Friday, June 3, 2016

குவைத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு

இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு பிஇ, பிடெக் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டதாரிகள், சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு பணிஅனுபவம் அவசியம். வயது 30-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.56 ஆயிரம்.
மேலும், சிவில் மேற்பார்வையாளர் பணிக்கு டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.30,200 வழங்கப்படும். பிளஸ் 2 அல்லது டிப்ளமா தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணிஅனுபவம் உள்ளவர்கள் பைபர் ஸ்பைலைசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 22 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.26,800.
டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் சிவில் ஆட்டோகாட் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,500. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு அனுபவத்துடன் குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் கனரக வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,750. மேலும், எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தொலைத்தொடர்புத்துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் லேபர் பணிக்கு தேவைப்படுகிறார்கள். சம்பளம் ரூ.15,600. கூடுதல் விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 3 ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், இலவச மருத்துவம், மருத்துவக் காப்பீடு, மிகைநேர பணி ஊதியம் (ஓ.டி) மற்றும் குவைத் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு உரிய தகுதி இருப்பின் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்ரும் ஒரு புகைப்படத்தை omcresum@gmail.com என்ற இ-மெயில் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 1, 2016

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது


THE HINDU TAMIL

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிற‌து. கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ், சேகர் நாப்டே உள்ளிட்டோர் தங்கள் தரப்பு இறுதி வாதங் களை கடந்த மாதமே நிறைவு செய்தனர்.

இதையடுத்து ஆச்சார்யா இறுதியாக ஜெயலலிதா தரப்பு முன் வைத்த வாதங்களுக்கு பதிலளித்து வந்தார்.

இவரது இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதம் இன்னும் நிறைவடையவில்லை. எனவே கடந்த 12-ம் தேதி “இவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் ஜூன் 1-ம் தேதி கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரித்து முடித்து விடலாம். அன்றைய தினம் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா 2 மணி நேரமும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மணி நேரமும் மட்டுமே தங்கள‌து வாதத்தை முன்வைக்க வேண்டும்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தர‌ப்பும், தனியார் நிறுவனங்கள் தரப்பும் தங்களின் இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதத்தை அடுத்த சில மணி நேரத்தில் முன் வைக்க வேண்டும்” எனக் காலக்கெடு விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பு தேதி வாய்ப்பில்லை

இதன்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வின் முன்பாக நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே நீதிபதிகள் அனைத்து தரப்பும் தங்களது இறுதி வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். எனவே இன்றுடன் இவ்வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணையும், வாதங்களும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம். ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை அறிவித்து வழக்கை ஒத்தி வைப்பார்கள். உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பார்கள்.

அதேபோல கீழமை நீதி மன்றங்களில் இருப்பது போல தீர்ப்பை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையும் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. எனவே நீதிபதிகள் தங்களுக்கு வசதியான நாளில் தீர்ப்பு வழங்குவார்கள் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

சிரிக்க வைத்த என்னை அழ வைக்கின்றனர்: வாட்ஸ்அப் வதந்தியால் நடிகர் செந்தில் வேதனை

THE HINDU

எல்லோரையும் சிரிக்க வைத்த நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரப்பி அழ வைக்கின்றனர் என நடிகர் செந்தில் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருச்சியில் நடிகர் செந்தில் அதிமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தக வல் பரவியது. அதிர்ச்சி அடைந்த அவர், தான் நலமுடன் இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இதனால் கடும் மன உளைச்சலடைந்த அவர் நேற்று மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங் களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறேன். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு வந்தேன். அப்போது நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் மீண்டும் தகவல் பரவுவதாகக் கேள்விப்பட்டேன். வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

திமுகவினர்தான் காரணம்

நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் எல்லோரையும் சிரிக்க வைத்து பழக்கப்பட்டவன். ஆனால், இப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக என்னை அழ வைக்கின்றனர். இதன் பின்னணியில் திமுகவினர்தான் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக நான் பிரச்சாரம் செய்ததால், தற்போது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவினர்தான் நான் இறந்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர் என்றார்.

எம்ஜிஆர் 100 | 76 - கொடுத்தது கோடிகள்!


எம்ஜிஆர் 100 | 76 - கொடுத்தது கோடிகள்!

‘நாடோடி மன்னன்’ படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சி.
M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.

இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


‘அரச கட்டளை’ படத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ர பாணியின் மகன் ராமமூர்த்தி தயா ரித்தார். சக்ரபாணி இயக்கினார். பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் என எம்.ஜி.ஆர். பட முக்கிய வில்லன் கள் எல்லோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

Tuesday, May 31, 2016

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

vikatan.com

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.

என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.


என்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது?

1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.

'சீப் லேபர்' என்றால் என்ன?

இதற்கு அர்த்தம் தெரிந்தால் டென்ஷன் ஆகிவிடுவீர்கள். சராசரியாக ஒரு 'மனித' மணி நேரத்துக்கு (Manhour) அமெரிக்க பிரஜைகளுக்கு சுமார் 170 டாலரில் இருந்து 280 டாலர் வரை சம்பளம் கொடுக்கவேண்டும். இது இந்திய மதிப்பில் 10,000 ரூபாயில் இருந்து 16,800 ரூபாய் வரை (இது ஒரு மணி நேர வேலைக்கு). ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்றால் கணக்கு போட்டுப் பாருங்கள். ஆனால் அதே வேலையை செய்ய, கல்லூரியில் டாப் ரேங்க் பெற்ற திறமைசாலியான இந்திய என்ஜினியர்களுக்கு 30 டாலர்கள் கொடுத்து வேலை வாங்குகிறார்கள். அப்படியானால் 170 டாலரில் 30 டாலர்கள் போனால் முதலாளியின் பாக்கெட்டிற்கு போவது 150 டாலர் (ஒரு மணி நேரத்துக்கு). இதுவே சுமார் 10,000 தொழிலாளிகள் கொண்ட பெரிய நிறுவனங்களின் மாத வருமானம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் கணிதத் திறனிடமே விட்டுவிடுகிறோம்.

சரி பணம் குறைவாக இருந்தால் என்ன, என்ஜினியரிங்குக்கு வேலை இருக்கிறதே?

'வேலை இருக்கு...ஆனால் இல்லை' என்ற ‘தெளிவான பதில்’தான் இதற்கு விடை. இங்கு 2 விஷயங்களை உற்று நோக்க வேண்டி இருக்கிறது

1) என்ஜினியர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள், அவர்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை கண்ணை துடைத்து பார்க்க வேண்டும். ஐடி சம்பந்தமான வேலைகளை 'பிராஜக்ட் கான்ட்ராக்ட்' எடுக்கிறார்கள். Analysis, Design, Development, Implementation and Evaluation என்ற ஐடி படிநிலைகளில், உடலுக்கு அதிக வேலை இருப்பதும், அதிக மனித ஆற்றல் தேவைப்படுவதும் நான்காவதாக செய்யப்படும் implementation-க்குதான். இங்கே implementation என்பது கிட்டத்தட்ட கொத்தனார் வேலைக்கு சமம். செங்கல்லை எடுக்க வேண்டியது, அதை அடுக்க வேண்டியது, சிமெண்ட் பூசவேண்டியது, மறுபடியும் செங்கல், சிமெண்ட்... அதாவது ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது (Repeatable jobs). ஐடி கம்பெனிகளில் coding, testing எல்லாம் இந்த வகையை சேர்ந்தவைதான். ஆனால் என்ஜினியரிங் அறிவு தேவைப்படுவதோ மற்ற 4 படி நிலைகளுக்குத்தான். பெரும்பாலும் யாரோ ஒருவர் உருவாக்கிய பிராஜெக்டில் மாற்றங்களை மட்டும் சேர்க்கின்றனர். என்ஜினியர்கள் என்ற பெயரை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தரலாம். ஆனால் என்ஜினியர்களின் திறமையை இங்கு முழுமையாக பயன்படுத்துவது இல்லை.



2) இரண்டாவது சிக்கல் ஆட்டோமேஷன். பெரும்பாலான தொழிற்சாலைகளை இன்று ரோபோக்கள்தான் இயக்குகின்றன. என்ஜினியர்களின் இடத்தை இவை ஆக்கிரமித்து விட்டன. ஒரு கார் கம்பெனியில் 5000 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், 4500 பேர் இந்த அசெம்ப்ளி வேலையைத்தான் செய்வார்கள். இந்த அசெம்ப்ளி வேலைக்கு குறைந்த சம்பளத்தில், டிப்ளமோ அல்லது சில இடங்களில் +2 மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இங்கு என்ஜினியர்களுக்கான தேவை மிகக் குறைவு. அதிலும் அந்நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அங்குள்ள என்ஜினியர்கள்தான் இங்கு முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். எனவே மிகத் திறன் வாய்ந்த, சில எண்ணிக்கையிலான என்ஜினியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். அரசு பெரும் முயற்சி செய்து, பல பன்னாட்டு தொழிற்சாலைகளை இந்தியாவில் உருவாக்கச் செய்தால் கூட, ஆண்டுக்கு 2 லட்சம் என்ஜினியர்களை இவற்றில் பணியமர்த்த முடியுமா என்பது சந்தேகம்தான்.



திறன் வாய்ந்த என்ஜினியர்களை கல்லூரிகள் உருவாகின்றனவா?

எப்படி முடியும்? டாப் கல்லூரிகளில் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காண முடிகிறது. மற்ற கல்லூரிகளில் பி.இ படித்துவிட்டு வேறெங்கும் வேலை கிடைக்காததால், ஆசிரியர்களாக அடைக்கலம் தேடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எத்தகைய திறனைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே.

'100% பி்ளேஸ்மென்ட்' என்ற வார்த்தையை பெரிதாக போட்டுவிட்டு, ‘நோக்கி’ என்ற வார்த்தையை கண்ணுக்கு தெரியாதபடி அச்சிட்டு பேனர்கள் வைத்தும், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரம் செய்தும் 'சீட்' நிரப்புவதில் அக்கறை கட்டும் கல்லூரிகள், மாணவர் திறன் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் எந்த ஒரு முன்னறிவும் இல்லாமல் இன்டர்வியூவுக்கு செல்லும் மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

இந்த காரணங்களை எல்லாம் நீங்கள் கருத்தில் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் பொறியியல் படிப்பை வெறுப்பது நியாயமானதுதான்.



அப்படியனால் என்ஜினியரிங்க் படிக்கக் கூடாதா...?

எந்த படிப்பும் மோசமானது அல்ல. இன்றைக்கும் பொறியாளர்கள் தேவைப்படும் பல நிறுவனங்கள் உள்ளன. ஒரு நாட்டை செதுக்குவது பொறியாளர்கள்தான். தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என்று மட்டும் இல்லாமல் வங்கி, மருத்துவம், சமூக உள்கட்டமைப்பு போன்ற சேவை பிரிவுகளிலும் பொறியாளர்களுக்கான தேவை உள்ளது.

என்ஜினியர்களுக்கென்று சில தனித் திறன்கள் இருக்கும். அவர்களுடய பகுப்பாய்வு மற்றும் காரணி அறிவு ( Analysis and Reasoning) அணுகும் திறன் ( Approachability), எண்கணித திறமை ( Numerical Ability), தர்க்க திறமை ( Logical) போன்ற திறன்கள்தான் மற்ற துறை மாணவர்களுக்கும் பொறியியல் மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும். இத்திறன் கொண்ட மாணவர்களை அள்ளிக்கொண்டு செல்ல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

அதையும்தாண்டி இந்தியாவின் தற்போதைய புதிய ட்ரெண்ட், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள். ஒரு சின்ன ரூமில் 4 லேப்டாப்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கும் மாடர்ன் இந்திய இளைஞர்களுக்கான களம் இது. திறமைசாலிகளை வேலைக்கு எடுக்கும் அளவுக்கான 'நிதி பலம்' ஸ்டார்ட் அப்களிடம் இருக்காது. இங்கு உங்கள் திறன்தான் முதலீடு. இங்கு ஊழியரும் நீங்களே... சி.இ.ஓவும் நீங்களே. இந்தியா முழுவதும் புதுமையான பிஸ்னஸ் ஐடியாக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள். பெரியப் பெரிய நிறுவனங்களால் செயல்படுத்த முடியாத விஷயங்களை, இந்த என்ஜினியர்கள் அசால்ட்டாக செய்து காட்டுகின்றனர். அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இவர்கள் மீது முதலீட்டை கொட்டுகின்றனர்.



பல லட்சம் சம்பளத்துக்கு வேலை கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்த போதும் அவற்றை உதறிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு 30% ஐ.ஐ.டி மாணவர்கள் இந்திய ஸ்டார்ட் அப்களில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். காரணம், ஸ்டார்ட்அப்களில் நீங்கள்தான் படைப்பாளி. உங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. சொந்த முயற்சியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய முழு திறனையும் பயன்படுத்த முடியும். திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும். உங்கள் உழைப்புக்கான முழு கிரெடிட்ஸ் உங்களுக்கே. இவ்வளவையும் மீறி, 'நான் ஒரு படைப்பாளி' என்ற கர்வம் உங்களுக்கு கிடைக்கும். இந்த கர்வம், உங்களை மேலே தள்ளிக் கொண்டே இருக்கும். ஏனெனில் என்ஜினியர்கள் நல்ல படைப்பாளிகள், அடுத்தவரின் கீழ் வேலை செய்ய பிடிக்காதவர்கள். எனவே தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட்அப்கள் கை கொடுக்கும்.

மேலே கூறியவற்றை புரிந்து கொண்டு, மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிக்க முடிவெடுத்தீர்களானால் ஆல் தி பெஸ்ட்.

- ஆரா ( மனிதவள மேம்பாட்டு வல்லுநர்), ரெ.சு.வெங்கடேஷ்

கோப்புகளை வீட்டில் பார்க்க உயரதிகாரிகளுக்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு



மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் டெல் லியின் நார்த் பிளாக் கட்டிடத்தில் உள்ளது. இங்கு நிலவும் கடுமை யான பணிச்சுமை காரணமாக முக்கியக் கோப்புகளை அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று பார்வையிட அனுமதிக் கப்பட்டிருந்தனர். இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்து கொண்ட அதிகாரிகளுக்கு மட்டும் இந்த அனுமதி தரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அனுமதி தற்போது ரத்து செய்யப் பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பான கோப்புகள் காணாமல்போய் மீட்க முடியாமல் போனதே இதற்கு காரணமாகும் . இத்துடன் உள்துறை சார்புச் செயலாளர் ஆனந்த் ஜோஷியை சில வாரங்களுக்கு முன் கைது செய்யவேண்டிய சூழல் உருவா னது மற்றொரு காரணம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் தொடர்பான கோப்புகளை ஆனந்த் ஜோஷி தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வந்தார். அதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்று வந்ததாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்ச கத்துக்கு மத்திய உளவுத் துறை (ஐ.பி) ஓர் அறிக்கை அனுப்பி யுள்ளது. அதில் அளிக்கப்பட்டப் பரிந்துரையின் பேரில் கோப்புகளை வீடுகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போ து, “நார்த் பிளாக்கில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் கோப்புகள் உடனடியாக நகல் அல்லது ஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுக்கப்பட்டு விடு கின்றன. இதன்மூலம், சம்பந்தப் பட்டவர்களுடன் பேரம் பேசி சட்டவிரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. இதை தடுக்க ஒரே வழி கோப்புகளை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மத்திய அரசு பதவியேற்று 2 ஆண்டு கள் நிறைவு கொண்டாட்டத்தில் உள் துறை அமைச்சகத் தின் கோப்புகளும் வரிசைப்படுத் தப்பட்டு வருகின்றன. இவற் றில் வேண்டாத கோப்புகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனுடன் உளவுத்துறையின் பரிந்துரையும் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டுமின்றி, சிபிஐ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் தங்கள் வீடுகளுக்கு கோப்புகளைக் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 75 - முதலும் கடைசியுமான விநியோகஸ்தர்!

எம்.ஜி.ஆருடன் கைகுலுக்குகிறார் திலீப் குமார். | ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆரின் அட்டகாச போஸ்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. படங்களின் பாடல்களில் இருந்து பத்து பாடல்களை பட்டியலிடுமாறு அவரது ரசிகர்களிடம் கூறினால், பெரும்பாலோர் முதலாவதாக குறிப்பிடுவது ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்…’ பாடலாகத்தான் இருக்கும். அந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் திலீப் குமார் நடிக்க காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.!

தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. ஏழு திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். அற்புதமாக நடித்திருப்பார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்…’ பாடலில் எம்.ஜி.ஆரின் சுறு சுறுப்பு வியக்க வைக்கும். சாட்டையை சுழற்றியபடி ஒரு இடத்தில் நிற்க மாட்டார்.

அதிலும் ஒரு காட்சியில் கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும். தரையில் சுழலும் எம்.ஜி.ஆர்., ஒரு கையை ஊன்றி, மறு கையை உயர்த்தி மேலே பார்த்தபடி கொடுக்கும் அந்த போஸ் அவருக்குத்தான் வரும். தெலுங்கில் என்.டி.ராமராவும் இந்தியில் திலீப் குமாரும் நடித்துள்ள இந்தப் பாடல் காட்சிகளைப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் எனர்ஜி லெவலே தனி என்பது புரியும்.

இந்தி நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்து திலீப் குமாரை நாகிரெட்டி சந்தித்து பேசினார். திலீப் குமாருக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆரைத் தெரியும். சென்னையில் எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார். அவரது படங்களை பார்த்து ரசித்திருக்கிறார். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ‘இன்ஸானியத்’ என்ற இந்திப் படத்தை தயாரித்து இயக்கினார். அதில் திலீப் குமார், நடிகை பீனா ராய், நடிகர் ஜெயந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

எஸ்.எஸ்.வாசனை பார்க்க இவர்கள் மூவரும் ஒருமுறை சென்னை வந்தனர். எம்.ஜி.ஆரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பதை வாசனிடம் திலீப் குமார் தெரிவித்தார். அதற்கு வாசன் ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் திலீப் குமார், பீனாராய், ஜெயந்த் ஆகியோர் சந்தித்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்து கவுரவித்தார்.

தான் பார்த்த எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து, தான் ரசித்த பல காட்சிகளை திலீப் குமார் குறிப்பிட்டு பாராட்டினார். தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூர், மும்பை (அப்போது பம்பாய்) போன்று இந்தியாவின் பிற நகரங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பதைக் கண்டு ‘‘எம்.ஜி.ஆருக்கு இருப்பதைப் போன்று வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு ரசிகர் மன்றங்கள் இல்லை’’ என்றும் பாராட்டினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் எடுப்பது தொடர்பாக திலீப் குமாரை நாகிரெட்டி மும்பையில் சந்தித் துப் பேசியபோது, படத்தைப் பார்க்க திலீப் குமார் விருப்பப்பட்டார். அதற்கா கவே சென்னை வந்தார். குறிப்பிட்ட நாளில் வாஹினி ஸ்டுடியோவில் உள்ள சிறிய தியேட்டரில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் திரையிடப்பட்டது. நாகிரெட்டியின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரும் சென் றார். திலீப் குமாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பின்னர், ‘‘படம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால், நான் நடிக்க விரும்ப வில்லை’’ என்று திலீப் குமார் கூறிவிட்டார். ‘‘ஏன்?’’ என்று வியப்புடன் கேட்டார் நாகிரெட்டி.

‘‘எம்.ஜி.ஆர். இரண்டு பாத்திரங்களை யும் சிறப்பாக செய்திருக்கிறார். அது போல என்னால் முடியாது’’ என்றார் திலீப் குமார்.

அவரை அப்படியே அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் பெரிய நடிகர். இந்தியில் எவ்வளவோ சாதனை கள், பிரமாதமான படங்கள் பண்ணியிருக் கிறீர்கள். நீங்கள் இந்தப் படத்தை இந்தி யில் செய்தால் படம் பெரிய ‘ஹிட்’ ஆகும். ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் உங்கள் பாணியில் பண்ணுங்கள்’’ என்று கூறி உற்சாகப்படுத்தினார். பின்னர், இந்தி யில் திலீப் குமார் நடிக்க ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற அந்தப் படமும் வெற்றிகர மாக ஓடியது. அந்தப் படத்தில் திலீப் குமார் நடித்ததற்கு எம்.ஜி.ஆர். அவருக்கு அளித்த உற்சாகம்தான் காரணம்.

பின்னர், 1969-ம் ஆண்டு பொங்கல் நாளில் சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று திலீப் குமார் கலந்து கொண்டார். அப்போது ஒரு சுவையான சம்பவம்.

சிலை திறப்பு விழாவில் எஸ்.எஸ்.வாச னும் கலந்து கொண்டார். அவர் தீவிர காங்கிரஸ் அபிமானி. அவர் பேசும்போது, ‘‘கலைவாணர் சிலையை திறக்க இப் போதுதான் வேளை வந்துள்ளது’’ என் றார். இறுதியில் பேசிய அண்ணா, ‘‘சிலையை திறக்க இப்போதுதான் வேளை வந்திருப்பதாக வாசன் கூறு கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ள இந்த வேளையைத்தான் அவர் குறிப்பிடு கிறார்’’ என்று கூறி, உடல் நலம் குன்றிய அந்த நிலையிலும் நகைச்சுவை குன்றா மல் பேசினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத் தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். கூடுதலாக கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டு மல்ல; கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்.தான்.

அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘‘நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இந்த தொகையை பயன் படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரிடம் திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயரை துடைத்ததோ? யாருக்குத் தெரியும்?

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் தயா ராகிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் இரவு வாஹினி ஸ்டுடியோவின் எட்டாவது படப்பிடிப்பு அரங்கில் தீவிபத்து ஏற்பட்டது. விஷயம் தெரிந்து எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். தேவையான உதவி களை செய்தார். பின்னர், வீட்டில் இருந்த நாகிரெட்டியையும் சந்தித்து ‘‘கவலைப் பட வேண்டாம்’’ என்று ஆறுதல் கூறியபோது, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று வியந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தார் நாகிரெட்டி.


முந்தைய தொடர்களை வாசிக்க: எம்ஜிஆர் 100

Saturday, May 28, 2016

ராணி தேனீயைக் காப்பாற்ற' காரை 24 மணி நேரம் துரத்திய தேனீக் கூட்டம்

காரை துரத்திய தேனீக்கூட்டம்.| படம்: டாம் மோசஸ் என்பாரின் பேஸ்புக்.

பிரிட்டனில் இயற்கைப் பூங்காவிலிருந்து தன் வீடு நோக்கி 65 வயது பெண்மணி ஒருவர் காரை ஓட்டிச் சென்ற போது சுமார் 20,000 தேனீக்கள் கொண்ட கூட்டம் அவரது காரின் பின்பகுதி கண்ணாடியில் குழுமியிருந்தது கண்டு பீதியடைந்தார்.

கரோல் ஹவர்த் என்ற இந்தப் பெண்மணி வெஸ்ட் வேல்ஸில் உள்ள ஒரு ஹேவர்ஃபோர்டுவெஸ்ட் டவுன் செண்டரில் காரை நிறுத்திய சிறிது நேரத்திற்கெல்லாம் காரின் பின்பகுதியில் பிரம்மாண்ட தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு திகைத்தார். 

பெம்புரோக்‌ஷயர் கடற்கரை தேசிய பூங்காவைச் சேர்ந்த டாம் மோசஸ் என்பவர் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பகுதியில் தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு அனைவரையும் எச்சரித்தார், ஏனெனில் பலர் அதற்குள் அந்தக் காரை படம் பிடிக்கத் தொடங்கியிருந்தனர். 

தேனீக்கள் கொல்லப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் டாம் மோசஸ் பெம்புரோக்‌ஷயர் தேனீ வளர்ப்புக் கழகத்தை அணுகி தேனீக்களைப் பாதுகாப்பாக கார்டுபோர்டு பெட்டியில் பிடிக்க உதவினார். 

இவற்றிற்கெல்லாம் பிறகு தனது காரை கரோல் ஹவர்த் வீட்டுக்கு ஓட்டிச் சென்றார், அதாவது பிரச்சினை முடிந்து விட்டது என்றே அவர் நினைத்தார். ஆனால் திங்கள் காலை மீண்டும் காரைப் பார்த்த போது மீண்டும் தேனீக் கூட்டம் அவரது காரின் பின்பகுதியை மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். 

அதன் பிறகு மீண்டும் தேனீ வளர்ப்புக் கழகத்தினரைத் தொடர்புகொண்டு அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்துச் செல்ல உதவினார்.

பொதுவாக தேனீக்கள் தங்கள் தலைமை ராணித்தேனீயின் வழிகாட்டுதலுடன் கூட்டமாகச் செல்லும் எனவே இம்முறையும் ராணித் தேனீயைப் பின்பற்றியே தேனீக்கூட்டம் வந்திருக்கும் என்று பலரும் நினைத்தனர், ஆனால் அம்மாதிரியான ராணித்தேனீ அங்கு எதுவும் இல்லை. 

ஆனால் ராணித் தேனீயும் இல்லாத போது இந்தக் கூட்டம் எப்படி காரில் வந்து குழுமியது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

'சார்... உங்க செல்போன் நம்பர் என்ன?'- மறந்துபோன மனப்பாடக் கல்வி!

''சார்... உங்க செல்போன் நம்பர் என்ன?''
-இப்படி யாராவது  என்னிடம் கேட்டால், உடனே என்னோட செல் நம்பரை ஒப்பிக்க முடியாது. என்னோட செல் நம்பர் மட்டுமல்ல..அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள்னு நெருக்கமானவர்கள் நம்பர் கூட நினைவில் இருப்பதில்லை. ஆனால், டெலிபோன் மட்டுமே புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில், வீடு, உறவினர்கள், நண்பர்கள், அரசு அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட 200 போன் நம்பர்களை மனப்பாடம் செய்துவைத்திருந்தேன். அதில் எஸ்.டி.டி.கோடும் அத்துப்படி.

சரி! விஷயத்துக்கு வருவோம்...
இன்றைய செல்போன் எண்களை எத்தனை முறை மனப்பாடம் செய்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?
எல்லாமே டெக்னாலஜிதான், வளர்ந்துவரும் டெக்னாலஜி நமது நினைவாற்றலை படிப்படியாக குறைத்துவருகிறது. மூளை செய்யவேண்டிய இது போன்ற பணிகளை மெமரி கார்டு செய்துவிடுகிறது. நாம் போன்செய்ய வேண்டிய நபரின் பெயரை 'டச்' செய்தாலே போதும் அடுத்த நொடியில் அவருடன் பேசமுடியும்.

ஒரு வேளை போன் ரிப்பேர் ஆனாலோ, தொலைந்துபோனாலோ நமதுபாடு அம்போதான். இப்படித்தான் ஒரு முறை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு இளைஞர் வேலை சம்பந்தமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு சந்திக்க வேண்டிய நபர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனது போனில் மட்டுமே பதிவு செய்திருந்தார்.

டெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியவுடன், தான் வந்ததை நண்பருக்கு தெரிவிக்க செல்போனை எடுத்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது செல்போன் முற்றிலும் செயல் இழந்து இருந்தது. டெல்லி நண்பர்களின் தொடர்பு மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் செல்போன் எண் கூட நினைவில் இல்லை. தேவைப்படும் எண்களை அவர் துண்டு சீட்டில் கூட குறித்து வைக்கவில்லை. எல்லாமே போனில் பதிவாயிருக்கிறது என்கிற நம்பிக்கைதான்.
 
அந்த நம்பிக்கை அவரை நடுரோட்டில் அலைய விட்டது. ஏறத்தாழ பல மணிநேரம் அலைந்து திரிந்து விசாரித்து, ஒருவழியாக நண்பரின் வீட்டுக்கு சென்று சேர்ந்துள்ளார். அங்கு இவர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? நண்பரின் தொடர்பு எண்ணை துண்டுச்சீட்டில் குறித்து, பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.

இது இவருக்கான அனுபவம் என்று எடுத்துக்கொள்ள தேவையில்லை. பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். என்னதான் டெக்கனாலஜி நமக்கு  துணைபுரிந்தாலும் அது யோசிக்க தெரியாத ஓர் இயந்திரம்தான் என்பதை நினைவில் வைத்து, இனிமேலாவது, முக்கிய விஷயங்களை தலைமை செயலகமான நம் மூளையிலும் பதிவு செய்வோம்.

வெளிநாட்டு எம்.பி.பி.எஸ். படிப்பை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?....VIKATAN

வெளிநாடு சென்று கல்வி பெற விரும்புபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான விஷயங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறார் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்.

எந்த வயதில் வெளிநாட்டில் படிக்கச் செல்லலாம்?

17 முதல் 21 வயது வரை உள்ளவர்கள், படிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டாம். காரணம், இந்த வயதில் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய பக்குவம் இருக்காது. மாணவர்களை வழிநடத்தக்கூடிய சரியான ஆட்களும் அங்கு இல்லை. நாம் 'தவறு’ எனச் சொல்வதை வெளிநாட்டினர் 'சரி’ என்பர். இதனால், ஏதேனும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். ஆகவே முதுநிலை அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளைப் படிப்பதற்கு ஏற்ற வயதில் வெளிநாடு செல்வதே நல்லது. 

வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது நல்லதா?
வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்படுவது இல்லை என்பதால், அங்கு சென்று படிப்பதில் பெரிய அளவில் பயன் இல்லை. அங்கு படித்துவிட்டு வரும் மாணவர்கள் பலர், இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical council of India) நடத்தும் தேர்வில், குறைந்த விகிதத்திலேயே தேர்ச்சி அடைகிறார்கள்.
மேலும் அத்தகைய மாணவர்களில் பலருக்கு, நோயாளிகளைக் கையாளத் தெரிவது இல்லை. அதனால், அவர்களை இங்கு குறைந்த சம்பளத்திலேயே பணியில் அமர்த்துகிறார்கள். மேலும், வெளிநாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் பல, அதற்கான தகுதிகளுடன் இருப்பதில்லை. ஆகவே, வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்கும் மோகத்தைத் தவிர்த்து, நம் நாட்டிலேயே மருத்துவப் பயிற்சி பெறுவது சிறப்பு. (இது, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மட்டும் பொருந்தும்.)

வெளிநாட்டுக் கல்லூரிகளில் பணம் செலுத்திப் படிக்கலாமா?

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி,  அவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்கின்றன. போதுமான மதிப்பெண்கள் இருந்தால் முன்னணி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிடும். அந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் உரிய சலுகையும் வழங்கப்படும். மாறாக, மதிப்பெண்கள் குறைவாக இருக்கும்போது, ஒரு மாணவருக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் எதுவும் கிடைக்காது. அடுத்தடுத்த தரத்தில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கலாம். ஆனால், கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள தரமான பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தால் படிக்கலாம். இல்லையென்றால், அங்கு சென்று கட்டணம் செலுத்திப் படிப்பது வீண்தான். 

 
SAT - 1 மற்றும் SAT - 2 நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கான தகுதிகள் என்ன?

மாணவர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்து (Scholastic Aptitude Test ) SAT - 1 மற்றும் SAT - 2 நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். இதில் SAT - 1 தேர்வை எழுத, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி போதும். கணிதம், கிரிட்டிக்கல் ரீடிங், ஆங்கிலக் கட்டுரை போன்றவையே இந்த நுழைவுத்தேர்வின் வினாக்களாக இருக்கும். இதில் தேர்வானவர்கள் SAT - 2 நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். 

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள், SAT - 2 நுழைவுத்தேர்வை எழுதலாம். தேர்வு செய்யும் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். அதாவது கணிதம், வேதியியல் என எந்தத் துறையில் சேர விருப்பமோ, அந்தத் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்வானவர்கள் வெளிநாட்டில் ஆங்கிலம், வேதியியல், உயிரியல், கணிதம், இசை, சட்டம் போன்ற நாம் தேர்வுசெய்யும் பட்டப்படிப்புகளைப் படிக்கலாம். இந்த இரண்டு தகுதித்தேர்வுகளிலும் தேர்வாகும் மாணவர்கள்தான், வெளிநாட்டுக்குச் சென்று படிக்க முடியும். 

SAT தேர்வு, அனைத்து மெட்ரோ நகரங்களிலும் நடைபெறும். இந்தத் தேர்வை, இ.டி.எஸ் (Educational Testing Service) என்ற அமைப்பினர் நடத்துகின்றனர். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள், இந்த இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் இலவசமாக எழுதலாம். அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கான மேலதிக தகவல்களை, ets.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

-பாசுமணி, கே.அபிநயா

ஆண்களை விட ஊதியத்தில் பெண்கள் திருப்தியாக உள்ளனர்



ஊதியத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் மிக திருப்திகரமாக இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் சமீபத்தில் `இ ஒய் ரிவார்ட்ஸ் 2016’ என்ற ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் ஊதியத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் அதிக நன்மைகளை அடைகிறார்கள் என தெரியவந்துள்ளது. மேலும் நான்கில் ஒரு ஊழியர் நிறுவனங் கள் வழங்கும் வெகுமதிகள் குறித்து அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில் தெரியவந்திருப்பது: ஊதியத்தை பொறுத்தவரை 66 சதவீத பெண்கள் திருப்திகரமாக உள்ளனர். தங்கள் ஊதியம் குறித்து 50 சதவீதம் ஆண்களே திருப்திகரமாக இருக்கின்றனர்.

ஆண்கள் தங்கள் ஊதியத் திலேயே கவனம் செலுத்துவ தாகவும் ஆனால் பெண்கள் ஊதியத்தோடு மற்ற சலுகை களிலும் கவனம் செலுத்து வதாகவும் தெரிவிக்கிறது.

24 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனங்கள் வழங்கும் வெகுமதி குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர். 20 சதவீத ஊழியர்கள் வெகுமதி குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளனர். 65 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனம் வழங்கும் வெகுமதி குறித்து திருப்திகரமாக இருக்கின் றனர். அதிலும் குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு பிறகான ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு குறைவாக இருக்கிறது, 30-35 வயதுடைய ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு சிறிது அதிகரிக்கிறது.

35-45 வயதுடைய ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு குறைகிறது மேலும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வருமானம், மேனேஜர்களின் தரம் மற்றும் தலைமை பண்பு, நிறுவனத்தின் மதிப்பு, எளிதான நடைமுறைகள் ஆகிய காரணிகள்தான் வேலை செய்வதற்குரிய சிறந்த சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது என்று ஊழியர்கள் அந்த ஆய்வில் கூறியிருக்கின்றனர். மேலும் ஊழியர்கள் வளர்ச்சி வாய்ப்புகளுக்கும் வேலையில் முன்னேற்றத்திற்கும் முக்கியத் துவம் கொடுப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் உள்ள 12 நிறுவனங்களில் உள்ள 452 ஊழியர்கள், 128 நிறுவனர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 73 - காட்சி அமைப்பாளர்!

எம்ஜிஆர் 100 | 73 - காட்சி அமைப்பாளர்!



M.G.R. படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன. அதற்கு காரணம், அவர் படங்களின் விறுவிறுப்பான கதையமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பாடல்கள் மட்டுமின்றி; படத்தை உருவாக்குவதில் சிறிய விஷயங்களில்கூட அவர் கவனம் செலுத்தியதுதான். காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதமும் அதன் அழகும் படத்தோடு நம்மை கட்டிப்போடும்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமே பிரம்மாண்டமான தயா ரிப்பு. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா வீசிய அணு குண்டுகள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை உருக் குலைத்தன. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில், மனித குலத்துக்கே அச்சுறுத்த லாய் விளங்கும் அணுசக்தி பற்றிய ரகசிய குறிப்பை வில்லன் கோஷ்டியிடம் இருந்து அதே ஜப்பானிலேயே எம்.ஜி.ஆர். மீட்பதுபோல காட்சி. இதற்காகவே, எம்.ஜி.ஆருக்கு சபாஷ் போடலாம்.

முன்னதாக, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு எம்.ஜி.ஆர். செல்வார். அங்கே ‘துஸித் தானி’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான ஓட்டல். அந்த ஓட்டலில் படக்குழுவினர் தங்கியிருந் தனர். ஓட்டலின் அழகைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அங்கேயே காட்சிகளை படமாக்க முடிவு செய்தார். படம் வெளி யானது 1973-ம் ஆண்டு. அந்தக் காலகட்டத்தில், கிராமங்களை விடுங் கள்; சிறிய நகரங்களில் கூட ஓட்டல் என்றால் குண்டு பல்பின் மங்கிய ஒளியில் கால் உடைந்த ஸ்டூல்களும், ஈக்கள் மொய்க்கும் மேஜையும், நசுங்கிய டம்ளர்களும்தான் நினைவுக்கு வரும். அதைத் தகர்த்தெறிந்து இப்படியெல் லாம்கூட இருக்குமா என்று வியக்க வைத்தது ‘துஸித் தானி’ ஓட்டல்.

எம்.ஜி.ஆரைப் பார்க்க தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டா ‘துஸித் தானி’ ஓட்டலுக்கு வருவார். ஓட்டலின் முன் அறை யில் இருந்து வாயிலை பார்க்கும் கேமரா கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப் பது போலிருக் கும். மேட்டா, நேராக தன்னை சந்திப்பது போல காட்சியை எம்.ஜி.ஆர். அமைத்திருக் கலாம். ஆனால், ஓட்டலின் அழகை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி, (போலீஸ் அதிகாரி யாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் பெயர்) ஓட்டலின் முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் நடிகை மேட்டா ஓடி வரும்படி காட்சியை அமைத்திருப்பார். அப்போது ஓட்டலின் வேலைப்பாடுகள் மிக்க விதானத்துடன் கூடிய நீளமான வராண்டாவின் அழகை ரசிக்க முடியும்.

வராண்டாவை கடந்து வெளியே சென்றால் பரந்த இடம். அங்கே நடிகை சந்திரகலாவும் நாகேஷும் இருப்பார்கள். அங்கு மேட்டாவை எம்.ஜி.ஆர். அழைத்து வருவார். இவர் கள் நான்கு பேரும் இருக்கும் இடத்துக்கு பின்னே பச்சையும் நீலமுமாய் நீரில் மின் னும் நீச்சல் குளம். அதன் எதிர்க்கரையில் பீறிட்டு அடிக்கும் நீரூற்றுகள்.

லோ ஆங்கிளில் கேமராவை வைத்து படம்பிடித்திருப்பார்கள். இந் தக் காட்சியில்தான் ஓட்டல் ‘துஸித் தானி’யின் முழு பிரம்மாண்டமும் தெரியும். சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேகூட, 14 மாடிகளைக் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடம்தான் பிரம்மாண்டம். ஒரு படத்தில் கதாநாயகன் சென்னை வருவதாக காண்பிக்கப் பட்டால் அந்த கட்டிடத் தைத்தான் காட்டுவார் கள். அதற்கே தியேட் டரில் சலசலப்பு ஏற்படும். அதைவிட பல அடுக்கு மாடி களைக் கொண்ட, பலமடங்கு பிரம்மாண்ட மான ‘துஸித் தானி’யை திரை யிலே பார்த்த மக்கள் வியப்பில் வாய் பிளந்தனர்.

அந்த அள வுக்கு கட்டிடங் களைக் கூட, மிகத் திறமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்து வதில் எம்.ஜி.ஆர். வல்லவர். அதனால் தான் அவரது படங்களில் ஒவ்வொரு ஃபிரேமையும் இன்றும் ரசிக்க முடிகிறது.

தமிழ் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாடவைத்தது எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம். ‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும். இந்தப் பாடல் காட்சியின் சில பகுதிகள் ஒகேனக்கலில் படமாக்கப்பட்டன. பாறைகள் நிறைந்த பகுதியில் பாய்ந்து வரும் தண்ணீரின் நடுவே எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பார். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும். லாங் ஷாட்டில் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரைச் சுற்றி சுமார் நூறடி தொலைவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

இதைவிட இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே? ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும். இது ஸ்டாக் ஷாட் போலிருக்கிறது, இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருப்பார். காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்.

‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில், இடம்பெற்ற ‘அழகெனும் ஓவியம் இங்கே...’ பாடல் தேவகானமாய் ஒலித்து நம்மை சொக்க வைக்கும். பாடலின் ஒரு காட்சியில் கதவை மூடியபடி, நம்மை நோக்கி எம்.ஜி.ஆர். வருவார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென நம்மிடமிருந்து எதிர்திசையில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை நோக்கிச் செல்வார். அப்போதுதான் நமக்கு புரியும்; முதலில் எம்.ஜி.ஆர். நம்மை நோக்கி வந்த காட்சி, கண்ணாடி யில் தெரிந்த அவரது பிம்பம் என்று. இதில் விசேஷம் என்னவென்றால், காட்சி யைப் படமாக்கிய அதே நேரம், அந்தப் பெரிய கண்ணாடியில் கேமரா தெரியாதபடி ஆங்கிளை அமைத்திருப்பார்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்று நிச்சயம். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்...’ பாடலில் வரும் வரிகளை, எம்.ஜி.ஆர். படங்களை பார்க்கும்போது அனு பவத்தில் நாம் உணர முடியும். அந்த வரிகள்...

‘உள்ள மட்டும் அள்ளிக்கொள்ளும்

மனம் வேண்டும்,

அது சொல்லும் வண்ணம் துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்.




ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘அடிமைப் பெண்’. இதற்கான விழாவில் கலந்து கொள்ள மும்பை சென்ற எம்.ஜி.ஆரிடம், ‘‘I am your fan’’ என்று கூறி பிரபல இந்தி நடிகரும் இயக்குனருமான ராஜ் கபூர் வாழ்த்தினார். ‘அடிமைப் பெண்’ கிளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். மோதும் சண்டைக் காட்சியை தன்னால் கூட அப்படி படமாக்க முடியாது என்று ராஜ் கபூர் பாராட்டினார்.

எம்ஜிஆர் 100 | 74 - குழந்தை உள்ளம்!


எம்ஜிஆர் 100 | 74 - குழந்தை உள்ளம்!

குழந்தையைக் கொஞ்சும் குழந்தை உள்ளம்.
M.G.R.இந்த நாட்டின் எதிர்காலச் செல்வங்களான குழந்தைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நல்ல கருத்துக்களை குழந்தைகளுக்குச் சொல்வதோடு, தவறு செய்தாலும் அன்பால் அவர்களை திருத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது மானசீக குரு வாகக் கருதியவர்களின் திரை யுலக மேதை வி.சாந்தாராம் முக்கியமானவர். எம்.ஜி.ஆர். முதல்வ ராக இருந்தபோது, தமிழக அரசின் சார் பில் சென்னை கலைவாணர் அரங்கில் குழந்தைகள் திரைப்பட விழா கொண் டாடப்பட்டது. குழந்தைகள் படச் சங்கத் தின் தலைவராக அப்போது இருந்த சாந்தாராமும் விழாவில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கும்போது, ‘‘எனது மானசீக ஆசான் சாந்தாராம் அவர்களே!’’ என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.

குழந்தைகளுக்கான படங்களின் தேவையைப் பற்றி எம்.ஜி.ஆர். அருமை யாக உரையாற்றினார். குழந்தைகள் மனதில் விபரீத எண்ணங்கள் தோன்றக் கூடாது என்றும் அதை விளக்க, தான் படித்த தமிழாக்கம் செய்யப்பட்ட வங்கமொழி சிறுகதையையும் கூறினார்.

கதையின் களம் வங்கத்திலே இந்து முஸ்லிம் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயம். இரண்டு குழந்தைகள். ஒன்று இந்து, மற்றொன்று முஸ்லிம். இருவரும் நெருங்கிய நண்பர்கள். தினமும் விதவிதமாய் விளையாடி மகிழ்வார்கள். ஒருநாள் இன்று என்ன விளையாடுவது? என்று அவர்களுக்குள் விவாதம்.

‘‘அப்பா அம்மா விளையாட்டு’’ என்று யோசனை கூறியது ஒரு குழந்தை.

‘‘எத்தனை முறைதான் அதையே விளையாடுவது? அலுத்துவிட்டது’’ என்றது மற்றொரு குழந்தை.

‘‘சமையல் விளையாட்டு’’

‘‘ஊகூம், வேண்டாம்’’

பல விளையாட்டுக்களைப் பற்றி விவாதித்த பின்னர் இறுதியில் ஒரு குழந்தை கேட்டது, ‘‘கத்தி எடுத்து ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு விளையாடலாமா?’’.

அந்தக் குழந்தையின் கேள்வியோடு கதை முடிகிறது.

இந்தக் கதையை எம்.ஜி.ஆர். குறிப் பிட்டு, குழந்தைகளுக்கு முன்மாதிரி களான நாம் எப்படி ஒற்றுமையாகவும் அன்போடும் இருக்க வேண்டும் என் பதையும் நல்ல சூழலில் குழந்தைகள் வளர வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார். ‘‘குழந்தை உள்ளத்தை நன்கு அறிந்தவர்கள் அவர்களுக்கான படம் எடுக்க வேண்டும். அதற்கு சாந்தாராம் பொருத்தமானவர்’’ என்று பாராட்டினார்.

1967-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி. மதுரையில் திமுக பிரமுகர் ஒருவருடைய மகளின் பரத நாட்டிய அரங்கேற்றம், சவுராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம். திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத் தில் இருந்த எம்.ஜி.ஆர்., விழாவுக்கு வருவாரா என்று சந்தேகம். இரவு ஏழு மணி ஆகியும் எம்.ஜி.ஆர். வரவில்லை. நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங் கியது. கூட்டத்தினருக்கு ஏமாற்றம்.

சற்று நேரத்தில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து விரைவாக வந்த எம்.ஜி.ஆரின் கார், விழா நடந்த பள்ளி மைதான வளாகத்துக்குள் நுழைந்தது. இரவில் வந்த சூரியனைப் போல் வெளிச்ச மனிதராய் காரில் வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட கூட்டம் ஆர்ப்பரித்தது. பெரியவர் களே உற்சாகத்தின் உச்சிக்குச் சென்றபோது, சிறுவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா? திடீரென இரண்டு சிறுவர்கள் எம்.ஜி.ஆர். வந்த காரின் ஜன்னலில் கையை விட்டு தொங்கியபடி வந்தனர். சிறிது தூரம் சென்று மேடை அருகே கார் நின்றது.

காரில் இருந்து கோபத்துடன் வேக மாக இறங்கிய எம்.ஜி.ஆரைப் பார்த்து, காரில் தொங்கியபடி வந்த சிறுவர்கள் ஓட முயன்றனர். அந்த சிறுவர்களின் கைகளை சடாரென பிடித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவர்களை ஓங்கி அறையப்போவதுபோல கையை ஓங்கினார். ஆனால், அடிக்கவில்லை. அந்த சிறுவர்களைப் பார்த்து, ‘‘ஏன் இப்படி காரில் தொங்கிக் கொண்டு வந்தீர்கள்? கொஞ்சம் தவறி யிருந்தால் விபரீதமாகி யிருக்குமே? உங்கள் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? இனிமேல் இப்படி செய்வீர்களா?’’ என்று அதட்டலாக கேட்டுக் கொண்டிருந்த போதே பயத்தில் சிறுவர்கள் அழ ஆரம்பித்துவிட்டனர்.

அதற்குள் கூட்டம் எம்.ஜி.ஆரை சுற்றி நெருக்கியது. அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று முன்வரிசையில் அமரவைத்தனர். நாட்டிய நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர். ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமி தன் தாயின் பிடியில் இருந்து விடுபட்டு எம்.ஜி.ஆரை நோக்கி வர முயற்சித்தாள். அருகில் இருந்தவர்கள் அந்த சிறுமியை தடுத்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த சிறுமியை அருகில் அழைத்தார். வெட்கத்துடன் வந்த சிறுமியை தன் மடியில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு நாட்டியத்தை பார்த்தார். அந்த சிறுமிக்கு மகிழ்ச்சி ஒருபுறம், எல்லோ ரும் தன்னையே பார்க்கிறார்களே என்ற வெட்கம் மறுபுறம். புகைப் படங்கள் எடுக்கப்பட்டபோதும் எம்.ஜி.ஆர். மடியில் அமர்ந்தபடி வெட்கத்துடன் நகம் கடித்தபடி இருந்தாள் சிறுமி.

நிகழ்ச்சி முடிந்தபின், நாட்டியம் ஆடிய திமுக பிரமுகரின் மகளை எம்.ஜி.ஆர். பாராட்டி பரிசளித்தார். அவர் பேசும்போது, காரில் தொங்கியபடி வந்த சிறுவர்களின் செயலைப் பற்றிக் கூறிவிட்டு, ‘‘குழந்தைகள் அக்கறையாக கவனமுடன் வளர்க்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். கார் வந்து கொண்டிருக்கும்போதே கையை விடச் சொல்லி சத்தம்போட்டால் பதற்றத்தில் சிறுவர்கள் கையை விட்டு சக்கரத்தில் மாட்டி விபரீதம் ஆகியிருக்கும் என்பதால்தான் காரில் இருந்து இறங்கிய பின் அவர்களைக் கண்டித்ததாக தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது, பயத்துடன் கூட்டத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்த எம்.ஜி.ஆர்., சிரித்தபடியே அவர்களின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு புறப்பட்டார். தங்களது தவறுக்கு மன்னிப்பு கிடைத்துவிட்ட நிம்மதியும் மகிழ்ச்சியும் சிறுவர்கள் முகத்தில் மின்னியது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் இடம்பெற்ற ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்…’ என்ற அருமையான தாலாட்டுப் பாடலில் வரும் வரிகள் இவை...

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே;

பின் நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்




‘தூங்காதே தம்பி தூங்காதே…’, ‘திருடாதே பாப்பா திரு டாதே…’, ‘சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா…’ என்பன போன்ற, குழந்தை களுக்கு அறிவுரை சொல் லும் திரைப்படப் பாடல்கள் எம்.ஜி.ஆர். படங் களில்தான் அதிகம் இடம் பெற்றன.

பதின் பருவம் புதிர் பருவமா? - நிம்மதியான தூக்கம் எப்படிக் கிடைக்கும்?


தரமான தூக்கம் இல்லாமல் இருப்பதும் மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்று பார்த்தோம். அதற்கான தீர்வு என்ன? உடல் சுகாதாரத்தைப் பேணுவது மட்டுமில்லாமல் நல்ல தூக்கம் வேண்டுமானால், அதற்குச் சில சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்:

# தூங்கும் நேரத்துக்கு நிரந்தரமான ஒரு கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தவிர, மற்ற நேரங்களில் அதில் பெரிய மாற்றம் இருக்கக் கூடாது. உதாரணமாக இரவு 10 முதல் காலை 6 மணிவரை தூங்கும் பழக்கம் இருந்தால், அதில் பெரிய மாற்றம் செய்யக்கூடாது.

# மாலை வேளைக்கு மேல் உடற்பயிற்சி, ஜிம் பயிற்சி போன்ற வற்றைச் செய்வது தூக்கத்தைப் பாதிக்கும். காலையில் செய்தால் புத்துணர்வு கிடைக்கும்.

# மாலை 6 மணிக்கு மேல் காபி, டீ, கேஸ் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள கேஃபின் (Caffeine) என்ற வேதிப்பொருள் தூக்கத்தைக் கெடுக்கும். ஆனால், பாலில் உள்ள செரடோனின் என்ற வேதிப்பொருள் தூக்கத்தைச் சீராக்க உதவுவதால் பால் குடிப்பது நல்லது.

# மதுபானங்கள் ஆரம்பத்தில் தூங்க உதவி செய்வதுபோலத் தோன்றினாலும், நாளடைவில் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

# தூக்கத்தைத் தவிர மற்ற வேலைகளுக்குப் படுக்கை அறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, படுத்துக்கொண்டே டி.வி. பார்ப்பது, மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

# அதேபோல் படுக்கை அறை தவிர, மற்ற இடங்களில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். டி.வி. பார்த்துக்கொண்டே சோபாவில் தூங்குவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் தூங்குவது போன்றவை கூடாது.

# தூங்கச் செல்லும் முன் டி.வி., உணவு போன்ற வற்றைக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்ன தாக முடித்துக்கொள்ள வேண்டும். இரவு உணவு எளிதில் செரிக்கக்கூடியதாக இருப்பது நல்லது.

# தூங்கச் செல்லும் முன் மெல்லிய இசையைக் கேட்பது, புத்தகம் வாசிப்பது நல்லது.

# மதிய நேரத்தில் தூங்குவது இரவு தூக்கத்தின் நேரத்தைப் பகிர்ந்துகொள்வதைப் போன்றது. அதையும் தவிர்க்கலாம்.

# கடைசியாகப் படுக்கைக்குச் சென்று அரை மணி நேரம் ஆகியும் தூக்கம் வரவில்லை என்றால், மேலும் போராட வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து வேறு வேலைகள் இருந்தால் செய்து முடித்துவிட்டு, மீண்டும் தூக்க உணர்வு வந்த பின் படுக்கைக்குச் செல்லலாம்.

(அடுத்த வாரம்: இனி எல்லாம் சுகமே)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க அதிநவீன கருவி: இனிமேல் பில் கிடையாது, எஸ்எம்எஸ் வரும்


நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற அதிநவீன கருவி பயன்பாட்டுக்கு வருகிறது.

ரேஷன் பொருள் விநியோகத் தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன. இதனை தடுக்கவும், பேப்பர் இல்லா பணியை ஊக்கப் படுத்தவும் புதிய கருவியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற அந்த கருவியின் பயன்பாடு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் இந்த கருவி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த கருவியை சென்னையை சேர்ந்த ஓம்னே அகேட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் சிம்கார்டுகள் மூலம் செயல்படுகிறது.

குடோனில் இருந்து குறிப்பிட்ட நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதும், இந்த கருவியில் அந்த விவரம் பதிவாகிவிடும். மேலும் ரேஷன் பொருட்கள் வந்து கொண்டிருக்கும் விவரம், வரும் வழியில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுதல் போன்ற விவரங்களும் பதிவாகும்.

எஸ்எம்எஸ் மூலம் விவரம்

இந்த கருவியில் சம்பந்தப் பட்ட நியாயவிலை கடையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளின் விவரங்களும் பதிவு செய்யப்படும். அத்துடன் குடும்ப அட்டைதாரரின் செல்பேசி, ஆதார் எண்களும் பதிவு செய்யப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த கருவியில் அந்த விவரம் பதிவு செய்யப்படும். இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் விபரம், அளவு, விலை, மொத்த தொகை, இன்னும் என்னென்ன பொருட்கள் வாங்காமல் பாக்கி யுள்ளது போன்ற விபரங்கள் உடனடியாக அவர்களது செல்பேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். பில் வழங்கப்படமாட்டாது. மேலும், இந்த கருவி மூலம் கடையின் கையிருப்பு, தினசரி விற்பனை போன்ற விவரங்களை உயரதி காரிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

குடோன்களில் சர்வர்

ஓம்னே அகேட் சிஸ்டம்ஸ் நிறுவன தூத்துக்குடி மாவட்ட மேலாளர் எஸ்.சிவசெல்வராஜன் கூறும்போது, ‘தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த கருவி தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 நியாயவிலை கடைகளுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுவிட்டன. அதனை இயக்குவது குறித்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கருவிகளில் குடும்ப அட்டை விவரங்கள், ஆதார் எண், செல்பேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான குடும்ப அட்டைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் இந்த கருவியை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எவ்வாறு விற்பனை செய்வது என்பது குறித்து தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் இந்த கருவிகளின் செயல்பாட்டை கொண்டுவர திட்டமிட்டு பணி யாற்றி வருகிறோம்.

இந்த கருவி செயல்பாட்டுக்காக மாவட்டத்தில் உள்ள 9 குடோன்களிலும் சர்வர்கள் அமைத்துள்ளோம். மேலும், ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு பொறியாளரை பொறுப்பாளராக நியமித்துள்ளோம். இக்கருவி மூலம் விற்பனையாளர்களின் பணிச் சுமை குறையும். எந்த விவரங்களையும் பதிவேடுகளில் அவர்கள் பதிவு செய்ய தேவையில்லை. மொத்தத்தில் பேப்பர், பேனாவுக்கு இனி வேலை இல்லை’ என்றார் அவர்.

முறைகேடுகள் தடுக்கப்படும்

மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன் கூறும்போது, ‘மாவட் டத்தில் 4.81 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதுவரை 3.5 லட்சம் குடும்ப அட்டைகளின் விவரங்கள் கருவிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விற்பனை யாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 1-ம் தேதி முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதுவரை சோதனை அடிப்படை யில் நியாயவிலைக் கடைகளில் இந்த கருவிகள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். ஆதார் அட்டை விவரம் பதிவு செய்வதால் ஒருவரது பெயரில் ஒரு குடும்ப அட்டை மட்டுமே இருக்கும். மேலும், பொருட்கள் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளும் தடுக்கப்படும்’ என்றார் அவர்.

Friday, May 27, 2016

ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் .... என்.மகேஷ்குமார்

கோடை விடுமுறை, தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் திருப்பதியில் இன்று முதல் தெலுங்கு தேச கட்சி மாநாடு தொடங்க உள்ளதால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து இக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திருப்பதிக்கு வந் துள்ளனர். இவர்களில் பலர் நேற்று சுவாமி தரிசனத்துக்கு சென்றனர். இதனால் நேற்று திருமலையில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணத்தினால், சர்வ தரிசனம் செய்ய 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 கம்பார்ட்மெண்ட்களும் நிறைந்து வெளியிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், தங்கும் அறைகள் கிடைக்காமல் பலர் அவதிக்குள்ளாயினர். இரவில் பிளாட்பாரங்களில் படுத்து உறங்கினர். லட்டு பிரசாதம் வாங்கவும், தலைமுடி காணிக்கை செலுத்தவும் பல மணி நேரம் க்யூவில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதேபோன்று அன்னதான சத்திரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Supreme Court refuses to stay President's NEET ordinance

NEW DELHI: The Supreme Court on Friday quashed a plea asking the court to stay the President's ordinance that allowed states to have their own medical entrance examinations.

That means, for now, states can go ahead with their own separate medical examinations and they don't have to use the single National Eligibility Entrance Test (NEET) results for admitting students.

The apex court said staying the NEET ordinance would create further confusion in the minds of students.

"Lets us not create further confusion on entrance examination and let students appear for test with certain amount of certainty... We will hear plea after the vacation," the court said.

President Pranab Mukherjee on Tuesday signed an order that allows state boards to skip NEET for a year. The ordinance - or executive order - cleared by the Cabinet last week, was aimed at "partially" overturning a Supreme Court order.

The top court ruled last month that NEET would be the only test for admission to medical courses in India. It turned down an appeal by several states who wanted to hold their own separate medical entrance exams. The top court order said all government colleges, deemed universities and private medical colleges would have to use NEET's results and not their own entrance exam results for admission.

The petition to stay that ordinance was filed by Anand Rai, the whistle-blower of the Vyapam scam. The petitioner alleged that the ordinance frustrated the order of the top court that has directed implementation of NEET from the current academic year.

Rai said that the ordinance completely contradicts the Centre's stand before the top court. The Centre had backed the implementation of a single test for admission in MBBS/BDS courses in all medical colleges.

He said the Centre batted for NEET when the matter was being adjudicated before the SC, but did a U-turn on the issue and took the ordinance route to frustrate the court's order and defer implementation of common entrance examination.

The SC had ruled that admission to MBBS/BDS courses would be conducted only through NEET. It scrapped the entrance tests by various state governments and private medical colleges.

மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடரப்பட்டது. .
மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதி, நுழைவுத் தேர்வில் (என்இஇடி) இருந்து மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்திருந்தார். இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக ஆனந்த்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடத்தப்பட்டது. விசாரணையில், மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சில மாநிலங்களுக்கு தற்கலிகமாக மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் குழப்பங்கள் நேரிடலாம். எனவே மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியும் கவலையும்!


By ஆசிரியர்

First Published : 26 May 2016 01:49 AM IST

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் 93.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டும் வேளையில், இந்த முடிவுகள் காட்டும் உண்மைகள் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கவலையையும் அளிக்கின்றன. அந்தக் கவலைகளில் முதலிடம்பெறுவது தமிழ் வழிக் கல்வி மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதே.
அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களின் தரவரிசையில் தமிழ்நாடு முழுமைக்கும் 10 பேர் மட்டுமே இடம்பெறுகிறார்கள். இந்த பத்து பேரிலும்கூட, ஐந்து பேர் தமிழ் வழியில் பயின்றவர்கள்.
தமிழை முதல் மொழிப் பாடமாகப் படித்து மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் (அதாவது 499, 498, 497 மதிப்பெண்கள் பெற்றவர்கள்) 276 பேர். ஆனாலும் இவர்களில் அனைத்துப் பாடங்களையும் தமிழ்வழியில் படித்தவர்கள் 4 பேர் மட்டுமே. ஜீவஸ்ரீ (498, தேனி), மரியா மெடோனா (497, நெல்லை),
எம். தரணி (497, கரூர்), லின்சி செரினா (497, மயிலம்பாறை, விழுப்புரம் மாவட்டம்) ஆகியோர் மட்டுமே தமிழ்வழியில் படித்து சிறப்பான தேர்ச்சி காட்டியவர்கள். இந்த 4 மாணவர்களையும் தமிழ் உலகம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் பயின்று மாநில அளவில் தரவரிசையில் இடம்பெற்றுள்ள இந்த 9 மாணவர்களும் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அரசுப் பள்ளியில் பயின்று தரவரிசையில் இடம்பெற்ற, ஆங்கிலவழியில் பயின்ற மாணவர்கள் 5 பேரும் அரசுப் பள்ளிகளைப் பெருமைப்படுத்தியுள்ளனர். இந்த 14 பேருக்கும் தினமணியின் சிறப்பு வாழ்த்துகள், பாராட்டுகள்.
சமச்சீர் கல்வி அமலில் உள்ள நிலையில், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே பாடத்திட்டம்தான் கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும், அரசுப் பள்ளிகள் தொடர்ந்து பின்தங்குவது, அவற்றின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் குறைத்துக்கொண்டே வருகிறது. தனியார் பள்ளிகள் இந்த அவநம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. கட்டணம், நன்கொடை என்று வசூல் வேட்டை நடத்துகின்றன.
ஆங்கிலவழி பயிலும் மாணவர்களே அதிக மதிப்பெண் பெற முடியும் என்கிற தோற்றம் மறைந்தபாடில்லை. ஆகவே, தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர் படையெடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தாலும் அந்த மாணவர்களால் ஒரு கடிதம்கூடப் பிழையின்றி ஆங்கிலத்தில் எழுத முடிவதில்லை என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. பிறகு ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டி, தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்?
அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு இல்லை என்ற வழக்கமான குற்றச்சாட்டுகளைவிட மிக முக்கியமாக அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு அரசுப் பள்ளிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இல்லை என்பதுதான். "தனியார் பள்ளியில் சேர்த்தாலும்கூட நாங்கள் எங்கள் குழந்தைகளைத் தனிவகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிப்பதால் மட்டுமே அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுவிடுவதில்லை. பிறகும் ஏன் இலவச கல்வி தரும் அரசுப் பள்ளிகளைத் தவிர்க்கிறோம் என்றால், அரசுப் பள்ளி வளாகங்கள் சுகாதாரமாக இல்லை என்பதால்தான் என்பதுதான் அவர்கள் பரவலாகக் கூறும் காரணம்.
அரசுப் பள்ளிகளில் நல்ல கழிவறைகள், குடிநீர் வசதியைக்கூட குழந்தைகளுக்கு உறுதிப்படுத்துவதில்லை. கழிவறைகளில் தண்ணீர் கிடையாது. கதவுகளும்கூட இருப்பதில்லை. அப்படி இருந்தால் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை எப்படி பெற்றோர்கள் அனுப்புவார்கள்? தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம்தான். ஆனால் கொஞ்சம் சுமாரான, அன்றாடம் சுத்தம் செய்யப்படுகின்ற கழிவறைகள் உள்ளன. பள்ளிக்கு வராவிட்டால், தொலைபேசியில் தகவல் கொடுக்கிறார்கள். முடிந்த வரை விசாரிக்கிறார்கள். இதையெல்லாம் அரசுப் பள்ளிகளில் எதிர்பார்க்க முடியாது. இதனை சரி செய்தாலும் போதும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகளும் தமிழ்வழிக் கல்விக்கான வகுப்புகளை, ஆங்கிலவழி வகுப்புகளுக்கு இணையாக நடத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ்வழிக் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தாய்மொழியில் படிப்பதும், கூடவே ஆங்கில அறிவைப் பெறுவதும்தான் சிறந்த கல்வி முறையாக, மேம்படுத்தும் கல்வியாக அமையும்.
ஜெர்மனி, இத்தாலி, சீனா, ஜப்பான், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் அடிப்படைப் பள்ளிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. உயர்நிலை அல்லது கல்லூரி அளவில்தான் அங்கே தேவைப்படுவோருக்கு ஆங்கில வழிக் கல்வி அளிக்கப்படுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கேயும் அந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது.
அதேபோல, அரசுப் பள்ளிகள் அனைத்தையும் தூய்மையாக, கட்டுப்பாடு மிக்கதாக மாற்ற வேண்டும். உள்ளூர் அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து அரசுப் பள்ளியை மேம்படுத்தலாம். மாவட்டந்தோறும் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து நடத்த அனுமதிக்கப்படலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு அதிகரித்தாக வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களை ஆசிரியர்களாகப் பணியாற்றத் தகுதியற்றவர்களாக அரசு அறிவிக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் போனால், விரைவிலேயே அரசுப் பள்ளிகளில் சேர யாருமே முன்வராமல் இயல்பாகவே மூடு விழா நடக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!

Thursday, May 26, 2016

State governments can either conduct their own exams or opt for NEET

State governments can either conduct their own exams or opt for NEET


All private colleges will now come under the ambit of National Eligibility cum Entrance Test (NEET), the Centre said on Tuesday. However, in a major relief to parents and students, while considering the state governments' concerns over state-level examinations already conducted in regional languages and different syllabi from All India Pre-Medical Test, the Centre has given state governments the option to either conduct their own exams or opt for NEET to fill undergraduate seats.

For PG courses though, the exam will be held under NEET for 2017-18 session in December this year. The declaration came after President Pranab Mukherjee on Tuesday gave his assent to the ordinance on NEET.

"NEET is being implemented from the current year itself for UG admissions in all private institutions in respect of their seats. The first phase was conducted on May 1 and the second phase shall be held on July 24. Only state government seats in government medical colleges and state government seats in private institutions will have exemption if the concerned state government so chooses in the current year," said JP Nadda, Union health minister.

"The management quota seats shall be filled by the respective private colleges, associations of colleges and/or private universities, deemed universities through the NEET UG-2016 examination only, in all the states even for this year. From next year, starting with PG examination in December 2016, NEET will fully apply without any exemption," he added.

"The states that have deferred the exams are West Bengal, Chhattisgarh, Assam and Andhra Pradesh. PG exams in December 2016 will be a complete NEET," said Nadda.

"The states had not effectively put forth their views in the right perspective before the Supreme Court. In order to provide them relief, we brought this Ordinance," he said.

The medical fraternity has raised concerns over exorbitant fees expected to be charged by private colleges with the implementation of NEET. "As private colleges have hinted at an increase in fees, there has to be strict regulation in this regard on the state level and there should be a cap on fees in private colleges," said Dr AK Chandna, member, Dental Council of India (DCI).

நுழைவுத்தேர்வு அவசர சட்டத்திற்கு எதிராக மனு



DINAMALAR

புதுடில்லி : மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த்ராய் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தவர் இந்த ஆனந்த்ராய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி இவர் நாளை சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரி செலுத்தாத கோடீஸ்வரர்கள் பெயர்கள் வெளியிடப்படும்: வருமான வரித் துறை தகவல்

ஒரு கோடிக்கு மேல் வரி நிலுவை களை செலுத்தாமல் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய விவரங் களை வெளியிட வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமாக வரு மான வரி செலுத்தாமல் உள்ளவர் கள் குறித்த விவரங்களை அறி விக்க நடப்பாண்டு தொடக்கத்தி லேயே வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.
வரி செலுத்த தவறியவர்கள் குறித்த விவரங்களை தேசிய அளவில் நாளிதழ்களில் வெளியிடும் நடைமுறையை கடந்த ஆண்டிலிலேயே வருமான வரித்துறை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டில் வரி நிலுவை வைத்திருந்த 67 நபர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் நிலுவை வைத்துள்ளவர்களின் முகவரி, பான் எண், நிறுவனங்கள் என்றால் பங்குதாரர்கள் விவரம் போன்ற விவரங்கள் வெளியிடப்படும்.
இதற்கு முன்னதாக வரி நிலுவை செலுத்த தவறியவர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. ரூ.20 கோடி முதல் ரூ. 30 கோடி வரி நிலுவை வைத்துள்ளவர்கள் விவரம் மட்டுமே வெளிவரும். ஆனால் புதிய விதிமுறைகள்படி ரூ.1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.1 கோடி நிலுவை வைத்துள்ள வர்களது பெயர்களும் வெளியிடப்பட உள்ளது.
இது `நேம் அண்ட் ஷேம்’ என்கிற திட்டத்தின் கீழ் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2016-17 நிதியாண்டின் மார்ச் 31 தேதி வரை 1 கோடிக்கும் அதிகமாக வரி நிலுவை செலுத்தத் தவறியவர்கள் பெயர் கள் வெளியிடப்படும். குறிப்பாக அடுத்த ஆண்டு ஜூலை 31க்கு முன்னதாக வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த தையல் தொழிலாளியின் மகள் அரசியலில் ஈடுபட விருப்பம்

எஸ்எஸ்எல்சி தேர்வில், அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.ஜனனி, 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது மதிப்பெண்: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்- 100, சமூக அறிவியல் 100. ஒட்டுமொத்தமாக மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
என்.ஜனனி கூறியதாவது: எனது சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள், தலைமையாசிரியை என அனைவருக்கும் பங்கு உண்டு. என்னுடைய தந்தை நாரயண சாமி, தாய் சுமதி. தந்தை தையல் தொழில் செய்து வருகிறார்.
பள்ளியில் சிறப்பு வகுப்பு கற்பிக்கப்பட்டது. இதனால் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேல்நிலை வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்து படிக்க உள்ளேன். ஐஏஎஸ் தேர்வு எழுதி ஆட்சியராக பணியாற்ற வேண்டும். மேலும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்றார்.
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா, வேலூர் சோளிங்கர் திருமதி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நேகா கவுசர் ஆகியோர் 500-க்கு 496 மதிப்பெண் எடுத்து 2-ம் இடம் பெற்றனர்.
ஈரோடு சவக்காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஹரிணி, புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.பவ தாரணி, புதுக்கோட்டை ராணி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி நிஷாத் ரஹீமாமா, கரூர் மலைக்கோவிலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சந்திர சேகர், திருவண்ணாமலை பெருங் காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.மேகலா, திருவண்ணாமலை இரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி என்.தீபா, சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கேத்ரீன் அமலா ராக்கினி ஆகியோர் 500-க்கு 495 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம்

முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்ல’ கிரகப்பிரவேச பத்திரிகை.

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவரது போயஸ் தோட்ட இல்லத்தின் கிரகப்பிரவேசம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972-ம் ஆண்டு மே 15-ம் தேதி நடந்துள்ளது.

கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக் கப்பட்டுள்ளது.

கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக் குமாறு உள்ள இந்த பத்திரிகையை, பம்பாய் வாகில் நிறுவனம் வடி வமைத்திருந்தது.

முகவரி விளக்கம்

கிரகப்பிரவேசத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் இடம் தேடி அலையக்கூடாது என்பதற்காக, ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின்புறம் - ரயில்வே தேர்வாணைய அலுவலகத்துக்கு அருகில் - கதீட்ரல் சாலை’ என மிக விளக்கமாக இதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரகப்பிரவேசத்தை முன்னிட்டு மாலை விருந்தின்போது பிரபல இசைக்கலைஞர் சிட்டி பாபுவின் வீணைக் கச்சேரி நடப்பதாகவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!


எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர்.

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!


M.G.R. திரையுலகில் இருந்த காலத்தில் பிரபலமான நடிகர்களாக இருந்தும், சந்தர்ப்பங்கள் சரியாக அமையாததால் அவருடன் நடிக்க முடியாமல் போன நடிகர்கள் சிலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜெய்சங்கர்.

1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கென தனி பாணியில் நடித்து மக்கள் கலைஞர் என்று புகழ் பெற்றவர் ஜெய்சங்கர். இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆரைப் போலவே பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். ராஜேந்திர குமார், தர்மேந்திரா நடித்து இந்தியில் வெளியான ‘ஆயி மிலன் கி பேலா’ என்ற படம்தான் தமிழில் ‘ஒரு தாய் மக்கள்’ ஆனது.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. 1966-ம் ஆண்டில் ‘பேசும் படம்’ பத்திரி கையில் விளம்பரமும் வெளியானது. ஜெய்சங்கர் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். அவருக்கு ‘வெள்ளிக் கிழமை ஹீரோ’ என்றே பெயர். அந்த அளவுக்கு பெரும்பாலும் வெள்ளிக் கிழமைதோறும் அவரது படங்கள் வெளியாகும். ஒரே ஆண்டில் 16 படங் களில் கதாநாயகனாக நடித்தவர்.

திரைத்துறையில் மட்டுமின்றி; அர சியல் துறையிலும் எம்.ஜி.ஆர். பிஸி யாக இருந்ததால் படப்பிடிப்புகளில் அவர் கலந்துகொள்வதில் தாமதம் ஏற்படும். இடையில், 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் வேறு. பல மாதங்கள் அவருக்கு படங்களில் நடிக்க முடியாத நிலை. ‘ஒரு தாய் மக்கள்’ படத் தயாரிப்பும் தாமதமாகி 1971-ம் ஆண்டுதான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து படம் வெளியானது.

பல படங்களில் நடித்து வந்த ஜெய் சங்கருக்கு எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல, கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அவர் நடித்த மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், ‘ஒரு தாய் மக்கள்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக முத்துராமன் நடித்தார்.

ஜெய்சங்கர் எந்தக் கட்சியையும் சாராதவர். பிற்காலங்களில் திமுக தலை வர் கருணாநிதி வசனம் எழுதிய சில படங்களில் நடித்தார் என்ற வகையில் அவர் மீது திமுக முத்திரை குத்தப்பட்டது. ஆனால், கட்சி நிர்வாகிகளின் சொத்துக் கணக்கு கேட்டதற்காக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின், 1974-ம் ஆண்டில் ஜெய்சங்கர் நடிப்பில், ‘உன்னைத்தான் தம்பி’ என்ற படம் வெளியானது. அதில் ஜெய்சங்கர் பேசும் வசனங்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதர வாக அவர் பேசுவது போல இருக்கும்.

1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்ட பின், தேர்தலை தமிழகம் எதிர் நோக்கியிருந்த நேரம். அப்போது வெளி யான ‘பணக்காரப் பெண்’ படத்தில், ‘ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,  ராமச்சந்திரா, தர்மம் ஜெயிக்கும் என்று சொன்னவனே ராமச்சந்திரா,  ராமச் சந்திரா, நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே...’ என்ற டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இடம்பெறும். இந்தப் பாடலை படத்தில் ஜெய்சங்கர் பாடி நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக கருதப்பட்ட இந்தப் பாடல் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், ஜெய்சங்கர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று அர்த்தமல்ல. ஒரு நடிகர் என்ற முறையில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஜெய்சங்கர் செய்தார். மற்றபடி, எல்லோரையும் நண்பர்களாகக் கருதி பழகியவர் அவர்.

சத்யா ஃபிலிம்ஸ் பேனரில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘கன்னிப் பெண்’ படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தது எம்.ஜி.ஆர்.தான்! அப்போது, எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகள் பற்றி அவருக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனைகள் கூறினார்.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் மெய்க் காப்பாளர்களில் ஒருவரும் ஸ்டன்ட் நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணனும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். சென்ற பிறகு, அவரைப் பற்றி தனது கருத்தை ராமகிருஷ்ணனிடம் ஜெய்சங்கர் பகிர்ந்துகொண்டார். ‘‘எம்.ஜி.ஆரிடம் எனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கு உதவும் அவரது தாராள குணம். திரையுலகிலும் அரசியலிலும் அவரவர்கள், தாங்கள் சார்ந்த கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிறருக்கு கொடுப்பதை விளம்பரத்துக்காகக் கொடுக்கிறார் என்று குறை கூறலாம். ஆனால், பிறருக்கு உதவும் அவரது உயர்ந்த குணத்தை என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் ரசிக்காமலும் பாராட்டாமலும் இருக்க முடியாது’’ என்று ஜெய்சங்கர் தன்னிடம் கூறி யதை நினைவுகூர்கிறார் கே.பி.ராம கிருஷ்ணன்.

‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. அது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ‘‘எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது கொடுத்திருப்பது நியாயம் தானா?’’ என்று ஜெய்சங்கரிடம் நிருபர் கள் கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள் விரும்பினால் தவிர படம் ஓடாது. எம்.ஜி.ஆர். படங்கள் சில 25 வாரங்கள் தாண்டி ஓடுகின்றன. 35 வருடங்களாக சினிமாவில் நடித் துக் கொண்டிருக்கிறார். பல வருடங்க ளாக கதாநாயகனாக நடித்து வருகி றார். இன்னும் பல படங்களுக்கு கதா நாயகனாக ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார். ஆக, மக்கள் ஏற்றுக் கொண் டார்கள் எனும்போது தேர்வுக் குழுவினர் ஏற்றுக் கொண்டதை நாம் ஏன் மறுக்க வேண்டும்? ‘பாரத்’ விருது அவருக்கு வழங்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று ஜெய்சங் கர் மனமார எம்.ஜி.ஆரை வாழ்த்தினார்.

‘பாரத்’ விருது பெற்றதற்காக பத்திரி கையாளர்கள் சங்கம் சார்பில் சென் னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, ஜெய்சங்கரின் இந்தப் பேட்டி யைப் பற்றிக் குறிப்பிட்டார். ‘‘உண்மை எப்படி இருக்கிறது என்பதல்ல; அந்த உண்மையை வெளியில் சொல்ல துணிவு வேண்டும். அதற்காக ஜெய் சங்கருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு தன்னைப் போலவே பிறருக்கு உதவும் ஜெய்சங்கரைப் பிடிக்கும். உண்மையையும் பிடிக்கும்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்.


எம்.ஜி.ஆரோடு ஜெமினிகணேசன் நடித்த ஒரே படம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘முகராசி’. எம்.ஜி.ஆரின் அண்ணனாக ஜெமினி கணேசன் இந்தப் படத்தில் நடித்திருப்பார்.

Tuesday, May 24, 2016

ஜெ., பதவியேற்பு:'மாஜி'க்கள் ஏமாற்றம்

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு கிடைக்காததால், தே.மு.தி.க., 'மாஜி'க்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள் சுந்தர்ராஜன், பாண்டியராஜன், நடிகர் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சாந்தி, சுரேஷ்குமார், அருண் சுப்பிரமணியன். இவர்கள், கடந்த ஆட்சி காலத்தில், அ.தி.மு.க., ஆதரவாளராக செயல்பட்டனர். ஆட்சி காலத்தின் இறுதியில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்;
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். இதில், பாண்டியராஜனுக்கு மட்டுமே, தேர்தலில்
போட்டியிட அ.தி.மு.க., தலைமை வாய்ப்பு வழங்கியது. அவர் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மற்றவர்கள், 'சீட்' கிடைக்காததாலும், அ.தி.மு.க.,வினர் தங்களை ஓரம் கட்டியதாலும், கடும் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு கிடைக்கும் என, இவர்கள் எதிர்பார்த்தனர். இதற்காக சிலர், இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டு அழைப்பிதழை பெற, அ.தி.மு.க., தலைமை
அலுவலகத்தில் முயற்சித்தனர். ஆனால், கடைசி வரை அழைப்பு கடிதம் கிடைக்கவில்லை. இதனால், ஏழு பேரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர்;
விரக்தியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.- நமது நிருபர்- -

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...