தமிழகத்தில் நடந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நேற்று நடந்தது. நாடுமுழுவதும் 52 நகரங் களில் 1,040 மையங்களில் நடைபெற்ற தேர்வை சுமார் 6.60 லட்சம் மாணவர் கள் எழுதினர். தமிழகத்தில் சென்னை யில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை யில் 39 மையங்களில் நடந்த தேர்வை எழுத சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 2-ம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப் பட உள்ளது. இதுபற்றி தமிழகத்தில் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாடு முழுவதும் எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டும் தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 26 ஆயிரம் மாணவர்களில் 8 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை” என்றனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாடுமுழுவதும் பல்வேறு விதமான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நேரத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சிபிஎஸ்இ கல்வி முறையில் நுழைவுத் தேர்வு நடத்தப் படுவதால், கிராமப்புற மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிடும்.
இந்த நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை வடமாநில மாணவர்கள் பிடித்துவிடுவார்கள். அதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரி யான கல்வி முறையை கொண்டு வந்த பிறகு, நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும். தற்போது உள்ள முறையில் பிளஸ் 2 கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. புதிய நுழைவுத் தேர்வால் பிளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்றனர்.
No comments:
Post a Comment