Thursday, May 14, 2015

மருத்துவக் கல்லூரி தொடங்க இனி செவிலியர் பள்ளி அமைப்பதும் கட்டாயம்: மத்திய அரசு பரிசீலனை



புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு இனி செவிலியர் பள்ளி அமைப்பதையும் கட்டாய மாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நாடு முழுவதும் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய சுகாதார அமைச் சகம் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச் சர் ஜே.பி.நட்டா தலைமையில் டெல்லியில் சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சமூகநலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெல் லோட் ஆகியோர் தத்தமது துறை களின் உயரதிகாரிகளுடன் கலந்து கொண்டனர். இதில் பேசிய மேனகா காந்தி, “நாட்டில் மருத்து வக் கல்லூரிகள் அதிகரித்து வருவது வரவேற்க கூடியது. அதேவேளையில், செவிலியர் பற்றாக்குறை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது” என்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், புதிய மருத்துவக் கல்லூரிகளுடன் செவிலியர் பயிற்சிப் பள்ளி தொடங்குவதை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த யோசனையை சுகா தாரத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஜெக்தீஷ் பிரசாத் எழுப்பி னார். இதை வரவேற்ற அமைச் சர் வெங்கய்ய நாயுடு, இதற் காக புதிய மருத்துவக் கல்லூரி கள் தொடங்குவதற்கான இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறை களில் திருத்தம் செய்யலாம் என ஆலோசனை கூறினார்” என்றனர்.

தனியார் மட்டுமின்றி அரசு சார்பில் தொடங்கப்பட இருக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த யோசனையை அமல்படுத்த திட்டமிடப்படுகிறது. இந்த யோசனை தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் புள்ளிவிவரப் படி, தற்போது நாடு முழுவதும் உள்ள 2,000 செவிலியர் பள்ளி களில் டிப்ளமா பயிற்சி அளிக்கப் படுகிறது. 1200 செவிலியர் கல்லூரிகளில் செவிலியர்க ளுக்கான பட்டப்படிப்பு அளிக்கப் படுகிறது. இவற்றை முடித்த வர்களுக்கு 281 கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு வசதி உள்ளது. இவற்றின் மூலம் ஆண்டுக்கு நாடு முழுவதிலும் சுமார் 60,000 செவிலியர்கள் உருவாகின்றனர். ஆனால் இதில் சுமார் 20 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு பணியாற்றச் சென்றுவிடுகின்றனர். இதுவே செவிலியர் பற்றாக் குறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024