Sunday, March 12, 2017

பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி




'பத்தினி தெய்வம்' என, தன்னை இழிவாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு, 'உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம் என, நிரூபித்து விட்டீர்கள்' என்று, பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் சசிகலா அணி ஆதரவாளரும், தலைமை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், தன் முகநுால் பதிவில் கூறியுள்ளதாவது:முன்னாள் முதல்வர் பன்னீரின் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்ப்பது அல்லது ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது. அதுவும் முடியாவிட்டால், தேர்தலுக்கு வழிகாணுவது. இந்த சதி திட்டத்துக்கு சப்பைக்கட்டு கட்ட, இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார்; தப்பாட்டம் ஆடுகிறார்.

பத்தினி தெய்வங்கள்

பாத்திமா பாபு, லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும், அவருக்கு கிடைத்து விட்டது. ஆனால், பார்த்த முகங்களையே திரும்பத் திரும்ப பார்த்து, அரசு வீட்டில் இருந்து கொண்டு, அரசியலில் காணாமல் போன ஆட்களையும், காலாவதியான தலைவர்களையும், வீட்டில் கூட்டி வைத்துக் கொண்டு, கும்மாளம் போடுகிறார்.இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார்.

உங்கள் தட்டில் இருப்பது சோறா?

இது தொடர்பாக, அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பாத்திமா பாபு மற்றும் நடிகை லதா ஆகிய இருவரும், ஊடகங்களிடம் எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில், நாஞ்சில் சம்பத்தின் முகநுால் பக்கத்தில் போய், பாத்திமா பாபு போட்டிருக்கும், 'கமென்ட்' இது தான்:'சம்பத் அவர்களே... உங்கள் வாந்தியை பொது வெளியில் எடுத்து உள்ளீர்கள். நேரமிருந்தால், பின்னுாட்டங்களைப் படித்து பாருங்கள். உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம்' என, நிரூபித்து விட்டீர்கள்.இவ்வாறு பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

-- நமது நிருபர் - -
இணையதளத்தில் புது பிரிவு அறநிலையத்துறை அறிமுகம்
  • அறநிலையத்துறை இணையதளத்தில், பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக கோவில்களின் நிகழ்வுகள், திருவிழாக்கள், வழிகாட்டி, ஓலைச்சுவடி, ஆகமம் போன்றவை குறித்த தகவல்கள் உள்ளன. தற்போது, 'இணைய சுற்றுலா' என்ற தலைப்பில், புதிய பகுதி 
  • இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  • இணைய சுற்றுலா பகுதியில், முதல் கட்டமாக, திருவண்ணாமலை, தஞ்சை, பழநி, காஞ்சி, கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், திருச்செந்துார், நாகை, நெல்லை கோவில்கள் இடம் பெற்றுள்ளன. இக்கோவில்களின் வரலாறு, 
  • இ - சேவை, பூஜை நேரம், திருவிழாக்கள், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக கோவிலை, 360 டிகிரி கோணத்தில் பார்வையிடலாம். இந்தப் பகுதி
  • யில், விரைவில் பிரதான கோவில்கள் அனைத்தும் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

  • - நமது நிருபர் -
சொத்து விற்றதில் கிடைத்த பணம் அண்ணனுக்கு தராத தம்பிக்கு சிறை

பூர்வீக சொத்தை விற்றதில், அண்ணனுக்கு உரிய பங்கு பணத்தை தராமல் ஏமாற்றிய தம்பிக்கு, மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, சைதாப்பேட்டை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

சென்னை, அடையாறு சாந்தி காலனியைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை, நான்கு பேரும் சேர்ந்து, 2011ல், 39 லட்சத்திற்கு விற்றனர்.
சொத்தை வாங்கியவர், நான்கு பேருக்கும் தலா, 9.56 லட்சம், பிரித்து கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், பிரேமாவின் இளைய மகன் பாலன் பெயருக்கு, முழுத்தொகையையும் வரைவோலையாக கொடுத்துள்ளார். 

பாலன் அந்தத் தொகை யை சகோதரர் மற்றும் சகோதரிக்கு பிரித்துக் கொடுக்கவில்லை. அதனால், 'தனக்கு வர வேண்டிய பணம் வரவில்லை' என, அவரின் சகோதரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அவருக்கு சேர வேண்டிய தொகையை, பாலன் கொடுத்ததால் வழக்கு முடிக்கப்பட்டது.
அதேபோல, பாலனின் அண்ணன் நீலகண்டனும், தனக்கு தர வேண்டிய பங்கு பணத்தை தராமல் தம்பி ஏமாற்றுவதாக, 2014ல், சாஸ்திரி நகர் போலீசில் புகார் கொடுத்தார். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு நடந்து வந்த போது, நீலகண்டன் இறந்து விட்டார். அதனால், அவரது மனைவி திலகவதி, வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். 

சைதாப்பேட்டை, ௯வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் சங்கர் சமீபத்தில் தீர்ப்பளித்தார்.
அதில், சொத்தை விற்றதில், அண்ணனுக்குரிய பங்கை தராமல் ஏமாற்றிய பாலனுக்கு, மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

அபராதத்தை கட்டத் தவறினால், மேலும், ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கில், அரசு சார்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார். இருப்பினும், தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பாலன் அப்பீல் செய்ய, ௨௦ நாட்கள் அவகாசம் தரப்பட்டது.

- நமது நிருபர் -
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி மகாமக குளத்தில் புனித நீராடல்

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று, மாசி மக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே விழா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாசி மாத விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, 12 சிவாலயங்களிலிருந்து, சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர்.பின், அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து, நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தீர்த்தவாரியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து, மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மாசி மகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, வைணவத் தலங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை சக்கரபாணி சுவாமி உபநாச்சியாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின், காலை, 9:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. மாலை சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகபெருமாள், தாயாருடன் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர்.

ராஜிவ் கொலையாளிகள் விடுதலையாகாதது ஏன் முன்னாள் நீதிபதி கேள்வி

மதுரை, ''காந்தியடிகள் கொலையாளிகள் 18 ஆண்டுகளுக்கு பின் விடுதலையாகினர். ராஜிவ் கொலையாளிகள் 22 ஆண்டுகளுக்கு பிறகும் கூட விலையாகாதது ஏன்,'' என உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கேள்வி எழுப்பினார்.

மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:

இந்தாண்டு பொங்கல் முடிந்ததும் வெயிலால் கொதிப்பாக உள்ளது. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், தாமிர பரணி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னை என இரண்டு ஆண்டாக உயர் நீதிமன்றங்கள் கொதிப்பாக உள்ளது.
''ஊழல் இல்லை என யாராவது கூறினால் அது நேர்மையற்ற பேச்சு,'' என தலைமை நீதிபதி லோதா கூறினார். ''ஊழல் செய்த நீதிபதிகள்,'' என்ற பட்டியலை சாந்தி பூஷன் வெளியிட்டார். தற்போது நீதிபதி கர்ணன் பிரச்னை. ஆக ஊழல் இல்லாத இலாகாக்களில் நீதித்துறை எம்மாத்திரம். போராட்டம் வெடிக்கும் போது தான் யார் உண்மையானவர்கள், யார் துரோகிகள், யார் முகமூடிகள் என்பது பற்றி தெரியவரும்.

காந்தியடிகள் 1948 ஜன.,30ல் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் இருவருக்கு துாக்கு தண்டனை, மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பின் 1966ல் ஆயுள் கைதிகளை விடுதலை செய்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. ராஜிவ் கொலையாளிகள் 22 ஆண்டு
களுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்கலாம் என, நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். அப்போது, முதல்வராக இருந்தவர் குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி விடுதலை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காங்கிரசிற்கு வெளியே இருந்தவர்கள் இதை எதிர்த்தார்கள்.
கச்சத்தீவில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் இதுவரை 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு   உள்ளனர். 

கடல் மார்க்கமாக வந்து மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டனர். ஆனால் பாகிஸ்தான் மீனவர்
அல்லது இந்திய மீனவர் ஒருவர் கூட சுட்டுக்கொல்லப்படவில்லை. குஜராத் மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீனவர்களை குஜராத்தும் சுட்டுக்கொல்லவில்லை. ஒருவேளை குஜராத் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அரசே ஆடும்; ஆட்டம் கண்டுவிடும்.
கேரள மீனவர் ஒருவரை
சுட்டுக்கொன்றதால் இத்தாலிக்காரர்களின் நிலைமையை பார்த்தீர்களா. ஆனால் தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றுமே நடவடிக்கை இல்லை என அரசியல் நோக்கர்கள் பேசுகிறார்கள்.
இவ்வாறு பேசினார்.










உள்ளாட்சிக்கும் பொள்ளாச்சிக்கும் சண்டை! தினகரன் முன்னால் நடந்த களேபரம்



கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் நேற்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தடித்த வார்த்தைகளால் பேசி உள்ளனர். இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் டி.டி.வி.தினகரன் தவித்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சியையும் உள்ளாட்சியையும் கட்சியினர் சமாதானப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் ஆதரவாளர்கள் கூறுகையில், "உள்ளாட்சித்துறையில் டென்டர்கள், அமைச்சர் தரப்புக்கே கொடுக்கப்படுகின்றன. இதை அண்ணன் (ஜெயராமன்)தட்டிக் கேட்டார். இதை துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடமும் சொன்னார். அதற்கு அமைச்சர் வேலுமணி, 'கட்சிக்கு நான்தான் செலவு செய்கிறேன். அதனால் அப்படிதான் டென்டர் கொடுக்க முடியும்' என்று தைரியமாக சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரையும் தினகரன் சமரசப்படுத்த சிரமப்பட்டார். கட்சியினர் சமரசப்படுத்தினர். இல்லையென்றால் தகராறு அடிதடியில் முடிந்து இருக்கும்" என்றனர்.



அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கூறுகையில் , "அமைச்சர் தரப்பு கொங்குமண்டலத்தில் தனியாக கோலோச்ச நினைக்கிறது. அவருக்கு வேண்டியவர்களுக்கு கட்சிப் பதவி கொடுத்துள்ளது. இதுவே பிரச்னைக்கு அடிப்படை காரணம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இந்த மண்டலத்திலிருந்து கிடைத்ததால்
அ.தி.மு.க ஆட்சி மீண்டும் மலர காரணமானது. அதற்கு நாங்கள் எப்படி உழைத்தோம் என்று அம்மாவுக்குத் தெரியும். அமைச்சர் தரப்பினரின் அனைத்து உள்விவகாரம் சின்னம்மாவுக்கு தெரியும். அவர் மீது பல புகார்கள் கட்சித்தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்றனர்.

இதுதொடர்பாக வேலுமணியும், ஜெயராமனும் பதிலளிக்க மறுத்து விட்டனர்.



கட்சித்தலைமை வட்டாரங்கள் கூறுகையில், "இது எங்கள் கட்சி விவகாரம் என்பதால் பதில் சொல்ல முடியாது. ஆலோசனை கூட்டத்தில் இதுபோன்ற வாக்குவாதம் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்படுவது சகஜம்தான். கட்சி என்றாலே கோஷ்டி மோதல் இருக்கத்தான் செய்யும்" என்றார்

அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் கூறுகையில் "அம்மா மறைவுக்குப் பிறகு கட்சி கட்டுப்பாட்டை இழந்து விட்டது. முன்பெல்லாம் அம்மா மீது பயம் இருக்கும். இப்போது நிலைமை மாறிவிட்டது. தினகரன் முன்னால் சண்டை நடக்கிறது. சசிகலா, சிறையில் இருப்பதால் நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல செயல்படுகிறார்கள். பன்னீர்செல்வம், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கட்சித்தலைமை பயப்படுகிறது" என்றனர்.

நமது நிருபர்



பெண்களை வசியம் செய்வது, ஆவிகளுடன் பேசுவது..! போலீஸையே அதிரவைத்த மந்திரவாதி!



பில்லி, சூனியம், மாந்திரீக வகுப்பு கற்றுக்கொடுப்பதற்காக பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி பெட்டிக்குள் வைத்திருந்து பூஜை செய்த மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்ததை போன்று தற்போதும் இதேபோன்று நடந்துள்ள சம்பவம் பெரம்பலூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக பின்புறத்தில் உள்ள எம்.எம்.நகரில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அந்தவீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, பில்லி சூனியம் கற்றுக்கொடுப்பதற்காக வீட்டில் பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி வைத்திருந்து மாந்திரீகம் செய்தது தெரியவந்தது. புகாரின் பெயரில் மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை கைது செய்ததுமட்டுமில்லாமல் இங்கு பெண் சடலம் எப்படி வந்தது, யார் இந்த பெண், என்ற பல கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீஸார்.



இது குறித்து போலீஸாருக்கு புகார் கொடுத்த குமார் என்பவரிடம் பேசினோம். "பெரம்பலூர் கல்யாண் நகரைச்சேர்ந்தவர் கார்த்திக். இவர் எம்.எம்.நகரிலுள்ள வாடகை வீட்டில் நான்கு வருடமாக வசித்து வருகிறார். இவர், ஆண்டவனோடு மட்டுமில்லாமல் இறந்து போனவர்களோடு பேசுவதாகவும், அதை கற்றுக்கொடுப்பதாகவும் பல சொல்லுவார்கள். இவரிடம் உள்ளூர் மக்கள் யாரும் பேசமாட்டார்கள். ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என வெளிமாநிலத்திலிருந்து பலர் கார்களில் கார்த்திக் வீட்டிற்கு வருவார்கள். காலையில் வந்தால் அடுத்தநாள் காலையில்தான் அவர்கள், வெளியே வருவார்கள். எதற்கு வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது. நேற்று மதியம் கார்த்திக் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இவர், ஏதோ செய்கிறார் என்ற சந்தேகத்தின் பெயரில்தான் போலீஸுக்கு தகவல் தெரிவித்தேன். போலீஸார் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் மண்டை ஓடு, உக்கிரகாளியின் சிலைகள் அருகே பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுமட்டுமில்லாமல், எலுமிச்சை பழங்கள், பில்லி சூனியத்துக்கு பயன்படுத்தும் கறுப்பு மை, நிறைய கிண்ணத்தில் கறுப்பு கறுப்பாக என்னென்னமோ இருந்தது. பிறகுதான் தெரிந்தது, வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் அந்த வீட்டில், பில்லி சூனியம், வகுப்பு கற்றுக்கொண்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல், இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களை பேச வைப்பதற்கான பூஜைகளும் நடந்துள்ளது. அதற்குண்டான தடயங்களும் இருந்தது. இதைப்பார்த்த, போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அதே போல் பெண்களையும், ஆண்களையும் வசியம் செய்வது மற்றும் பல்வேறு பிரச்னைகளை மந்திரம் மூலம் தீர்த்துவைப்பதாக கூறி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வருபவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். இதனை தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த கம்ப்யூட்டரை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.



கடந்த ஏப்ரல் 18ம் தேதி பெரம்பலூர் அடுத்து நாரணமங்கலம் அருகே உள்ள மருதடி கிராமத்தில் இரவு நேரத்தில் நரபலி கொடுக்கிறார்கள் என்று பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரின் பாடாலூர் போலீஸார், மந்திரவாதி கார்த்திக் அமைத்திருந்த குடிலுக்குள் சென்று சோதனை செய்ததில், நரபலி கொடுத்தது, மண்டை ஓடு, பன்றித்தலை போன்றவைகளை வைத்திருந்தார். இந்த குற்றத்துக்காக மந்திரவாதி கார்த்திக் மற்றும் கூட்டாளிகள் சித்திக், சலீம், சாதிக், ராம்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இப்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் உண்மையான மந்திரவாதியா, இல்லை மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறாரா என்பதை முதலில் கண்டுப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இந்த கும்பல் போலீஸாரிடம் சிக்கிக்கொண்ட பிறகும் மீண்டும் இந்த தொழில் செய்கிறார்கள் என்றால், இவர்களுக்கு யார் பின் புலமாக இருப்பது. இவர்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீஸார் கண்டுபிடிக்கவேண்டும். இவர்கள் இங்கு மட்டும்தான் இந்த தொழில் செய்துகொண்டிருக்கிறார்களா, இல்லை வேறு எங்கும் கிளைவைத்து நடத்தி மக்களை ஏமாற்றிகொண்டிருக்கிறார்களா என்றும் விசாரிக்கவேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்" என்று ஆவேசப்பட்டார் குமார்.

விசாரணை நடத்திவரும் போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, "இவர்கள் புதிதாக சிக்கவில்லை. ஏற்கனவே மருதடி கிராமத்தில் நரபலி கொடுத்ததாக நாங்களே பிடித்தோம். இப்போது இரண்டாவது முறை சிக்கியிருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர், இறந்த சடலம் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது மருத்துவமனையில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும், விசாரணை நடத்தி வருகின்றோம். இப்போதுதான், விசாரணை நடந்துக்கொண்ருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு பேசுகிறோம்" என்றார்கள்.

எம்.திலீபன்

படங்கள்: ராபர்ட்

உபி-யின் பாதையில்... இனி இந்தியாவின் பயணம்!

இந்தியாவும்... உத்திரப் பிரதேசமும்...

8 கோடி ஜனத்திரள்.... 403 சட்டமன்றத் தொகுதிகள்... என்று பரந்து விரிந்து கிடக்கும் உபி-தான் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்ஜியம். ‘உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெறுபவரே இந்தியப் பிரதமராக இருப்பார்; இந்தியாவை ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே உத்தரபிரதேசத்தின் முதல்வராக இருப்பார்’ என்பது இந்திய அரசியல் விதிகளில் மிக முக்கியமான விதி.



நேருவில் தொடங்கி மோடி வரையில் நூற்றுக்கு 99.9 சதவிகிதம் சரியாக இருக்கும் இந்த விதி, உ.பி முதலமைச்சர்கள் விஷயத்தில் இடையில் கொஞ்சம் பிசகிப்போனது. பகுஜன்சமாஜ்ஜின் மாயவதியும், சமாஜ்வாடியின் முலாயம்சிங்கும், பி.ஜே.பியின் கல்யாண்சிங்கும், காங்கிரஸைக் காலிசெய்து அந்தப் பிசகை உருவாக்கினார்கள். அதன்பிறகு பி.ஜே.பி-யையும் துரத்தி அடித்து மாயவதியும் முலாயம்சிங்கும் மாறிமாறி கோலேச்சிக் கொண்டிருந்தனர். இந்தியாவை ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் உத்தரபிரதேசத்தை அதன் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால், 2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பழைய விதிக்குள் உத்தரபிரதேசத்தை கச்சிதமாகப் பொருத்தி வைத்துவிட்டது. இப்போது, உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெற்ற மோடியே இந்தியாவை ஆள்கிறார்; இந்தியாவையே ஆளும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவரே உத்தரபிரதேசத்தின் முதல்வராகப் போகிறார்.

பில்டிங்கும் ஸ்டிராங்... பேஸ்மட்டமும் ஸ்டிராங்...

உத்தரபிரதேசத்தில் பி.ஜே.பி பெற்றுள்ள இந்த வெற்றி அந்த மாநிலத்தின் சட்டமன்றத்தில் மட்டும் எதிரொலிக்கப் போவதில்லை. இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள்ளும் புகுந்து இந்தியாவின் தலையெழுத்தை எழுதப்போகிறது. இதுநாள்வரை ‘பில்டிங் ஸ்டிராங்... பேஸ்மட்டம் வீக்’ என்றரீதியில் ‘மக்களவையில் அசுர பலம்... மாநிலங்களவையில் மோசமான பலவீனம்...’ என்று பி.ஜே.பி நொண்டியடித்துக் கொண்டிருந்தது. பி.ஜே.பி எந்த மசோதாவைக் கொண்டுவந்தாலும் அது மக்களவையில் சாதாரணமாகக் கரையேறியது; மாநிலங்களவையில் மூச்சுத் திணறி மூழ்கிக் கிடந்தது. அதில் இருந்து தப்பிக்க மத்திய அரசு ‘அவசரச் சட்டம்’ என்ற ரகசிய வழியைக் கண்டுபிடித்தது. எந்த ஆட்சியிலும் இல்லாதவகையில் மோடியின் ஆட்சியில் அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உச்சக்கட்ட காமெடிகள் நாடாளுமன்றத்தில் அரங்கேறின. அவைகளில் இருந்த பைல்கள் யாருக்கும் தெரியாமல் ஜனாதிபதி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டன. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பைல்களைக் காணவில்லை என்று கதறிக்கொண்டிருந்தபோது, அவை ஜனாதிபதி மாளிகையில் சத்தமில்லாமல் கையெழுத்தானது.



காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி-க்களுக்கு மட்டும் தெரியாமல் அந்தப் பைல்கள் கொண்டுபோகப்படவில்லை; பி.ஜே.பி எம்.பி-க்களுக்கும் தெரியாமல் எடுத்துச் செல்லப்பட்டன. இனிமேல் அப்படிபட்ட இக்கட்டானநிலை பி.ஜே.பி-க்கு இருக்காது. உ.பி உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு விடுதலையைக் கொடுத்துள்ளன. இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் பி.ஜே.பி-க்கு கணிசமாக ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்கப்போவது உறுதி.

இரண்டு அவைகளும் இனி பி.ஜே.பி-யின் சபை!

பி.ஜே.பி-க்கு மக்களவையில் 283 எம்.பி.க்கள் உள்ளனர். அங்கு பிரச்னை இல்லை. பி.ஜே.பி தனி ஆவர்த்தனம் நடத்தலாம்; இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில் பி.ஜே.பி-க்கு 56 எம்.பி-க்களே உள்ளனர். அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 59 எம்.பி-க்களும், அ.தி.மு.க-வுக்கு 13 பேரும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 9 பேரும் உள்ளனர். இவர்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்துகொண்டு பி.ஜே.பி கொண்டுவரும் மசோதாக்களை கடுமையாக எதிர்ப்பவர்கள். அதனால் மெஜாரிட்டி பலம் இல்லாமல் அங்கு பி.ஜே.பி நொண்டியடித்துக் கொண்டிருந்தது. இனி உ.பி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்ற வெற்றியின் மூலம் எப்படியும் 10 முதல் 15 மாநிலங்களவை உறுப்பினர்களை பி.ஜே.பி பெற்றுவிடும். அதன்மூலம் மாநிலங்களவையிலும் பி.ஜே.பியின் பலம் கணிசமாக அதிகரிக்கும். அதனால் இதுவரை கிடப்பில் உள்ள மசோதாக்கள், அவரச் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறாமல் கிடக்கும் சட்டங்கள் எல்லாம் விரைவில் நிறைவேறும். வேகவேகமாக நிறைவேறும்.

உ.பி. வெற்றியும்... ஜனாதிபதித் தேர்தலும்!



உ.பி வெற்றியின் மூலம் ஜனாதிபதித் தேர்தலிலும் பி.ஜே.பி-யின் கை ஓங்கப்போகிறது. தற்போது உள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அடுத்த முறை தங்கள் கட்சியைச் சார்ந்தவரை ஜனாதிபதியாக்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது. இப்போது அதுவும் சாத்தியமாகும் தூரத்துக்கு வந்துவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநில சட்டமன்றங்களில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பார்கள். தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் வாக்குகளின் மொத்த மதிப்பு 10.98 லட்சம். இதில் 5.49 லட்சம் வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு - 708; அதன்படிபார்த்தால் மொத்தமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எம்.பி-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மதிப்பு 4 ஆயிரத்து 120. இந்த எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 474. எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. அதனால் மாநிலத்துக்கு மாநிலம் எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு மாறுபடும். அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் வெற்றி பெறும் ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்புதான் மிக அதிகம். ஏனென்றால் உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 8 கோடி. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் எம்.எல்.ஏ-க்களின் ஓட்டு மதிப்பும் அதிகம்.

 ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும் பி.ஜே.பிக்கும் கடும்போட்டி இருந்தது. முழுமையாக உ.பி தேர்தல் முடிவுகள் வெளியாகி பி.ஜே.பி அங்கு ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பி.ஜே.பி-க்கே சாதகமாக முடியும். மொத்தத்தில் இனி நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி கொண்டுவரப்போகும் எல்லா சட்டங்களும் திட்டங்களும் உ.பி-யின் உதவியில் நிறைவேறும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பி.ஜே.பி-யின் சபைகளாகும். ஜனாதிபதி மாளிகையும் விரைவில் பி.ஜே.பி வசமாகும். இத்தனை சாத்தியங்களையும் பி.ஜே.பி-க்கு சாதகமாக்க உள்ளது உ.பி. தேர்தல் முடிவு. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தன் பயணத்தைத் தொடங்கிய பி.ஜே.பி, இனி உ.பி-யின் உதவியில் தன் இலக்கை நோக்கி வேகமாக ஓடும். இந்தியாவை அந்த வழியிலேய தன் போக்குக்கு எளிதாக இழுத்துச் செல்லும். பி.ஜே.பி-யின் இந்தப் பயணம் இந்தியாவுக்கு நன்மையில் முடியுமா... தீமைகளைக் கொண்டு வந்து சேர்க்குமா... என்பதை இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகே தீர்மானிக்க முடியும்.


ஜோ.ஸ்டாலின்.

மீண்டும் வருகிறது பழைய ஸ்டேட்டஸ் வசதி...தோல்வியை ஒப்புக்கொள்கிறதா வாட்ஸ்அப்? #WhatsappUpdate

புதிய ஸ்டேட்டஸ் வசதிக்கு பயனாளர்களிடம் இருந்து நிறைய அன்லைக்ஸ் குவிந்ததால், தனது பீட்டா வெர்ஷனில் மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் வசதியை சோதனை செய்கிறது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த மாதம் 24-ம் தேதி புதிய ஸ்டேட்டஸ் வசதியை அறிமுகம் செய்தது. இதன்படி வீடியோ, Gif மற்றும் புகைப்படங்களை ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். பின்பு இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் கழித்து மறைந்துவிடும். இந்தப் புதிய அப்டேட் வந்ததில் இருந்து, இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய விமர்சனங்கள் குவிந்தன. அனைவருடைய ஸ்டேட்டசையும் பார்க்க முடிவது, நாம் யார் ஸ்டேட்டசை பார்த்தாலும் தெரிவது, தினமும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய வேண்டும் என அதில் சில குறைகள் இருந்ததால், மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் அப்டேட்தான் வேண்டும் என சோஷியல் மீடியாக்களில் கமென்ட் அடித்தனர் நெட்டிசன்ஸ். இதனை நோட் செய்த வாட்ஸ்அப், தற்போது தனது பழைய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வசதியை பீட்டா வெர்ஷனில் சோதனை செய்கிறது. இதனைப் பயன்படுத்த நீங்கள் வாட்ஸ்அப் பீட்டா பயனளாராக மாறி, ஆப்பை அப்டேட் செய்தால் போதும்.



புதிய அப்டேட் செய்தாலும், தற்போது இருக்கும் 24 மணி நேர ஸ்டேட்டஸ் வசதி மாறாது. அதனை நீங்கள் இப்போதும் பயன்படுத்தலாம். அதே சமயம், உங்களுடைய 'Settings' பகுதிக்கு சென்று, உங்கள் புரொபைல் பிக்சரை க்ளிக் செய்வதன் மூலமாக, நீங்கள் பழைய மாதிரியான டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். உங்களுடைய டி.பி.,க்கு கீழே இருக்கும் 'About and Phone number' என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்து உங்கள் புதிய ஸ்டேட்டஸை வைக்க முடியும். இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் ஆனாலும் மறையாது. அத்துடன் முன்னர் இருந்த Available, Busy, At school, At the Movies, At work, In a meeting போன்ற ஸ்டேட்டஸ் ஆப்ஷன்களும் மீண்டும் வந்துள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம். ஆனால் இந்த ஸ்டேட்டஸ் பகுதியை காலியாக விட முடியாது. ஒருவேளை நீங்கள் அப்டேட் செய்துவிட்டு, இந்தப் பகுதியில் எந்த ஸ்டேட்டஸும் வைக்கவில்லை என்றால், உங்களுடைய பழைய ஸ்டேட்டஸ் தானாகவே அப்டேட் ஆகிவிடும். பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி என்பதால், உங்களுடைய இந்த டெக்ஸ்ட் ஸ்டேட்டஸை வேறு யாரும் தற்போது பார்க்க முடியாது.



இந்த பீட்டா வெர்ஷன் இன்னும் சிலருக்கு வரவில்லை. விரைவில் இந்த வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும். அதன்பின்பு பீட்டா மட்டுமின்றி, அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும். இதுமட்டுமின்றி இன்னும் ஒரு குட்டி மாற்றம் ஒன்றையும் செய்துள்ளது வாட்ஸ்அப். குறிப்பிட்ட நபருக்கு ஃபைல்களை அனுப்ப ஃபைல்களை அட்டாச் செய்யும் போது, அட்டாச் ஐகானை க்ளிக் செய்து அனுப்புவோம். அந்த ஐகானை தற்போது இடம் மாற்றியுள்ளது வாட்ஸ்அப். இதற்கு முன்பு மேற்பகுதியில் இருந்த இந்த ஐகான், தற்போது கேமரா ஐகானுக்கு அருகே இடம் மாறியுள்ளது. வீடியோ கால், வாய்ஸ் கால் இரண்டிற்கும் தனித்தனி ஐகான்கள் இருக்கின்றன.

இந்த சோதனையின் மூலம், தனது புதிய ஸ்டேட்டஸ் வசதி தோல்வி அடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறது வாட்ஸ்அப்.

எப்படி பீட்டா வெர்ஷன் அப்டேட் செய்வது?

கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, வாட்ஸ்அப் பக்கத்திற்கு செல்லவும். அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் “Became a beta tester” என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் கீழே இருக்கும் I’M IN என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப்பின் பீட்டா பயனாளராக மாறிடலாம்.

Saturday, March 11, 2017

சிங்கப்பூருக்குள் நீந்தி வர முயன்ற ஆடவர்கள் கைது

சிங்கப்பூருக்குள் நீந்தி வர முயன்ற ஆடவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது வயது 30; மற்றவருக்கு 33.
அதிகாலை சுமார் ஒன்றேகால் மணியளவில், உட்லண்ஸ் நீர்முகப்புக்கு அருகே சிங்கப்பூரை நோக்கி அவர்கள் நீந்தி வருவதைக் கரையோரக் காவற்படை அதிகாரி கண்டுபிடித்தார்.
அதையடுத்து, தரை வழிப் பாதுகாப்பு, கடற்பாதுகாப்புப் படையினர் விரைந்து செயலாற்றி அந்தச் சந்தேக நபர்களைக் கைதுசெய்தனர். போலீஸார் அந்தத் தகவலை வெளியிட்டனர்.
அந்த ஆடவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் தங்கியதாகவோ, சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகவோ நிரூபிக்கப்பட்டால், 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனையும், குறைந்தது 3 பிரம்படியும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து வெளியேறினால் 2000 வெள்ளி வரையிலான அபராதம், 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

கரப்பான்பூச்சித் தொல்லை: ஜூரோங் பாயிண்ட்டின் 2 உணவுக்கடைகள் தற்காலிக மூடல்

சிங்கப்பூர்: ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியின் கோப்பித்தியாம் உணவங்காடியின் இரண்டு கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கரப்பான்பூச்சிப் பெருக்கத்தைத் தடுக்கத் தவறியது உட்பட பொது சுகாதார மீறல்களின் காரணமாக இரண்டு வாரங்களுக்கு அந்தக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தேசியச் சுற்றுப்புற அமைப்பு கடந்த வாரம் அந்தக் கடைகளுக்கு சேவைகளை முடக்குமாறு அறிக்கை விடுத்தது.
ஒவ்வொரு கடைக்கும் $800 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு சுகாதாரத்தின் தொடர்பிலும் தனிப்பட்ட முறையில் சுத்தமாக இருப்பதன் தொடர்பிலும் நல்ல நடைமுறைகளை எப்போதும் பின்பற்றும்படி உணவு உரிமையாளர்களுக்குச் சுற்றுப்புற அமைப்பு நினைவூட்டுகிறது.

அந்த மூன்று பேர்! நாட்டையே திரும்பி பார்க்கவைக்கும் கண்டமங்கலம் கிராம இளைஞர்கள்!



இப்போதிருக்கும் இளைஞர்களை கேட்டுப்பாருங்கள். உங்களின் நோக்கம் என்னவென்று. அவர்கள் சட்டென பதில் சொல்வார்கள் "டாக்டர், என்ஜினீயர், லாயர்" என்று. ஆனால், கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்து இளைஞர்களோ, "ராணுவ வீரர்" ஆவதுதான் எங்களின் நோக்கம் என்று தடாலடியடிக்கிறார்கள்.

மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இதுவும் ஒன்று. வருடத்தில் ஒருபோகம் மட்டுமே வடவாற்று புண்ணியத்தில் விவசாயத்தை பார்க்கும் கிராமம். மீதி நாடுகள் எல்லாம் வானம்பார்த்த பூமிதான். அப்படிப்பட்ட இந்தக் கிராமத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் குறைந்தது பத்து இளைஞர்களாவது ராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள். அதன்படி, இக்கிராமத்தில் சுமார் 200க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இக்கிராமத்தை "ராணுவ கிராமம்" என்கிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளங்கீரனிடம் பேசினோம், "தமிழகத்தில், ராணுவ வீரர்கள் என்றாலே நமக்கெல்லாம் சட்டென நினைவுக்கு வருவது வேலூர் மாவட்டம்தான். அதற்கடுத்ததாக சொல்லப்படுவது இந்தக் கிராமம். சுமார் 40 வருடத்துக்கு முன்பு இப்பகுதியில் கடுமையான வறட்சி. விவசாயம் முற்றிலும் பொய்த்து போனது. அப்போது, வேறு வழியில்லாமல் இப்பகுதி மக்கள் பிழைப்புத்தேடி அண்டை மாநிலங்களுக்கு ஓடினார்கள். அப்போதுதான் அகோரமூர்த்தி, தங்கசாமி, ராமலிங்கம் என பலர் வறுமைக்குப் பயந்து அப்போது ராணுவத்தில் சேர்ந்தார்கள். அவர்களின் வழிகாட்டுதல்கள்தான் இக்கிராமத்து இளைஞர்களுக்கு ராணுவ வீரராக வேண்டும் என்ற நோக்கம் படிப்படியாக வளர்ந்தது. அதன்படி ஒவ்வொரு இளைஞர்களாக ராணுவத்தில் சேர்ந்தார்கள். இப்போது, கிராமத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களின் நோக்கமே ராணுவத்தில் சேர்வதுதான்.



அதற்காக அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளையும், சலுகைகளையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. தங்களுடைய சொந்த உழைப்பில் உடற்பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கி உடற்பயிற்சி செய்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொள்கிறார்கள். பிளஸ்2 முடித்த உடனே அதற்கான தேர்வுக்கு தயாராகிவிடுவார்கள். ஒருமுறை தேர்வில் தவறிப்போனால் அத்தோடு அதைவிட்டு விடமாட்டார்கள். அது கிடைக்கும் வரை கடுமையாக அதற்காக போராடுவார்கள். பயிற்சி செய்வார்கள். அந்தளவுக்கு மனவலிமை படைத்தவர்கள் எங்கள் கிராமத்து இளைஞர்கள். இவர்களுக்கு ராணுவத்தில் உள்ளவர்களும், முன்னால் ராணுவ வீரர்களும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இன்னும் சில ராணுவ வீரர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து போகும்போது, அவர்களுடன் சிலரை கூடவே கூட்டிகிட்டு போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்து ராணுவத்தில் சேர்வதற்கு உதவி செய்வார்கள்.



இவர்களுக்கு பிடித்த விளையாட்டே தமிழர்களின் வீர விளையாட்டான கபடிதான். இக்கிராமத்தில் சின்னப்பிள்ளைகளிலிருந்து, பெரியவர்கள் வரை எல்லோரும் கபடி வீரர்கள்தான். அதை நிரூபித்துக்கொள்ள தங்களுக்குள்ளேயே அடிக்கடி கபடிப்போட்டிகள் நடத்துவார்கள். அடுத்த வருட தேர்வுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தற்போது பெருமளவில் இளைஞர்கள் தயாராகிவிட்டார்கள். இதற்காக ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரும் 1000 ரூபாய் போட்டு அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்க உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் ராணுவத்தில் சேரும்போது அவரவர் வீட்டில் திருவிழாத்தான். அவர்கள் ஊருக்கே விருந்து வைத்துவிடுவார்கள்" என்றகிறார் முக மலர்ச்சியோடு.

- க.பூபாலன்

படம்: தேவராஜன்

அமரீந்தருக்கு பஞ்சாப் கொடுத்த பிறந்த நாள் பரிசு இது தான்!!!
பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான கேப்டன் அமரீந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளார். அமரீந்தர் சிங் பஞ்சாபில் லம்பி மற்றும் பாட்டியலா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். பாட்டியலாவில் சுமார் 52,375 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.



பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 74 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது. அமரீந்தர் சிங் மீண்டும் முதல்வராகிறார். இன்று 75 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அமரீந்தருக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்துள்ளது இந்த வெற்றி!




திருவருள் சேர்க்கும் திருச்சி ஸ்தலங்கள்! #PhotoStory

திருச்சி மாநகருக்குச் சென்றால் போதும், மனதுக்குப்பிடித்த 5 தெய்வங்களையும் தரிசிக்கலாம்.


மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்:



திருச்சி என்றாலே மலைக்கோட்டை, மலைக்கோட்டை என்றாலே உச்சிப்பிள்ளையார்தான். உச்சிப் பிள்ளையார் கோயிலை அடைய 400 படிகள் ஏறிச் சென்றுதான் சுவாமி தரிசனம் செய்யவேண்டும். மலை முழுவதும் செடி கொடிக ள் இல்லாமல் பாறையாகவே இருப்பது இந்த மலையின் சிறப்பு. மலையின் மீதிருந்து திருச்சி மாநகரைப் பார்க்க, அத்தனை அழகாக இருக்கும். உச்சிப்பிள்ளையாரை தரிசிக்கச் செல்லும் வழியிலேயே தாயுமானவர் சந்நிதியையும் தரிசிக்கவேண்டும். மலை அடிவாரத்திலும் விநாயகருக்கு தனி சந்நிதி உள்ளது.

சமயபுரம் மாரியம்மன்:



திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது சமயபுரம். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்குள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களுக்குக்கூட இங்கு வந்து வழிபட்டால், உடல் நலம் அடையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. ஶ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கை என்பதால், அரங்கனின் சார்பாக சீர்வரிசை வழங்கப்படும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெறும்.

திருவரங்கம்:



வைணவர்களின் தலைமைச் செயலகமான திருவரங்கம், 108 திவ்ய தேசங்களில் முதல் கோயிலாக விளங்குகிறது. காவிரி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்திருக்கும் இக்கோயிலில் ரங்கநாதர் சயன நிலையில் இருந்து சேவை சாதிக்கின்றார். திருச்சியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவரங்கம். 7 பிராகாரங்களுடன், 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவரங்கம் கோயிலில் கலைநயம் மிக்க வரலாற்றுச் சிற்பங்கள் பல உள்ளன.

திருவானைக்காவல்:



திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் அப்பு தலமாக (நீர்) திகழ்கின்றது. இங்குள்ள மூலவர் 'ஜம்பு' எனும் நாவல் மரத்தடியில் இருப்பதால், ஜம்புகேஸ்வரர் எனப்பெயர் பெற்றார். கருவறையில் எப்போதும் நீர் சுரந்துகொண்டே இருக்கும். அம்மன் அகிலாண்டேஸ்வரியை வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தருபவளாக இருக்கின்றாள். திருச்சியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.

குமாரவயலூர்:



திருச்சிக்கு மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குமாரவயலூர். பச்சை பசேலென இருக்கும் வாழைத் தோப்புகளுக்கு மத்தியில் இருக்கின்ற வயலூர் முருகன் கோயில் மருதநில மண்ணின் மகத்துவத்துக்கு அடையாளம். திருமணத்தடை நீக்குவதற்குரிய மிக முக்கியமான தலமாகத் திகழ்கின்றது.

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

உபி தேர்தல் பி.ஜே.பி-யின் வெற்றி சூத்திரம் இதுதான்..!


பி.ஜே.பி தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிக்காரண சூழ்நிலைகளை உருவாக்குவதில் வெவ்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். உபி தேர்தல் சூத்திரம்தான் அவர்களுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது.

ராமர் கோஷம்

உத்தரபிரதேசம் ஒரு மினி இந்தியாவைப் போன்றது. இந்த மாநிலத்தில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சொல்வார்கள். 1991- உ.பி சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் கட்டுவோம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தனர். கல்யாண் சிங் முதல்வர் ஆனார். ஆனால், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பின்னர், ஆட்சியை இழந்தது. 1997 தேர்தலிலும் ராமர் கோவில் கட்டுவோம் என்ற கோஷத்தையே பி.ஜே.பி முன் வைத்தது. எனினும் பி.ஜே.பி-பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாயாவதியின் துணையுடன் ஆட்சி அமைத்தனர். ஆட்சியைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஆட்சியை இழந்தனர்.

மாநில கட்சிகள் ஆதிக்கம்

மத்தியில் ஆட்சியில் பி.ஜே.பி ஆட்சி இருந்தபோதிலும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனைத் தொடர்ந்து பி.ஜே.பி மீது விழுந்த மதவாத கறை ஆகியவற்றால் 2002-ம் ஆண்டு உ.பி தேர்தல் பி.ஜே.பிக்கு வெற்றியைத் தரவில்லை. இந்த தேர்தலுக்குப் பின்னர் உ.பி தேர்தல் களத்தில் இருந்தே பி.ஜே.பி அகற்றப்பட்டது என்றே சொல்லலாம். மாநில கட்சிகளுக்கு இடையேதான் நீயா, நானா போட்டி இருந்தது.2002 தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த சமாஜ்வாடி கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி துணையுடன் ஆட்சி அமைத்தது. முதலில் மாயவதி 1 வருடமும் சில மாதங்களும், இரண்டாவதாக முலாயம் சிங் யாதவ் 3 ஆண்டுகளும் சில மாதங்களும் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொண்டனர்.

3-வது இடத்தில்...

2007 தேர்தலில் மாயாவதி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். பி.ஜே.பி-க்கு கிடைக்க வேண்டிய முற்போக்கு சமுதாயத்தின் ஓட்டுக்கள் கூட இந்த முறை மாயாவதிக்கு கிடைத்த து. பி.ஜே.பி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

2012 தேர்தலிலும் பி.ஜே.பி-க்கு பெரிய ரோல் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சி இரண்டுக்கும் இடையேயான போட்டியாகவே இருந்தது. சமாஜ்வாடி கட்சியின் இளம் தலைவர் என்ற வகையில் அகிலேஷ் யாதவ் பிரசாரம் பெரும் அளவில் எடுபட்டது.

1997-க்கு பின் மதவாத கட்சி என்ற கறை, தலித்களின் வெறுப்பு ஆகியவற்றின் காரணமாக உ.பி-யில் கால் பதிக்கமுடியாமல் பி.ஜே.பி திணறிக்கொண்டிருந்தது. 2014 லோக்சபா தேர்தலில்தான் உ.பி மாநிலம் பி.ஜே.பி-க்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அப்போதே உ.பி-யில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டு விட்டார்கள்.

வெற்றி கணக்கு

2014 செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநில பி.ஜே.பி தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை நியமிக்கின்றனர். 47 வயதான இவர்தான் இப்போது பி.ஜே.பி-க்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். பி.ஜே.பி தலைவர் அமித்ஷா ஆலோசனையுடன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டார். யாதவ் ஓட்டுக்களை பிரிப்பதுதான் அவர்களின் முதல் வேளையாக இருந்தது. மத்திய உளவுத்துறை மூலம் முலாயம் சிங் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தினர். அகிலேஷ் யாதவுக்கு எதிராக அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவை திருப்பி விட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது ஒன்றாக இருப்பது போல முலாயம் குடும்பம் காட்டிக் கொண்டாலும், அகிலேஷ் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்த்தது ஷிவ்பால் குரூப்.

ஜாதி ஓட்டுக்கள்...

உ.பி-யில் ஒவ்வொரு தொகுதியையும் ஜாதி வாரியாக கணக்கிட்டு, அந்த தொகுதியில் எந்த ஜாதியினர் அதிகம் என்று பார்த்து அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது பி.ஜே.பி. தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக்கூட பி.ஜே.பி நிறுத்தவில்லை. மதவாதம் குறித்து பிரசாரம் செய்யாவிட்டாலும், முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிரான ஓட்டுக்களை எங்களுக்குக் கொடுங்கள் என்பதை தமது வேட்பாளர்கள் மூலம் மறைமுகமாக வாக்களர்களுக்குச்சொன்னது. முஸ்லீம் ஓட்டுக்கள் கூட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி என இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவாக பிரிந்தன. இவை எல்லாமும்தான் அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மதவாதத்தில் இருந்து ஜாதி அரசியலுக்கு பி.ஜே.பி நகர்ந்திருக்கிறது.

-கே. பாலசுப்பிரமணி

குடும்பச் சண்டையால் வீழ்ந்தது சமாஜ்வாதி! உ.பி.யில் ஆட்சியமைக்கிறது பா.ஜனதா

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி அடைந்துள்ளது.




இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வெளியே தொண்டர்கள் ’மோடி’, ’மோடி’ என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இனிப்பு வழங்கி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி 79 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன. இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

தந்தை முலாயமி சிங் யாவுக்கும், மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டத்தை தொடர்ந்து, கட்சியை அகிலேஷ் கைப்பற்றியது. இவர்களின் குடும்ப சண்டையால் தற்போது ஆட்சியை இழந்துள்ளது சமாஜ்வாதி கட்சி.


உத்தரகாண்ட்டிலும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக
உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 55 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் 11 இடங்களை கைப்பற்றியது.




காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுவே, மக்களுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட முக்கிய காரணம். தேர்தல் பிரசாரத்தின் போது இந்தச்சூழலை பாஜக சாதகமாக பயன்படுத்தி கொண்டது. உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது.

மேடையில் சரிந்த தொண்டர்... கண்டுகொள்ளாத தலைவர்... கொதித்த மக்கள்!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் அந்தக் கட்சித் தொண்டர்களில் பலர் உயிரைவிட்டனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு, தற்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மேடையில் சரிந்தார் ஒரு தொண்டர்... அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார், அந்தக் கட்சியின் தலைவர். இதைப் பார்த்த மக்களோ கொதித்தெழுந்துவிட்டனர்.

'இமயத்துடன்' என்ற டி.எம்.எஸ் பற்றிய தொடரை இயக்கியவர், இயக்குநர் டி.விஜயராஜ். இவர், ஜெயலலிதாவின் நினைவலைகள் பற்றி ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

“1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயம். அவரது நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் ஃபிலிம் டிவிஷன் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஒருமுறை, சீனத் தூதரக அதிகாரி தலைமைச் செயலகம் வந்தபோது... அதைப் படம்பிடிக்கத் தோளில் 'டெக்'குடன் ஓடினேன். அப்போது, கீழே இருந்த கேபிள் ஒயர் தடுக்கியதால், முன்னே சென்ற மற்றொரு கேமராமேனின் கேமராவில் என் தலை மோதியது. சொல்லமுடியாத வலியால் என்னையும் அறியாமல் அந்தச் சூழலை மறந்து, 'ஐயோ... அம்மா' எனக் கத்தினேன். இதை, அங்கிருந்தவர்கள் மிகவும் சாதாரணமாகவே பார்த்தார்கள். ஆனால், முதல்வர் ஜெயலலிதா வேகமாக என் பக்கம் திரும்பி, 'தம்பி பார்த்து...பதற்றமில்லாம வேலைபாருங்க' என்றதோடு, என்னை நோக்கி நெருங்கிவந்தார். 'ஒண்ணும் இல்லீங்கம்மா... தேங்க்ஸ்' என்றேன். 'கேபிளை ஓரமாகப் போடக்கூடாதா...' என கேமராமேனைக் கண்டித்ததோடு, 'அவருக்கு மெடிக்கல் ஹெல்ப் வேணுமான்னு கேளுங்க' என என்னைக்காட்டி அருகிலிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு முதல்வர், சாதாரண ஓர் ஊழியனிடம் காட்டிய அந்தப் பரிவை இன்று நினைக்கும்போது பின்னாளில் அவர் 'அம்மா' என தொண்டர்களால் அழைக்கப்பட்டது சரியே என இப்போது உணர்கிறேன். ஒரு முதல்வராகப் பாதுகாப்பு வளையத்துக்குள் அவர் இருந்தாலும் அவர் மக்களிடம் நெருங்கிப் பழகவே விரும்பினார்'' என்று சொல்லியிருந்தார் பெருமைபொங்க.



ஆம். அவர் சொல்வது உண்மைதான். சாமான்ய மக்களின் வலி என்னவென்பதை நன்றாக உணர்ந்திருந்தவர் ஜெயலலிதா. அவர் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ மதிப்புமிகுந்த தலைவர்கள், தாங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் இதுபோன்று துயரச் சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால்... அவர்களுக்கு முதலுதவி செய்வதிலேயே முன்னுரிமை அளிப்பர். அப்படித் தம்மால் முடியாதபட்சத்தில், தன் உதவியாளர்கள் மூலம் உதவச் செய்வர். ஆனால், இன்று அப்படிப்பட்ட அரசியல்வாதிகளைக் காண்பதே அரிதாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஜெயலலிதா மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் இறந்துபோன அந்தக் கட்சியின் தொண்டர்களுடைய குடும்பங்களுக்கு, நிதியுதவி வழங்கிய நேற்றைய (9-3-17) நிகழ்வில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது, நிதியுதவி பெறுவதற்காகக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர், டி.டி.வி.தினகரன் அருகே வந்தபோது... துக்கம் தாங்காமல் பீறிட்டு அழுதபடி மயங்கி விழுந்தார். இதை, எந்தவித பதற்றமுமின்றி அருகிலிருந்த டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்த்தபடி அமைதியாக நின்றனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் விரைந்துசென்று, பரமேஸ்வரியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளியவைத்தனர். அதன்பின், அவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது வேறு கதை.

''ஆபத்தில் சிக்கித்தவிக்கும் ஒருவருக்கு உதவாமல் அப்படியே அமைதியாக நின்று உற்றுப் பார்ப்பவர்களுக்கு எதற்குத் தலைவர் பட்டம்...இதுவா, அரசியல் நாகரிகம்... கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் இருப்பவர்களா மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்'' என்று சரமாரியாக அவர்களைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர் பொதுமக்கள். மேலும், ''அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர்., அவரது வழியில் கட்சியைக் கட்டிக்காத்த ஜெயலலிதா ஆகியோரெல்லாம்கூட சாமான்ய மக்களிடம் சரிசமமாகப் பழகியிருக்கிறார்கள். ஆனால், தற்போது பதவிக்காகவும், பணத்துக்காகவும் கட்சி நடத்தும் இவர்களுக்கு மனிதநேயமும் மக்களின் வேதனைகளும் எங்கே தெரியப்போகிறது. இதற்கெல்லாம் முடிவு வரும். மக்களையும், அவர்களுடைய பிரச்னைகளையும் கண்டுகொள்ளாத இவர்களுக்குத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களாகிய நாங்கள் நல்ல பாடம் புகட்டுவோம்'' என்கின்றனர், அவர்கள்.

சாமான்யர்களோடு ஒன்றாகக் கலந்து, கைகுலுக்கி, உணவு உண்ட மரியாதைமிக்க தலைவர்கள் உண்மையிலேயே மறைந்துதான் போய்விட்டனர்!

- ஜெ.பிரகாஷ்
காணாமல் போன 'சந்திராயன்' விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா

வாஷிங்டன்: நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி, காணாமல் போனதாக கருதப்படும், 'சந்திராயன்' விண்கலத்தை, அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்துள்ளது.

சந்திராயன்:

நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'இஸ்ரோ' சார்பில், 2008, அக்டோபர், 22ல் அனுப்பப்பட்டது, 'சந்திராயன்' விண்கலம். கடந்த, 2009, ஆகஸ்ட், 29 முதல், இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காணாமல் போன, 'சந்திராயன்' விண்கலத்தை தேடும் பணி நடந்தது; ஆனால் பலனளிக்கவில்லை.

தேடும் பணி:

இந்த நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, நாசா, நிலவுக்கு தான் அனுப்பி, காணாமல் போன, விண்கலத்தை தேடும் பணியில் ஈடுபட்டது. மிக அதி நவீன ராடார்கள் உதவியுடன், நிலவின் சுற்று வட்டப் பாதையில், 200 கி.மீ., தொலைவில், தங்களுடைய விண்கலம் இருப்பதை நாசா உறுதி செய்தது. அத்துடன், 'சந்திராயன்' விண்கலமும், அந்த சுற்று வட்டப் பாதையில் இயங்கி வருவதை நாசா கண்டுபிடித்துள்ளது.

கண்டுபிடிப்பு:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, நாசாவின் ராடார் பிரிவு இதை கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்கற்கள் உள்ளிட்டவை குறித்து இந்த, ராடார் பிரிவு ஆய்வு செய்து வருகிறது. அப்போது, நிலவுக்கு அருகில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்கலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவி:

'பூமியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சிறிய ரக பொருட்களை ராடார்கள் உதவியுடன் கண்டுபிடிப்பதே கடினமானது. நிலவுக்கு அருகே சுற்றி வரும் விண்கலத்தை கண்டுபிடிப்பது அதைவிடக் கடினமானதாகும். 'தற்போது நாங்கள் மேற்கொண்ட புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வெகு தொலைவில் உள்ள பொருட்களையும் கண்டுபிடிக்க முடியும் என்பது, எதிர்கால ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய அளவு உதவும்' என, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

'Over 100 medical students got admission sans passing exams'


Ahmedabad, Mar 11, 2017, DHNS


An RTI query has revealed that over 100 students of government medical colleges in Ahmedabad had been given admissions to post graduate courses despite having failed in the entrance examinations.

According to information available, entrance test for admissions to 300 seats in post graduate medical colleges affiliated with Gujarat University were conducted in 2015. As many as 900 students appeared for 300 seats in B J Medical College and NHL college, with only 200 making it through.

Only 1.80 lakh kids immunised

Target is 3.65 lakh for administration of measles-rubella vaccine

Against the target of 3.65 lakh children to be administered the measles-rubella vaccine, the Corporation of Madurai has just covered 1.80 lakh children.
Flagging off a rally from the Tamukkum Grounds to the Collectorate, students numbering over 300, from various nursing colleges displayed placards educating the public that the vaccine would not harm but rather be protective.
The public should not go by the social media posts as they were baseless. The Corporation doctors and para-medical staff said that the vaccine was necessary and there would not be any side effect as apprehended in the social media.
Hence, mothers should bring their children in the 9-15 age group to be administered the vaccine, they said and added that it would be safe to get the children administered the vaccine for which the government organised special camps.
The Deputy Commissioner (Corporation) S. Shanthi said the vaccine would protect the children from diseases. The Deputy Commissioner of Police Arun Sakti Kumar flagged off the rally. City Health Officer Satish Raghavan and others participated.

2,300 deposits under scanner


The Income Tax Department is pursuing about 2,300 cases in Coimbatore region that have been identified for making huge deposits during the demonetisation period.
Transactions
T.P. Krishna Kumar, Chief Commissioner of Income Tax, and Principal Commissioner M. Tirumalakumar told reporters here on Friday that 18 lakh transactions made during the demonetisation period were identified as suspect ones across the country.
The region-wise details are shared in phases for the local officials of the IT department to pursue. In the first phase, about 2,300 cases found to have made huge deposits during November-December in Coimbatore, Tirupur, and the Nilgiris districts have been identified.
The department officials are asking for details from these depositors. If the response is not satisfactory, they are pursuing it with more action.
Surveys
In the last two weeks, more than 100 surveys have been conducted by the department officials in Coimbatore and Madurai regions.
The officials also explained about Pradhan Mantri Garib Kalyan Yojana, a scheme introduced in December last year and will end with March 31.
Objective
“The objective of the scheme is to utilise the black money collected post-demonetisation phase to undertake anti-poverty and development works,” according to a press release.
Under the scheme, any person can make declaration of undisclosed income and pay 30% tax of the undisclosed income, apart from penalty and surcharge.
About 25% of the amount will be deposited under the scheme and it will not give any interest and will have a lock-in period of four years.
A declaration in the prescribed form is to be made, he said.
“The consequences will be severe for those who are found to have undisclosed income and have not declared it under the scheme,” said Mr. Tirumalakumar.
Mr. Krishnakumar added that the response so far has been good for the scheme, though he did not share details of number of persons who have opted for it in the region.
The revenue realisation of the department is also good this year, he added.
×

CPWD official takes bribe by cheque, lands in CBI net

He demanded Rs. 4 lakh from a Kochi-based construction firm

The Central Bureau of Investigation has registered a case against a top Central Public Works Department (CPWD) official here on charges of accepting a bribe by cheque from a builder. When one of the cheques bounced, the official asked the builder to transfer the money online into his wife’s bank account.
The CBI’s Anti Corruption Branch received information in December 2016 that R. Sampath, Deputy Director-General, Southern Region, CPWD, entered into a criminal conspiracy with M/s Shilpa Projects, Kochi, represented by Srikumar, with respect to a tender related to a CPWD project in Coimbatore.
The official allegedly demanded a bribe of Rs. 4 lakh from the builder. He received two cheques worth Rs. 1 lakh each and deposited them into the account of his wife. After one of the cheques bounced, Mr. Sampath insisted that Rs. 3 lakh be transferred electronically.
The official wanted the firm to account the bribe money as “consultancy charges” in the name of his wife. He insisted that her Permanent Account Number (PAN) be recorded and a proper bill for the consultancy charges be generated. The firm sent the bills by email and SMS to Mr. Sampath and his wife.
The CBI registered a case against the CPWD official, Mr. Srikumar and others under the Prevention of Corruption Act, 1988.
Medical aspirants can opt to take NEET in Urdu from 2018, Centre tells Supreme Court

New Delhi:
TNN


The Centre told the Supreme Court on Friday that it would allow students aspiring to join medical courses to take the National Eligibility cum Entrance Test (NEET) in Urdu but it was not possible to permit them this year as all preparations had been made.

Appearing before a bench of Justice Kurian Joseph and Justice R Banumathi, solicitor general Ranjit Kumar said the government is ready to consider to allow students to take the test in Urdu. “We can do it from next year but it is difficult to do it this year. We cannot put the clock back as preparations have been made for the exam to be held in May ,“ he said.

The Centre was responding to the apex court's order seeking explanation why Urdu was left out as a medium of examination when students are allowed to appear in eight regional languages.. The court was hearing a plea filed by Student Islamic Organisation seeking its direction to the government to prepare question papers also in Urdu for the benefit of Urdu-speaking students to take the test in their language. Some medical aspirants have also filed petition on the issue.



Varsity sticks to UGC norms, drops fancy course names

Madurai:
TIMES NEWS NETWORK


The academic council of Madurai Kamaraj University on Friday resolved to adopt the amended May 2016 UGC regulations for PhD and MPhil courses and change the nomenclature of two MSc courses and a new MPhil course.Madurai Kamaraj University was yet to adopt the new regulations for the PhD and MPhil courses as specified by the apex regulatory body for higher education to enhance the standards, which included conducting entrance examinations and appointing international faculty for exams among other things. A minimum of 55 per cent marks in post-graduation courses will now be a man datory criterion to apply for Ph.D after completing M.Phil.A member of the academic council and the chairperson of school of energy sciences K Muthuchezhian said that the UGC regulation came into effect on May 5, 2016 and it had to be implemented without further delay . Special Officer K Ravichandran said that a booklet regarding plagiarism would be considered for distribution though the software to detect plagiarism had already been installed in the MKU library after a member raised this issue.
The nomenclature of M.Sc.Microbial Gene Technology that is offered by the Department of Microbial Technology under choice based credit system (CBCS) has been changed to M.Sc. Microbiology . Similar ly the nomenclature of M.Sc.Biochemical Technology offered by the Department of Biochemistry under CBCS has been changed to M.Sc. Biochemistry . This new nomenclature would come into effect from the academic year 20172018. The decision was taken to rename these courses as student demand for the same was decreasing, said Dr P Sudhakar, head in charge department of Microbial technology , MKU.
In addition, a new M.Phil programme, M.Phil in Microbiology under the Deparment of Microbial Technology under CBCS, is being introduced for the new academic year, for which the fee, eligibility and course structure have been framed.
It was alleged at the meet ing that there were irregularities in allotting housing quarters for professors. A Velanganni Joseph, the chairman of the School of youth Empowerment, said that he was a senior professor and a native of Dindigul who had to travel back to Dindigul after completing the coaching sessions which went on till 7 p.m. He had made representations to the Registrar in charge, G Arumugam in this regard but no action had been taken. He also said that there were some faculty members who were enjoying the luxury of having two quarters violating the norms. Council member V Chinniah said that it was aserious issue which should be looked into immediately . They were assured of appropriate action.
No action against doctor who tried to kill her father

Chennai:
TIMES NEWS NETWORK


Nearly eight months after the Chennai police chargesheeted a doctor for trying to kill her 82year-old father -a heart patient on medical support in a city hospital ICU -by pulling the plug after getting his thumb impression on a set of papers, the doctor continues to practise medicine because officials of the Tamil Nadu Medical Council have not issued orders debarring her from practising.On Friday , a group of elected members said the disciplinary committee constituted by the Tamil Nadu Medical Council recommended that Coimbatore-based Dr Jayasudha Manoharan be debarred, but the order was pending as the general council wasn't able to meet. “There is a case pending on who should be president of the council. We are 10 members in the council and at least 7 have to approve any business. That has never happened,“ said former president K Prakasam, a member of the general council. In February 2016, Dr Jayasudha's brother Dr R Jayaprakash lodged a complaint saying she tried to kill their father Dr E Rajagopal.
He also submitted CCTV footage showing her visiting Dr Rajagopal in Dr Jayaprakash's Aditya Hospital in Kilpauk, Chennai, removing a line delivering life-saving medicines through a vein in the neck.
“There are three more cases for which action is pending,“ he said. The term of the council ends in June. The committee has not met to set the ball rolling for the next election to be conducted by May .

ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல் -நீக்கல்: சென்னையில் இன்று சிறப்பு முகாம்

By DIN  |   Published on : 11th March 2017 04:08 AM  
ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, சென்னையில் 17 இடங்களில் சனிக்கிழமை (மார்ச் 11) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
1. பிராட்வே பகுதி --சென்னை நடுநிலைப்பள்ளி, எண்.44, ராமசாமி தெரு, (மண்ணடி)
2. ராயபுரம் --பி.ஏ.கே. பழனிசாமி ஆரம்பப் பள்ளி, கிரேஸ் கார்டன் முதன்மை தெரு,
(ரேணி மருத்துவமனை பின்புறம்)
3. பெரம்பூர் --சென்னை நடுநிலைப் பள்ளி, கோகுலம் (பெரம்பூர் பஸ் நிலையம் அருகில்)
4. அண்ணாநகர் --சென்னை மாநகராட்சி, 104 -வது கோட்ட அலுவலகம், லெட்டாங்ஸ் ரோடு, வேப்பேரி (சிஎஸ்ஐ ஈவார்ட்ஸ் மேனிலைப்பள்ளி அருகில்).
5. அம்பத்தூர் --அரசு உயர்நிலைப் பள்ளி, வானகரம் (ஊராட்சி மன்ற
அலுவலகம் அருகில்)
6. வில்லிவாக்கம் --அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி, பழைய திருமங்கலம்,
(செந்தில் நர்சிங் ஹோம் அருகில் -- 13 -ஆவது பிரதான சாலை முடிவில்)
7. திருவொற்றியூர் --ராமகிருஷ்ணா பள்ளி (தெலுங்கு பள்ளி), வடக்கு ரயில்வே ஸ்டேசன்
ரோடு (திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில்)
8. ஆவடி --அரசு மேல்நிலைப் பள்ளி, தண்டுரை (பட்டாபிராம் ரயில் நிலையம் அருகில்)
9. ஆர்.கே. நகர் --சென்னை துவக்கப் பள்ளி, புதுக்கடை பண்ணை, செரியன் நகர்,
புது வண்ணாரப்பேட்டை (கிராஸ் ரோடு, சக்தி மெட்டல் பின்புறம்)
10. தியாகராய நகர் --அரசினர் மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர் (புதூர் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில்)
11. மயிலாப்பூர் --இளநிலை பொறியாளர் அலுவலகம், சாஸ்திரி நகர், அடையாறு (வண்ணாந்துரை பேருந்து நிறுத்தம் அருகில்)
12. பரங்கிமலை --செயின்ட் மார்க்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, ராதா நகர் மெயின் ரோடு (ராதா நகர் வாட்டர் டேங்க் அருகில்)
13. தாம்பரம் --ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொழிச்சலூர் மெயின் ரோடு
(ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்)
14. சைதாப்பேட்டை --சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பெருமாள் கோயில் தெரு, மேற்கு மாம்பலம், (மேட்டுப்பாளையம் சர்ச் அருகில்)
15. ஆயிரம் விளக்கு --சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஸ்ட்ரான்ஸ் ரோடு, பட்டாளம் (மகாலட்சுமி திரையரங்கு அருகில்)
16. சேப்பாக்கம் --சென்னை தொடக்கப் பள்ளி, நாகப்பதெரு, புதுப்பேட்டை (மார்க்கெட் அருகில்)
17. சோழிங்கநல்லூர் --ஊராட்சி ஒன்றிய அலுவலகம். ஏழுமலை சாலை, நன்மங்கலம் (ஜெ.ஜெ. பார்க் அருகில்)

Study finds link between smartphone use and mental health of adolescents

Study finds link between smartphone use and mental health of adolescents Global concern: Expert says the pace of deterioration of mental wel...