இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அன்புமணி ராமதாஸ் முதல்வராக பதவி ஏற்பார் என கூறிவந்த பாமக 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளன. இதில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் பின்னடைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னடைவு குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், மக்கள் ஊழலுக்கும் மோசமான நிர்வாகத்திற்கும் ஆதரவாக வக்களித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றார்.
மேலும், நாங்கள் இலவசத்தை நம்பவில்லை. இலவசங்களை அறிவிக்கவில்லை! மாநில தொழில் வளர்ச்சிக்கும், மக்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை அறிவித்து எங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து சென்றோம். இளைஞர் நலனுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்தோம்.
ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருந்த தமிழ்நாட்டை ஐந்து வருடங்களில் முன்னுக்கு கொண்டு வரும் யதார்த்தமான சாத்தியம் உள்ள திட்டங்களை முன்நிறுத்தி இருந்தோம். ஆனால், மக்கள் தந்த இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்றார் அன்புமணி ராமதாஸ்.
No comments:
Post a Comment