்பித்தாலும், இன்னும் முறையான அனுமதி கிடைக்கவில்லை. எம்.பி.பி.எஸ்., 'கவுன்சிலிங்' அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்குள் அனுமதி கிடைக்குமா என்ற, கேள்வி எழுகிறது. இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எந்த சிக்கலும் இன்றி, ஏற்கனவே அனுமதித்த கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும். சில நாட்களில், இதற்கான அனுமதி கிடைத்து விடும்' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...