ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்..
இரா.வினோத்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாறி, தற்போது தமிழக அரசியல் களம் வேறுவிதமாக காட்சியளிக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ளன. முதல்வர் போட்டியில் ஜெயலலிதாவை முந்தி விட்டார் கருணாநிதி என ஊட கங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நாளை வெளியாகும் தேர்தல் முடிவை ஜெயலலிதா பெரிதும் எதிர்பார்த்து கொண்டி ருக்கிறார்.
ஒருவேளை தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால், ஆட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வியூகங்கள் அமைத்து வருகிறார். அதேபோல முடிவுகள் பாதகமாக வந்தால் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், களையெடுக்க வேண்டிய தலைகள் குறித்து திட்டங்களை தீட்டி வருகிறார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தீர்ப்பு எப்படி வரும்?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளைவிட, உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்று தான் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. ஏனென்றால் ஊழல் வழக்கில் வெளியாகப் போகும் இந்த தீர்ப்புதான் உண்மையில் ஜெயலலி தாவின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கில் கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. எனவே உச்சநீதிமன்றம் இவ்வழக்கை கோடை விடுமுறை காலத்திலே தீர்ப்பை அறிவிக்க முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக வருகிற ஜூன் 1-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து, அன்றைய தினம் அரசு தரப்பு, குற்றம்சாட்டப்பட்டோர் இறுதி தொகுப்பு வாதத்தை முடிக்க காலக்கெடு விதித்துள்ளது.
ஒருவேளை வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் அன்றைய தினமே முடிவடைந்தால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைக்க வாய்ப்பு இருக்கிறது. மாறாக, கர்நாடக அரசு தரப்பிலோ, ஜெயலலிதா தரப்பிலோ கால அவகாசம் கோரினால் முடிந்தவரை வழக்கை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே வழக்கின் ஆவணங்களை அலசி ஆராய்ந்துள்ள உச்சநீதி மன்ற நீதிபதிகள், தீர்ப்பை அறிவிக்க பெரிதாக கால அவகாசம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிபதி குன்ஹாவின் தண்டனை தீர்ப்பை உறுதி செய்யுமா அல்லது நீதிபதி குமாரசாமியின் விடுதலை தீர்ப்பை மீண்டும் அறிவிக்குமா என அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லியிலே தங்கி இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய குரல்கள் எழுந்துள்ளன. கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது ஆச்சார்யாவுக்கு மிரட்டல்கள் வந்ததால், இம்முறை தீர்ப்பு வெளியாகும்போது கூடுதல் பாது காப்பு கோர ஆச்சார்யா முடிவெடுத் துள்ளார். குறிப்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் ஆச்சார் யாவுக்கு ஆதரவாக களமிறங்கி யுள்ளார். இந்நிலையில் வழக் கறிஞர் ரத்னம் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘‘நீதியை நிலைநாட்ட துணை புரியும் அரசு வழக் கறிஞர் ஆச்சார்யாவுக்கு இடை யூறாக இருக்க கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜ ராகும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’என முறை யிட்டு இருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் வழக் கறிஞர் ரத்னம், ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்த தாக ஊடகங்களில் தவறான செய்தி வெளியானது.
இது தொடர்பாக ஆச்சார்யா கூறுகையில்,
‘‘வழக்கறிஞர் ரத்னம் என்னை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தமிழகத்தில் பலர் என்னை எதிர்க்கும் நிலையில் வழக்கறிஞர் ரத்னம் எனக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீதியை நிலைநாட்ட துடிக்கும் ரத்னம் போன்றவர்களின் ஆதரவு என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது’’ என்றார்.
தமிழக தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஆகிய வற்றுக்கு இடையில் வழக்கறிஞர் ரத்னத்தின் மனு ஜெயலலிதாவுக்கு சவாலாக மாறியுள்ளது. அரசு வழக்கறிஞரை மிரட்டிய விவகாரத்தை உச்சநீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. எனவே இந்த மனு தீர்ப்பின் போக்கை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment