Sunday, May 22, 2016
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இளம் வயதிலேயே இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார் சங்கரன்கோவில் சட்டப் பேரவை உறுப்பினர் ராஜலட்சுமி. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட இளம்பெண்கள் பாசறையில் இணைந்தார் ராஜலட்சுமி. கடந்த 2004 ஆம் ஆண்டில், இளம்பெண்கள் பாசறையின் சங்கரன்கோவில் 18-வது வார்டு செயலாளரானார். சங்கரன்கோவில் பேரவை உறுப்பினராக இருந்த கருப்பசாமி மறைந்ததைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக இருந்த முத்துச்செல்வி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2014ல் நடைபெற்ற சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்காகன இடைத் தேர்தலில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, போட்டியின்றி தேர்வு பெற்றார் ராஜலட்சுமி. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சி தலைமை ராஜலட்சுமிக்கு 'சீட்' வழங்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களிலேயே மிகவும் இளையவர் ராஜலட்சுமி. 30 வயது நிரம்பிய ராஜலட்சுமி அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளதோடு, இளநிலை கல்வியியலும் பயின்றுள்ளார். இவரது கணவர் வி.முருன். இத்தம்பதியினருக்கு ஒன்பது வயதில் ஹிரணி என்ற மகளும், 7 வயதில் பிரதீப் என்ற மகனும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...
No comments:
Post a Comment