Sunday, May 17, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: அதிரும் வழக்கும்.. நீதிமன்றத்தில் வாதாடிய சட்டப்புள்ளிகளும்


கடந்த1995-ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதிபெற்று ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதாக அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அந்த அதிர்ச்சியின் அலைகள் 20 ஆண்டுகள் கடந்தும் இந்திய அரசியலில் அதிர்ந்துக் கொண்டிருக்கிறது.

இந்த வழக்குக்கு வலு சேர்க்க‌ தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிய ஆவணங்கள், திரட்டிய ஆதாரங்கள், சமர்ப்பித்த விசாரணை அறிக்கைகள், இதை ஆட்சேபிக்க ஜெயலலிதா தரப்பு குவித்த ஆவணங்கள், அரசு தரப்பும், திமுக தரப்பும் சேர்த்த ஆவணங்களை எல்லாம் ஒரே இடத்தில் சேர்த்தால் கடல் போல காட்சியளிக்கும். இதில் சிக்கித் தவித்த ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசியை மீட்க இந்தியாவில் இருக்கும் எல்லா பெரிய வழக்கறிஞர்களும் வாதம் புரிந்தார்கள்.

சென்னை, கர்நாடக உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத் திலும் மேல்முறையீடு செய்த போது நாட்டின் மிக மூத்த நீதிபதி கள் எல்லாம் வரிசையாக விசாரித் தார்கள். இந்திய நீதித்துறை வரலாற்றில் இத்தனை பெரிய வழக்கறிஞர்களும், பெரிய நீதிபதிகளும் விசாரித்த‌ ஒரே வழக்கு அநேகமாக இதுவாக தான் இருக்கும் என்கிறார்கள் சட்டத்துறை வல்லுநர்கள்.

தாமாக முன்வந்த தத்து

2014-ம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற் காக பரப்பன அக்ரஹாராவுக்கு வந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நீதிபதி குன்ஹா நேராக சிறைக்கு அனுப்பு கிறார். சூட்டோடு சூடாக ஜாமீன் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா ஆணித்தரமான காரணங்களைச் சொல்லி தள்ளுபடி செய்கிறார்.

உடனே ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, அதனை விசாரிக்க பல மூத்த நீதிபதிகள் தயங்கினர். யாரும் விசாரிக்க முன்வரவில்லை என்பதால் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தானே விசாரிக்க முன்வந்தார். அக்டோபர் 18-ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை 65-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி, 2 மாதங்களுக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீட்டு வழக்கை முடிக்க வேண்டும். இதை விசாரிக்க சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டு, கர்நாடக உயர் நீதிமன்ற‌த்தில் சிறப்பு அமர்வும் அமைக்கப்படும் என படிப்படியாக வழிக்காட்டுதல்களை வழங்கினார். ஏராளமான வழிகாட்டுதல்களை வழங்கிய தத்து அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றியும் அப்போதே கூறியிருந்தால் பவானிசிங் பிரச் சினையே எழுந்திருக்காது. விசா ரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் காலக் கெடுவே விதிக்கப்பட்டிருக்காது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க காட்டிய வேகம், மேல்முறை யீட்டை முடிக்க காட்டிய சுறுசுறுப்பு, தீர்ப்பை வெளியிட தத்து காட்டிய விறுவிறுப்பு எல்லாமே இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

நம்பிக்கை பெற்ற நரிமன்

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலிதாவுக்கு ஜாமீன் வாங்கித் தருவதற்காக 92 வயதான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி 2 முறை வாதாடினார். 21 நாட்கள் ஆன பிறகும் திறக்கப்படாமல் இருந்த பரப்பன அக்ரஹாரா சிறை கதவுகளை திறந்தவர் ஃபாலி எஸ்.நரிமன்.'' நரிமன் எனது குரு என்பதற்காக ஜெயலலிதாவின் ஜாமீனை எதிர்க்கவில்லை' என்று சுப்பிரமணியன் சுவாமி அப்போது சொன்னார்.

காவிரி வழக்கில் தமிழக அரசுக்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பிலும் ஆஜரான 89 வயதான ஃபாலி எஸ்.நரிமன் தான் ஜெயலலிதாவின் தற் போதைய சட்ட ஆலோசகர். அவ ருடைய வழிகாட்டுதலின் பேரில் தான் ஜாமீன் காலத்தில் ஜெய லலிதா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. விடுதலைத் தீர்ப்பு சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த போதும், இன்னும் சில தினங் களில் ஜெயலலிதா கோட்டைக்கு போவதும்கூட இவரது ஆலோ சனையின் பேரில் தான்.

பவானிசிங்கை நீக்கக் கோரி திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது ஜெயலலிதா தரப்பில் களமிறங்கிய நரிமன் கடுமையாக வாதிட்டார். அந்த மனுவில் வெற்றி திமுக பக்கம் திரும்பினாலும், 'புதிய‌ அரசு வழக்கறிஞர் நியமித்தால், உடனே எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய வேண்டும்' என்று அழுத்தம் கொடுத்தது நரிமன் தான். இதன் அடிப்படையில் தான் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'அரசு தரப்பு ஒரே நாளில் 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.

நாட்டின் மிக முக்கிய குற்றவியல் வழக்கறிஞரான எல்.நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்றத்திலும், பல் வேறு மாநில உயர்நீதிமன்ற‌ங்களி லும் வாதாடியுள்ளவர். ஓரிரு தெலுங்கு படங்களில் தலைகாட்டி யுள்ளார். மூன்று முறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பொறுப்பை வகித்துள்ள எல்.நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக 9 நாட்கள் இறுதிவாதம் செய்தார். சுமார் 40 மணி நேரம் அடைமழைப் போல கொட்டித் தீர்த்த இவரது வாதத்தைக் கண்ட அனைவரும் மலைத்துப் போயினர்.

நீதிபதி குன்ஹா கட்டிட மதிப் பீட்டில் காட்டிய 20 சதவீத தள்ளுபடி, ஐதராபாத் திராட்சைத் தோட்ட வருமான‌த்தில் ஏற்றுக்கொண்ட தன்னிச்சையான வருமானம், சுதாகரனின் திருமணத்துக்கு பந்தல் போட்டதில் போட்ட கணக்கு, நகை மதிப்பீட்டில் சேதா ரத்தை கழித்தது என தனது தீர்ப்பில் தெரிவித்த, திருப்பங் களை ஏற்படுத்தும் நுணுக்கமான விஷயங்களை நாகேஸ்வர ராவ் மிகச் சரியாக கண்டுபிடித்தார். மார்பிள் விலை, மின்சார ஒயர் விலை என குன்ஹாவின் மதிப்பீடு களைப் பற்றி ஆராய்ந்தால் புதிய வழக்கே தொடுக்கலாம் என போட்டு உடைத்தார்.

ஜெயலலிதாவை விடுவித்த 919 பக்க தீர்ப்பில் நாகேஸ்வர ராவ் முன் வைத்த வாதத்தின் 90 சதவீத அம்சங்களை நீதிபதி குமாரசாமி அப்படியே எதிரொலித்து இருக் கிறார். பொது ஊழியர் வருமானத் துக்கு அதிகமாக சொத்துக்குவிப்ப தில் உள்ள விகிதாச்சாரம், கூட்டு சதியை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் , பினாமி சட்டத்துக்கு வலுச்சேர்க்க தேவையான நேரடி பண பரிவர்த்தனைகள் குறித்து நாகேஸ்வர ராவ் எழுப்பிய கேள்வி களை குமாரசாமி அப்படியே அரசு தரப்பு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.

ஜெயலலிதாவை விடுவிக்க காரணமாக இருந்த கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கு, (வருமான அதிகமான சொத்து மதிப்பு 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும்), பொது ஊழியரின் வருமானத்துக்கு அதிகமான சொத்து தொடர்பாக 1989-ல் ஆந்திர அரசு வெளியிட்ட சுற்ற றிக்கை (வருமானத்துக்கு அதிக மான சொத்து மதிப்பு 20 சதவீதம் வரை கூடுதலாக இருந்தால் அனு மதிக்கலாம்) ஆகியவற்றை குமாரசாமியின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் நாகேஸ்வர ராவ். அந்த வாதத்தை அடிப்படை யாக வைத்தே நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய் தார் என்பதால் ஜூனியர் வழக் கறிஞர்கள் மத்தியில் நாகேஸ்வர ராவ் 'ஹீரோ'வாக மாறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024