Tuesday, May 17, 2016

இனோவா’ போய் ‘கிறிஸ்டா’ வந்தது

Return to frontpage




பன்முக பயன்பாட்டு வாகன பிரிவில் தனி முத்திரையை பதித்த வாகனம் இனோவோ. ஆனால் இனி இனோவா நம் கைகளுக்கு கிடைக்கப்போவதில்லை. பயப் பட வேண்டாம் இனோவாக்கு பதிலாக புதிய இனோவா கிரிஸ்டாவை கொண்டு வந்துள்ளது டொயோட்டா நிறுவனம்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் புதிய இனோவா கிறிஸ்டாவை காட்சிப்படுத்தியது டொயோடா நிறுவனம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தாலும் கிறிஸ்டாவுக்கான முதல் கட்ட அறிமுகம் சென்னை, மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 10 நாட்களுக்குள்ளேயே 15,000 கார்களை முன்பதிவு செய்துள்ளனர். அதுவும் டாப் எண்ட் கார்களையே அதிகம் முன்பதிவு செய்துள்ளனர். அந்த அளவுக்கு இனோவா கிறிஸ்டா வாகன பிரியர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது.

ஏனெனில் பன்முக பயன்பாட்டு வாகனத்தின் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்தது இனோவா. அதுமட்டுமல்லாமல் தோற்றத்திலும் பயன்பாட்டிலும் அனைவரையும் ஈர்த்த வாகனம். பழைய இனோவாவை அப்படியே தொழில்நுட்ப ரீதியாகவும் தோற்றத்திலும் அப்டேட் செய்து புதிய வெர்ஷனாக கிறிஸ்டாவை தயாரித்துள்ளனர். பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் இந்த வாகனம் வெளிவந்துள்ளது.

ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட், ஜி என நான்கு மாடல்களில் தற்போது இனோவா கிறிஸ்டா வெளிவந்துள்ளது. இனோவா கிறிஸ்டாவுக்கு சிறப்பம்சமே புதிய இன்ஜின்தான் என்கிறார்கள். 2.8லிட்டர் தானியங்கி டீசல் இன்ஜின் மற்றும் 2.4லிட்டர் டீசல் இன்ஜின் என இரு வகைகளில் வந்துள்ளது.

புதிய இனோவா கிறிஸ்டாவின் நீளம் 4735 மிமீ, அகலம் 1830 மிமீ, உயரம் 1795 மிமீ. பழைய இனோவாவை விட பெரியதாக இருக்கும் வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெளிப்புறத் தோற்றத்திலும் தானியங்கி எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் என மாற்றங்களை செய்திருக்கிறது.

7 அங்குல தொடுதிரை, பின்புற சீட்டில் லேப்டாப் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கேபின் வசதி, பின்பக்க சீட்டை எளிதாக நகர்த்திக் கொள்ளும் வசதி, சூழலுக்கு ஏற்ப குளிர்நிலையை நிர்ணயிக்கும் நுட்பம், டிரைவர் சீட்டை தானியங்கி முறையில் நகர்த்திக் கொள்ளும் வசதி என உட்புறத் தோற்றத்தில் கவரக்கூடிய அளவிற்கு மாற்றங்களைச் செய்துள்ளது. பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள இனோவா கிறிஸ்டாவின் விலை ரூ. 14 லட்சத்திலிருந்து ரூ. 21 லட்சம் வரை இருகிறது. பழைய இனோவாவை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும் பயன்பாட்டு வசதிகள் கிறிஸ்டாவில் அதிகம் என்கின்றனர்.

சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் பங்கேற்ற டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை குழுமத்தின் துணைத்தலைவர் பி. பத்மநாபன், ‘பன்முக பயன்பாட்டு வாகனம் என்பதை மாற்றி பன்முக செயல்திறன் என்ற வகையில் இனோவாவின் இரண்டாம் தலைமுறையான கிறிஸ்டாவை வடிவமைத்துள்ளோம். எங்க ளுக்கு 6 லட்சம் வாடிக்கை யாளர்கள் இருக்கின்றனர். இது இன்னும் அதிகமாகும். வாடிக்கையாளர் திருப்தி சுற்றுச்சூழல் என இரண்டையும் கருத்தில் கொண்டே நாங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுகிறோம்' என்று தெரிவித்தார்.

ஆடம்பரம், செயல்திறன், அழகான வடிவமைப்பு என கிறிஸ்டா இதே பிரிவில் உள்ள மற்ற வாகனங் களை விட கிறிஸ்டா வாடிக்கை யாளர்களுக்கு முழு திருப்தியை தரும் என்பதில் ஐயமில்லை. முந்தைய இனோவாவை விட விற்பனையில் சாதனை படைக்குமா என்பதை பொ றுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024