Thursday, May 19, 2016

32 வருடங்களுக்கு பிறகு.. தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடித்து அதிமுக சாதனை Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-3-decade-aiadmk-win-continuously-tamilnadu-254076.html

சென்னை: 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை.

 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான, அதிமுக 144 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 48 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்று அதிமுகவை தொடங்கிய இந்த, முதல் தேர்தலிலேயே அக்கட்சி வெற்றிவாகை சூடியது. இரு கட்சிகளுக்கும் முறையே, 33.52 மற்றும் 24,89 சதவீத வாக்குகள் கிடைத்தன. எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியிலும், கருணாநிதி அண்ணாநகர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

 1980ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 162 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 69 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 48.92 சதவீதம், அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 44.43 சதவீதம். மதுரை மேற்கு தொகுதியில் எம்ஜிஆரும், அண்ணா நகர் தொகுதியில் கருணாநிதியும் வெற்றி பெற்றனர்.

 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுகவும், கருணாநிதி தலைமையில் திமுகவும் மோதின. இதில் அதிமுக 195 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக 34 தொகுதிகளை மட்டுமே வென்றது. கருணாநிதி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர், ஆண்டிப்பட்டியில் அமோக வெற்றி பெற்றார். அதிமுகவுக்கு வந்த வாக்கு சதவீதம், 53.87 சதவீதமாகும். திமுகவுக்கு 37 சதவீத வாக்குகள் கிடைத்தன. முந்தைய தேர்தலைவிட வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு உயரவே செய்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இல்லை என்பதை அது காண்பித்தது. 

இப்படி ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த அதிமுக, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989ல் நடந்த தேர்தலில் பிளவுபட்டு ஜெ அணி, ஜா அணி என பிரிந்து மோதியது. இதில் திமுக எளிதில் வென்று, கருணாநிதி முதல்வரானார். ஆனால் ஆட்சி கலைப்புக்கு பிறகு, 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரான இந்த தேர்தலில் அதிமுக 224 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஜெயலலிதா பர்கூர் தொகுதியிலும், கருணாநிதி துறைமுகம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் மக்கள் திமுக மீது இந்த அளவுக்கு வெறுப்பை காட்டினர்.

 இதன்பிறகு 1996ல் திமுக 221 தொகுதிகளில் வென்று பழி தீர்த்தது. அதிமுகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன. பர்கூரில் ஜெயலலிதா தோற்றார். சேப்பாக்கத்தில் கருணாநிதி வென்றார். சொத்துக்குவிப்பு, ஆடம்பர திருமணம் போன்றவை ஜெயலலிதாவுக்கு வரலாறு காணாத அடியை பெற்றுக்கொடுத்தது. 

இதன்பிறகு, 2001 சட்டசபை தேர்தலில் அதிமுக 196 இடங்களிலும், திமுக 37 தொகுதிகளிலும் வென்றது. 2006 சட்டசபை தேர்தலில் திமுக 163 தொகுதிகளிலும், அதிமுக 69 தொகுதிகளிலும் வென்றது. 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 31 தொகுதிகளில் மட்டும் வென்றது. இப்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்துள்ளது. 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை. 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-3-decade-aiadmk-win-continuously-tamilnadu-254076.html

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024