Monday, May 16, 2016

தேர்தல் விடுமுறையை ஈடுசெய்ய விதிமீறும் ஐ.டி., நிறுவனம்

பதிவு செய்த நாள்: மே 15,2016 21:36

எழுத்தின் அளவு:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, சென்னையில் உள்ள தனியார், ஐ.டி., நிறுவனம், தேர்தல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஊழியர்களை, மே, 21ல் பணிக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியுள்ளது.'அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தேர்தல் நாளன்று, அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பதால், மற்றொரு விடுமுறை நாளில் பணி செய்து, அதை

ஈடுசெய்யுமாறு சில, ஐ.டி., நிறுவனங்கள் கூறிஇருந்தன; இது குறித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் கிளைகளை உடைய, சர்வதேச ஐ.டி., நிறுவனம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தன் ஊழியர்களுக்கு, விடுமுறை தினமான, 21ம் தேதி சனிக்கிழமை பணிக்கு வரக் கூறி, ஒரு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளது.

அதில், 'அலுவலக தேவை இருப்பதால், மே, 21ல் அனைவரும் பணிக்கு வரவேண்டும்; உங்கள்

ஒத்துழைப்புக்கு நன்றி' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் செய்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என, ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024