புது தில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடரப்பட்டது. .
மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதி, நுழைவுத் தேர்வில் (என்இஇடி) இருந்து மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்திருந்தார். இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக ஆனந்த்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடத்தப்பட்டது. விசாரணையில், மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சில மாநிலங்களுக்கு தற்கலிகமாக மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் குழப்பங்கள் நேரிடலாம். எனவே மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment