Thursday, May 19, 2016

கடும் பின்னடைவால் வெறிச்சோடியது தேமுதிக அலுவலகம்


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. இதனால் தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று நிலவரப்படி தேமுதிக 2.3% வாக்குகள் பெற்றிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி பின் தங்கியே இருந்ததால் தேமுதிகவின் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியே காணப்படுகிறது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024