Sunday, October 29, 2017


50 ஆயிரம் பேர், 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து விபத்துகளை குறைக்க தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில், செப்டம்பர்வரையிலான ஒன்பதுமாதங்களில், மோட்டார் வாகன விதிகளை மீறிய, 50 ஆயிரம் பேரின், ஓட்டுனர்
உரிமங்களை, போக்குவரத்து துறை ரத்து செய்துள்ளது.

குடி போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டியவர்களே, அதிகம் சிக்கியுள்ளனர். விபத்துகளை தடுக்கும் நோக்கில், இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும், அரசு எச்சரித்துள்ளது.படுகாயம்தமிழகத்தில், 2016ம் ஆண்டில், 73 ஆயிரத்து, 431 சாலை விபத்துகள் நடந்தன; 17 ஆயிரத்து, 218 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு ஜூலை வரை, 39 ஆயிரத்து, 82 சாலை விபத்துகள் நிகழ்ந்ததில், 10ஆயிரம் பேர் உயிரிழந்தனர்;44 ஆயிரத்து, 500 பேர்படுகாயம் அடைந்தனர்.விபத்துகளுக்கு, போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன விதிகளை பின்பற்றாததே காரணம் என,
ஆய்வில் தெரிய வந்துஉள்ளது. இதனால், சாலைவிதிகளை மீறுவோரின், ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.

முக்கியமாக, மோட்டார் வாகன சட்டம் - 1988, பிரிவு - 19 மற்றும், 1989, விதி, 21-ன்படி, அதிக வேகம், சிவப்பு விளக்கை தாண்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், குடி போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் உரிமங்களை, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ரத்து செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி, 2017 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 49 ஆயிரத்து, 783 பேரின், ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவற்றில், ஜூலை வரை, 9,489 உரிமங்களே ரத்து செய்யப்பட்டன.ஆகஸ்டில், சாலை விதிகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க,தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், ஆகஸ்டில், 9,105; செப்டம்பரில், 31 ஆயிரத்து, 189 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உத்தரவுபோக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர்உரிமத்தை ரத்து செய்யும்படி, உயர் நீதிமன்றம், ஜூனில் உத்தரவிட்டது.அதன்படி, போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதனால் தான், ஆக., - செப்., மாதங்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உரிமம் ரத்து செய்யும்முன், ஓட்டுனர்களிடம்விளக்கம் கேட்கப்படும். அதில், ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம்இருந்தால், குறுகிய காலத்தில், லைசென்ஸ்  புதுப்பிக்கப்படும்.லைசென்ஸ் ரத்தால், விபத்து குறையுமா என்பதை விட, விதி மீறினால், லைசென்ஸ் ரத்தாகும் என, ஓட்டுனர்கள் புரிந்து வைத்துள்ளனர். இந்த மனமாற்றத்தால் தான், சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

உரிமம் ரத்து விபரம்

ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டோரில், குடி போதை மற்றும் மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களே அதிகம்.
காரணம் லைசென்ஸ்ரத்து
அதிக வேகம் 5,836
சரக்கு வாகனங்களில் அதிக பாரம் 3,215
சரக்கு வாகனங்களில் அதிக நபர்கள் 4,646
மொபைல் போன் பயன்பாடு 16,574
போதையில் இயக்கம் 16,598
சிக்னலை தாண்டியது 2,914

வாகனங்களில் தில்லாலங்கடி
'பஸ், லாரி, வேன் உள்ளிட்ட, பொது போக்குவரத்து வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், 2016 ஏப்ரலில் அறிவித்தது. 
அதன்படி, 'கனரக லாரிகள், 80 கி.மீ., வேகத்திலும், பள்ளி வாகனம், காஸ், டீசல் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், 60 கி.மீ., வேகத்திற்கும் மேல் செல்லக் கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு, எப்.சி., எனப்படும், வாகனம் உரிமம் புதுப்பிப்பு சான்று மறுக்கப்படுகிறது. ஆனால், பலர், அக்கருவியை நிரந்தரமாக பொருத்தாமல், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில், ஒரு நாள் வாடகைக்கு வாங்கி, வாகனங்களில் பொருத்தி, சான்று பெறுகின்றனர். 
இதற்கு, ஆர்.டி.ஓ.,க்களும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை, முறைப்படுத்தாவிட்டால், விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- நமது நிருபர் -

Tamil Film Income Tax

சினிமா,பிரபலங்களின்,பரிவர்த்தனைகள்,வரித்துறையால்... கண்காணிப்பு!

நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வருமான வரித்துறையிடம் முறையாக கணக்கு தாக்கல் செய்வதில்லை. அதனால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வரித்துறை முடிவெடுத்துள்ளது. குறிப்பிட்ட கெடுவுக்குள் கணக்கு விபரங்களை தரா விட்டால் தீவிர சோதனைக்கும் ஆயத்தமாகி வருகிறது. வரும் டிசம்பருக்குள் 'அட்வான்ஸ் வரி' செலுத்தாதவர்களுக்கு சிக்கல் காத்திருக்கிறது. 'மெர்சல்' பட விவகாரத்திலும் வசூல் கணக்கு மறைக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் பாயும் என தெரிகிறது.




இது குறித்து தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

மற்ற துறைகளை விட திரைப்படத் துறையில் புரளும் பணத்தை கண்காணிப்பது மிகவும் கடினம். பெரும்பாலான தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு தரப்பட்ட உண்மையான சம்பளத்தை குறிப்பிடுவதில்லை. அவர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடும் தொகைக்கும்

உண்மையில் கொடுத்த தொகைக்கும் வித்தியாசம் பன்மடங்கு இருக்கும்.

நடிகர்கள் சிலர் சினிமா வினியோக உரிமையை ஊதியமாக பெறுகின்றனர். அதில் அவர்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதை கணிப்பது பெரிய சிரமம். திரைத்துறையில் புழங்கும் கணிசமான தொகை எங்கள் கண்களுக்கு தென்படுவதில்லை. அப்படி இருந்தும் வழக்கமாக தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி கணக்கையும் குறித்த கெடுவிற்குள் பலர் தாக்கல் செய்வதில்லை.

ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் வருமான வரியை முறையாக செலுத்துவது இல்லை. உதாரணத்திற்கு நடிகர் விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த பிரச்னையை கூறலாம். அவர் 2014 - 15; 2015 - 16 மற்றும் 2016 - 17ம் நிதியாண்டுகளுக்கு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை எங்களிடம் கட்டவில்லை. ஒவ்வொரு காலாண்டிலும் அந்த கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும்.

இதேபோல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படத்தை எடுத்து முடித்ததும் அதற்கான கணக்கை ஒரு மாதத்திற்குள் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். சில நிறுவனங்கள் மட்டுமே வரித்துறையின் விதிகளை பின்பற்றி நடக்கின்றன. பல நிறுவனங்கள் விதிகளை பின்பற்றாதது

ஆய்வில் தெரியவந்துள்ளது. அது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்நிறுவனங் களை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்க திட்டமிட்டுள்ளோம்.

நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி., வரிவிதிப்புக்கு எதிராக வசனங்கள் இருப்பதாக கூறி பா.ஜ.,வினர் கொந்தளித்தனர். அதனால் பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியது. இது வரை 200 கோடி ரூபாய் வரை வசூலாகி
இருப்பதாக தெரிகிறது. வசூல் தொடருவதால் மேலும் பல கோடி ரூபாய் ஈட்டும் என தெரிகிறது.

திரைப்படத் துறையினர் மற்றும் நடிகர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் 'அட்வான்ஸ் வரி' என்ற பெயரில் முன்கூட்டியே உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட சதவீத வரியை கணக்கிட்டு செலுத்துவர். அதன்படி நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் வரும் டிச., மாதத்திற்குள் தங்கள் வருவாய்க்கு ஏற்றவாறு அட்வான்ஸ் வரி செலுத்த வேண்டும். அதனால் 'மெர்சல்' தயாரிப்பாளரும், விஜய்யும் எவ்வளவு வரி செலுத்துகின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம். வசூலுக்கு ஏற்ப 'மெர்சல்' தயாரிப்பாளர் கணக்கு தாக்கல் செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு


மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு
மதுரை, மதுரையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமூகத்திற்கு தொண்டாற்றிய அன்னைதெரசா உள்ளிட்டோரின் மொழி, கல்வி, மருத்துவம், அரசியல் பணிகளை போற்றும் விதமாக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில், அனைத்துமருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடந்தது.வெற்றி பெற்ற 
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் 
நடந்தது.
அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத் தலைவர் நாச்சியார் தலைமை வகித்தார். முதலிடம் பெற்ற பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மாணவிஐஸ்வர்யாவிற்கு ஒரு லட்சம் ரூபாய்,இரண்டாமிடம் பெற்றவேலம்மாள் மருத்துவக் கல்லுாரி மாணவி ஹரிதாவிற்கு 75 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவி மதிகாவிற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும்தடகள போட்டியில் வென்ற வேலம்மாள் மருத்துவக் 
கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகள் 
வழங்கப்பட்டன.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன்பங்கேற்றனர். கல்லுாரி டீன் ராஜாமுத்தையா நன்றி கூறினார். கல்விக்குழும துணைத் தலைவர் கணேஷ் நடராஜன் ஏற்பாடு செய்திருந்தார்.

புறவழிச்சாலை தஞ்சையில் திறப்பு



சென்னை, தமிழகத்தில், 73 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள திட்டங்களை, முதல்வர் பழனிசாமி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.தஞ்சாவூர் நகரில், 42 கோடி ரூபாயில், 5.2 மீட்டர் நீளமுடைய, இரு வழித்தட தஞ்சாவூர் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில், 29 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுாரில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், மலட்டாறு குறுக்கே, பாலம் கட்டப் பட்டு உள்ளது. இப்பாலங்களையும், புறவழிச் சாலையையும், முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

வாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர் பட்டியலுடன், வாக்காளர்களின், 'ஆதார்' எண்களை இணைக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. அதற்கான அனுமதியை, உச்ச நீதிமன்றத்திடம் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நகர பகுதிகளில், வாடகை வீட்டில் வசிப்போர், அவ்வப்போது வீடு மாறுகின்றனர். அவர்கள், புதிய முகவரிக்கு சென்றதும், அந்தப் பகுதி வாக்காளராக, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர். அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள பெயரை நீக்க விண்ணப்பிப்பதில்லை.இதன் காரணமாக, ஒரே வாக்காளரின் பெயர், பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது. இதே போல், வாக்காளர் இறந்து விட்டாலும், அவரது உறவினர்கள், அவர் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில்லை. இதன் காரணமாக, வாக்காளர்கள் எண்ணிக்கை, அதிகரித்தபடியே உள்ளது.அரசியல் கட்சியினர், கள்ள ஓட்டு போடுவதற்காக, ஏராளமானோர் பெயரை, பல இடங்களில் சேர்த்து விடுகின்றனர். உள்ளூர் அதிகாரிகள், அரசியல் நெருக்கடி காரணமாக, அவற்றை கண்டு கொள்வதில்லை.அதன் காரணமாக, தேர்தல் கமிஷனால், 100 சதவீதம், சரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியாத நிலை உள்ளது.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதற்கான பணிகளையும், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. ஆதார் எண்ணை வைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஆனால், வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெற, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண் போன்றவை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுகின்றன. எனவே, 'வாக்காளர் பட்டியலுடனும், ஆதார் எண்ணை இணைக்க, அனுமதிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதனால், 'விரைவில் அனுமதி கிடைக்கும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.- நமது நிருபர் -
மகரவிளக்கு சீசன் முன்பதிவு துவக்கம்

சபரிமலை, சபரிமலையில், இந்தாண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கான, 'ஆன்லைன்' முன்பதிவு துவங்கியுள்ளது.கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, அம்மாநில போலீசார், 'விர்ச்சுவல் கியூ'-வை அறிமுகம் செய்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள், பம்பையில் முன்பதிவு சீட்டு மற்றும் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை காண்பித்து, அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.இந்த அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் பக்தர்கள், சபரிபீடத்தில், தனி வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவர். மரக்கூட்டத்தில் இருந்து, சரங்குத்தி செல்லாமல், சந்திராங்கதன் சாலை வழியாக பெரிய நடைப்பந்தலை அடையலாம். இங்கும் அதிக நேரம் காத்திருக்காமல், 18-ம் படியேறலாம்.படியேறிய பின், வழக்கமான வரிசையில் வரும் பக்தர்களுடன் நடைமேம்பாலத்தில் ஏறிச் சென்று, தரிசனம் செய்ய வேண்டும். இந்த ஆண்டு, மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. டிச., 23 வரை முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மெல்லிசைக்கு விடை கொடுத்தார் ஜானகி
மெல்லிசைக்கு விடை கொடுத்தார் ஜானகி
மைசூரு, பழம் பெரும் பின்னணி பாடகி ஜானகி, கர்நாடகா மாநிலம் மைசூரில் நேற்று தன் கடைசி இசை நிகழ்ச்சியில் பாடினார். இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்து அவரது பாடலை ரசித்தனர்.பிரபல சினிமா பின்னணி பாடகி ஜானகி, 80, கடந்த 1952ல் முதல் முறையாக பாடினார். அன்று முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான படங்களில் பின்னணி பாடல்களை அவர் பாடியுள்ளார்.கொஞ்சும் சலங்கை படத்தில் இவர் பாடிய சிங்கார வேலனே தேவா, 16 வயதினிலே படத்தில் பாடிய செந்துாரப்பூவே, தேவர் மகனில் பாடிய இஞ்சி இடுப்பழகி ஆகிய பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.சமீபத்தில் மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது. ஆனால் 'காலம் கடந்து தந்த இந்த அங்கீகாரத்தை ஏற்க மாட்டேன்' என அதிரடியாக அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். வயது முதிர்வினால் சமீபகாலமாக திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில், மைசூரு மானச கங்கோத்ரியிலுள்ள திறந்தவெளி அரங்கில், ஜானகியின் கடைசி இசை நிகழ்ச்சியை மன்னர் பரம் பரையை சேர்ந்த பிரமோதா தேவி, நேற்று துவக்கி வைத்தார். 
திரையுலகினர், வி.ஐ.பி.,க்கள் உட்பட பலர் வந்திருந்தனர்.
'இது தான், என் கடைசி இசை நிகழ்ச்சி; இதற்கு பின், இசை 
கச்சேரிகளில் பாடப் போவது இல்லை' என, ஜானகி ஏற்கனவே தெரிவித்திருந்ததால், இந்த நிகழ்ச்சிக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 
வந்திருந்தனர்.

சர்க்கரை விலை உயர்வு எதிர்க்கட்சிகள் கண்டனம்


சென்னை, தமிழக அரசு, ரேஷன் சர்க்கரை விலையைஉயர்த்தியுள்ளதற்கு, எதிர்க்கட்சி தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.தி.மு.க., செயல்தலைவர், ஸ்டாலின்: ரேஷன் கடைகளில், சர்க்கரை விலையை, 13 ரூபாய், 50 காசில் இருந்து, 25 ரூபாயாக உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. தேசிய உணவு பாதுகாப்புசட்டத்தில் கையெழுத்திட்டதால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஏழைகளுக்கும், மத்திய பா.ஜ., அரசுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதை, மத்திய அரசின், ஒவ்வொரு நடவடிக்கையும் உணர்த்தி வருகிறது. ஏற்க முடியாதநிபந்தனைகளை விதித்து, பொது வினியோக திட்டத்தை ரத்து செய்து விடுவரோ என்ற அச்சம், மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.சர்க்கரை மானியத்தை ரத்து செய்வதை கைவிட்டு, தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.பா.ம.க., நிறுவனர்,
ராமதாஸ்: சர்க்கரைக்கு வழங்கப்பட்ட மானியத்தை, மத்திய அரசு ரத்து செய்ததும், பா.ம.க., கடுமையாக எதிர்த்தது. ஆனால், தமிழக அரசு, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்தது. ஐந்து மாதங்களில், வாக்குறுதியை பறக்கவிட்டு, நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர்.தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவர், திருநாவுக்கரசர்: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பிரிவினருக்குமட்டும், சலுகை
விலையில், சர்க்கரை வழங்கப்படும். மற்றவர்களுக்கு வழங்கப்படாது என கூறுவது, அப்பட்டமான மக்கள் விரோதநடவடிக்கை. இதைதிரும்பப் பெறவேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறியுள்ளனர்.
சர்க்கரைக்கு பின் மண்ணெண்ணெய்ரேஷனில் அடுத்த விலை உயர்வு

ரேஷன் சர்க்கரையை தொடர்ந்து மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



தமிழக ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 13.60 ரூபாய் என்ற விலைக்கு வழங்கப்படுகிறது. இது வீடுகளில் உள்ள சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு சிலிண்டர் இருந்தால் இரண்டு லிட்டர்; சிலிண்டர் இல்லாத வருக்கு நகரம், கிராமம் என வசிக்கும் இடத்தை பொறுத்து இரண்டு முதல் ஆறு லிட்டர் வரை வழங்கப்படுகிறது. இரண்டு சிலிண்டர் இருந்தால் மண்ணெண்ணெய் கிடையாது.

தற்போது 1.30 கோடி பேர் மண்ணெண்ணெய் வாங்க தகுதி உடையவர்கள். ஆனால் 30 லட்சம்

மட்டுமே வாங்குகின்றனர். வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 45 ரூபாயாக உள்ளது. அதில் மத்திய அரசின் மானியம் சராசரியாக 30 ரூபாய்; மாநில அரசின் பங்கு 1.25 ரூபாய் வழங்கி மக்களுக்கு குறைந்தவிலைக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ 13.50 ரூபாய்க்கு விற்கப்படும் சர்க்கரை விலை வரும் 1ம் தேதியில் இருந்து 25 ரூபாய்க்கு விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷனில் தகுதியான அனைவருக்கும் வழங்க 5.90 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் தேவை. ஆனால் மத்திய அரசு தற்போது 1.70 கோடி லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது.மத்தியஅரசு மண்ணெண்ணெய் மானியத்தை நிறுத்த போவதாக அவ்வப்போது தகவல் வருகின்றன. மண்ணெண்ணெய்க்காக தமிழக அரசு ஆண்டுக்கு 40 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறது.குறைந்த விலையில் தரும் சர்க்கரையின் செலவை ஈடு செய்ய மத்திய அரசிடம் ஏற்கனவே வழங்குவதுடன்

கூடுதல் மானியம் தருமாறு கேட்கப்பட்டது; அது கிடைக்க வில்லை. சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய சுமை குறைப்பது குறித்து உயர்மட்ட குழு ஆலோசித்தது. அதில் இரண்டின் விலை யையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

ஒரே சமயத்தில் விலையை உயர்த்தினால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும். இதை தவிர்க்க முதலில் சர்க்கரை விலை உயர்த்தப் பட்டது. ஓரிரு மாதங்களுக்கு பின் மண்ணெண்ணெய் விலையும் 15 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

விமான நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் வெளியீடு


விமான நிலையம், 
Airport, ஆவணம்,Documents,  சான்றிதழ், Certification, புதுடில்லி, New Delhi, விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்,Aviation Safety Board, குமார் ராஜேஷ் சந்திரா ,Kumar Rajesh Chandra,   குரூப் ஏ கெஜடட், Group A Gazetted,
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
ஏர்போர்ட்டில் எதை காட்டலாம்?
புதுடில்லி: விமான நிலைய முனையத்தில் நுழையவும், பாதுகாப்பு சோதனையின் போதும் காண்பிக்கப்பட வேண்டிய சான்று விவரங்களை விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:

1. பாஸ்போர்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை
3. ஆதார் அல்லது மொபைல் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார்
4. பான் கார்டு
5 . டிரைவிங் லைசென்ஸ்
6. பணியிட அடையாள அட்டை
7. மாணவர்களின் அடையாள அட்டை
8. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
9. பென்சன் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. மாற்றுத்திறனாளி அடையாளி அட்டை

இதில் ஏதேனும் ஒன்றை காட்டினால் போதுமானது. விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரிய தலைவர் குமார் ராஜேஷ் சந்திரா கூறுகையில், மேற்குறிப்பிட்ட அட்டைகளை காண்பிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் அவர்கள், மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும் குரூப் ஏ கெஜடட் அதிகாரியின் லெட்டர் பேடில், புகைப்படம ஒட்டி, கையெழுத்து வாங்கி காண்பிக்கலாம்.

உள்நாட்டு விமான பயணத்தின் போது, பச்சிளம் குழந்தைகள் அல்லது சிறுவர்களை அழைத்து சென்றால், அவர்களின் பாதுகாவலர்களுக்கு உரிய சான்று இருந்தால், அவர்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சிறையில் சுவையான உணவு கைதிகள் எடை அதிகரிப்பு

இந்துார்: ம.பி., மாநிலம், இந்துாரில் உள்ள சிறையில் வழங்கப்படும் சுவையான உணவுகளால், பெரும்பாலான கைதிகளின் உடல் எடை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்துாரில் உள்ள சிறையில், 1,322 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில், சிறையில் நடந்த மருத்துவ முகாமில், கைதிகளின் உடல் எடை,கணிசமாக உயர்ந்துள்ளது தெரிந்தது.இது குறித்து, சிறை கண்காணிப்பாளர், ரமேஷ் சந்திர ஆர்யா கூறியதாவது:சிறையில் அடைக்கப்பட்ட பின், கைதிகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும். பெரும்பாலான கைதிகளுக்கு, சிறையில் வழங்கப்படும் உணவு பிடிக்காது; இதனால், அவர்களில் உடல் எடை குறையும். ஆனால், இங்கு, கைதிகளுக்கு, சிறந்த சமையல் நிபுணரை வைத்து, சமையல் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இதனால், கைதிகளே சுவையான காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தயாரிக்கின்றனர். சுவையான உணவுகள் தயாரிக்கப்படுவதால், நானும், இங்கு தான் சாப்பிடுகிறேன். சமீபத்தில் நடந்த மருத்துவ முகாமில், 70 சதவீத கைதிகளின் உடல் எடை, கணிசமாக அதிகரித்துள்ளது தெரிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
தவறான தகவல்களை நீக்க வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய வசதி

 தவறான, செய்தியை, நீக்க ,வாட்ஸ் அப், விரைவில், தீர்வு
நியூயார்க்: சரியான தகவல்களை தவறான நபருக்கு அனுப்பி இருக்கும் பட்சத்தில் அதனை நீ்க்குவதற்கு புதிய வசதிகளை விரைவில் வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்த உள்ளது.
உலகம் முழுவதும் தகவல்கள், படங்கள், வீடியோக்களை அனுப்புவதற்கு வாட்ஸ் ஆப் செயலி பெரிதும் உதவி வருகிறது. தவறாக அனுப்பிய தகவல்களை, அனுப்பிய உடன் அழிக்க முடியாமல் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

தகவல்களை நீக்க வசதி

இந்த குறைகளை போக்கும் வகையில் வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி அனுப்பப்படும் செய்தி தவறான நபருக்கு அனுப்பி இருக்கும் பட்சத்தில் அதனை 7 நிமிடங்களுக்குள் அதனை அழித்து விடும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்



ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ‘செனட்’ கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார்.

அக்டோபர் 29, 2017, 12:25 AM

சென்னை,சென்னை பல்கலைக்கழகத்தின் ‘செனட்’ கூட்டம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். பதிவாளர் பேராசிரியர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். 4 பேராசிரியர் ஜெகநாதன், புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, துணை வேந்தர் துரைசாமி பேசியதாவது:–நாட்டிலேயே காகிதம் இல்லா பரிவர்த்தனை செய்யும் ஒரே பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயர் பெற்று இருக்கிறது. தேசிய கல்வி களஞ்சியம் மூலம் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் ஆக்கப்படும். பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின்படி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மாணவர்கள் சென்று படிக்க ஊக்கப்படுத்த விரும்புகிறோம்.

எம்.பில், பி.எச்.டி. படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு பி.எச்.டி. சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்–லைனில் வழங்குதல், பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடுதல், பல்கலைக்கழக மானியக்குழு எம்.பில், பி.எச்.டி. விதிமுறைகளை (2016) பின்பற்றுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதுகலை படிப்புகளில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தரமணியில் உள்ள மாணவர் விடுதி, மாணவிகள் விடுதியாக மாற்றி திறந்து இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து பல்கலைக்கழகத்தில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, துணை வேந்தர் துரைசாமி, ஆய்வு கட்டுரைகள் மற்றும் மதிப்பீடுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்கலைக்கழக விதிமுறைப்படி, ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரை மதிப்பீடு செய்வதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் 2 பதிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் ஒருவருக்குத்தான் அவர் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றும் என்று தெரிவித்தார்.

இதற்கு செனட் உறுப்பினர்கள் காந்திராஜ், மணிவாசகம், அனுராதா உள்பட பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். இறுதியாக துணைவேந்தர், பாடத்திட்டக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்து அறிவிப்புகள் வெளியிடுவதாக தெரிவித்தார்.
கேளம்பாக்கத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்



அண்ணா பல்கலைக்கழக தேர்வை எழுத விடாமல் தடுத்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கேளம்பாக்கத்தில் மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

அக்டோபர் 28, 2017, 05:15 AM

திருப்போரூர்

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே எஸ்.எம்.கே.போம்ரா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் 30 பேரின் வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக காரணம் கூறி அவர்களை அண்ணாபல்கலைக்கழக செமஸ்டர் தேர்வை எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததோடு, அவர்களுக்கு தேர்வுக்கு செல்லும் ஹால் டிக்கெட்டையும் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து மாணவர்கள் கேளம்பாக்கம் போலீசில் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் 20 பேருக்கு பல்கலைக்கழக தேர்வு எழுத ஹால் டிக்கெட் கொடுத்தது.

அவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்தபோது, 20 பேரில் மேலும் 8 மாணவர்களின் வருகைப்பதிவு குறைவாக இருப்பதாக காரணம் கூறி ஹால் டிக்கெட்டை வாங்கி கொண்டு கல்லூரி நிர்வாகம் அவர்களை வெளியே அனுப்பியதாக தெரிகிறது.

மாணவர்கள் போராட்டம்

இதற்கு கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் 200 பேர் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை மாலை வரை நடந்தது. ஆனாலும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 8 கல்லூரி பஸ்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

போலீஸ் சமரசம்

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கல்லூரி வருகை பதிவேடு முறையாக இருந்தால் இன்று(சனிக்கிழமை) அனைவரும் தேர்வு எழுதலாம் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தேன்’ நெல்லிக்காய் தரும் நன்மைகள்



தற்போது, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த ‘தேன்’ நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது.

அக்டோபர் 28, 2017, 05:07 PM

தற்போது, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த ‘தேன்’ நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது.

இதை தினமும் சாப்பிடுவதால் கிட்டும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

இதனால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும்.

அடிக்கடி ஜலதோஷம், தொண்டைப்புண்ணால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவர வேண்டும். அதன்மூலம், உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.

தேனில் நெல்லிக்காயை ஊற வைத்துச் சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும்.

அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் ‘தேன்’ நெல்லிக் காயைச் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள மருத்துவக் குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படும். ரோமக்கால்கள் வலு வடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

ஆக, பலவித உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு ஒரு ‘சுவையான’ தீர்வு, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்!

Saturday, October 28, 2017


அமெரிக்கா செல்கிறீர்களா?..புதிய விதிமுறைகள் நாளை நடப்புக்கு வரும்

25/10/2017 18:28

https://seithi.mediacorp.sg/



அமெரிக்கா செல்லும் எல்லா விமானச் சேவைகளுக்குமான புதிய நடைமுறைகள் நாளை நடப்புக்கு வருகின்றன.
பயணிகளின் சோதனைகள் கடுமையாக்கப்படுவதுடன் விமானத்திற்குள் அனுமதிக்கப்படும் மடிக்கணினிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும்.
புதிய விதிமுறைகளில் பயணிகளிடம் பாதுகாப்புப் பற்றிய சிறிது நேர நேர்காணலும் அடங்கும்.
கடந்த ஜூலை மாதம் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பத்து விமான நிலையங்களில் இருந்து வரும் மின்னணுக் கருவிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்டது.
இருப்பினும், பாதுகாப்பை வலுப்படுத்தாத விமான நிறுவனங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் மீண்டும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது.
அப்போது புதிய விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு விமான நிறுவனங்களுக்கு 120 நாள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
புதிய விதிமுறைகள் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவுக்கான வர்த்தகத் துறை விமான நிறுவனக் குழுமம் தெரிவித்துள்ளது. 

கழிவுநீர் குட்டை நாற்றம்... திணறும் சென்னை நீதிமன்றம் !

ந.பா.சேதுராமன்



கழிவுநீர்க் குட்டை நாற்றத்தால், சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்ற சுற்றுப்புறமே திணறிக் கொண்டிருக்கிறது. குட்டையின் நாற்றம் கோர்ட்டின் பல பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது. கழிவுநீர்க் குட்டைகளால் டெங்கு பாதிப்பு இல்லை என்பதாலோ என்னவோ, சென்னையில் கழிவுநீர்க் குட்டைகள் அதிகமாகி வருகின்றன. டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் நன்னீரில் மட்டுமே வளரும் என்பதால், அனைத்து அதிகாரிகளும், வீடு மற்றும் கடைகளில் தேங்கிய நன்னீரை தேடுகிறார்கள். நன்னீர் தேங்கிக் கிடந்தால் அபராதம் விதிக்கிறார்கள். ஆக, டெங்குவிற்கு அடுத்தபடியாக கேட்கும் இன்னொரு, வார்த்தை அபராதம். இந்த இரண்டு வார்த்தைகள்தான் நாட்டில் இப்போது அதிகமாகக் கேட்கிறது. டெங்குக் காய்ச்சலால் போன உயிர்கள் குறித்த கணக்கு, உயிரோடு இருப்பவனுக்கு மரணபயத்தைக் காட்டுகிறது. டெங்குக் காய்ச்சலில் இருந்து தப்பித்தாலும், அதிகாரிகளின் அபராத வேட்டையில் பலருக்கு குளிர்க்காய்ச்சல் வந்திருக்கிறது. நன்னீர்த் தேக்கத்தோடு, கழிவுநீர்க் குட்டைகளையும் கணக்கில் கொள்வது நல்லது. நன்னீரிலேயே டெங்கு போன்ற ஆட்கொல்லிக் காய்ச்சல் உருவாகும் போது, இந்தக் குட்டைகளில் உற்பத்தியாகும் கொசுக்களால் எவ்வளவு வீரியமான வியாதிகள் பரவுமோ, யார் கண்டது ?





சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் பின்புறம் அல்லிக்குளம் வணிக வளாகம் இருக்கிறது. அண்மைக் காலமாக மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த இடம் மாறியுள்ளது. சென்னை எழும்பூரில் இயங்கிவந்த பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தற்போது இங்குதான் இயங்கி வருகிறது. அல்லிக்குளம் வணிக வளாகப் பகுதிக்குள் நுழைவதே இப்போது ஒரு சவால்தான். காரணம், அடர்த்தியான மஞ்சள் வண்ணக் கழிவுநீர்க் குட்டைகள் கோர்ட்டைச் சுற்றிலும் இருப்பதுதான். அந்தக் குட்டையில் 'டி-கம்போஸ்' நிலையில் பெருச்சாலிகளின் உடல்கள் மிதப்பது, மஞ்சள் வண்ணக் கழிவுக்கு பொருத்தமான கலர் காம்பினேஷன். பருவமழை தொடர்ச்சியாக பெய்யுமானால் இந்தக் குட்டைகள் ஒன்றாகி குளமாக மாறலாம். அப்போது அதில் மீன் பிடிக்கலாம், அந்த மீன்களைப் பிடிக்க டெண்டரும் விடலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் காத்திருந்தால் ஆயிரக் கணக்கான மக்கள், கொள்ளை, கொள்ளையாய் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.

Move to divert Mannai Express deplored

‘The diversion proposal is a breach of trust’

Commuters have opposed the planned diversion of the Mannargudi-Chennai Egmore Mannai Express via Tiruvarur from March. Now, the train goes through Thanjavur and Kumbakonam to reach Mayiladuthurai from where it will take the main line.
There is remarkable patronage for Mannai Express. Though allotted under the pooled quota, passengers are booking tickets from Mannargudi and Nidamangalam under the general quota marking boarding points at their preference.
We have been making several representations for creating general quota allotment of berths up to Kumbakonam.
We were assured that the train service would not be disturbed.
The diversion proposal was breach of trust, says A. Giri, member, Divisional Rail Users Consultative Committee.
Sale of UTS tickets at Thanjavur, Papanasam and Kumbakonam is more than those at stations allotted to the service under the general quota.
Train No 16175/76 Chennai Egmore-Karaikal and Train No 16185/86 Chennai Egmore-Velankanni Express trains are operated via Tiruvarur. Sale of UTS tickets for those trains are much lower than tickets sold for Mannai Express in Thanjavur, Papanasam and Kumbakonam collectively. If the diversion plan is implemented then the higher revenue generating A Grade stations such as Thanjavur and Kumbakonam will be left with only Uzhavan Express for connectivity to Chennai during nights.
The timings of Uzhavan Express are not convenient for the main kine users,’’ says T. Saravanan, secretary, Papanasam Train Passengers Association.
Passengers point out that the introduction of the Tirunelveli-Tambaram Antyodaya Express will in no way justify the diversion of Mannai Express as both fall under different categories. With Mannai Express originating at a near location, passengers from Thanjavur, Papanasam and Kumbakonam could get more reserved accommodation.
Users have petitioned the Railway Minister Piyush Goyal to retain Mannai Express’s present route. The Thanjavur District Rail Users’ Association has petitioned the Railways Minister and regional MPs to retain the service.

Ration sugar not so sweet anymore

Price to be doubled following Centre’s withdrawal of subsidy from June 1

The price of sugar supplied through ration shops across the State will almost be doubled from Rs. 13.50 a kg to Rs. 25 with effect from November 1 this year.
However, a GO issued by the Co-operation, Food and Consumer Protection Department on Friday clarified the revision in price would not apply for holders of the Antyodaya Anna Yojana (AAY) cards (given to the poorest of the poor).
Incidentally, it was exactly a year ago (October 27), the AIADMK government in Tamil Nadu decided to implement the Centre’s National Food Security Act, which former Chief Minister Jayalalithaa was resisting for long.
The State government’s decision follows the Centre’s withdrawal of subsidy for sugar from June 1 this year and restricting supply to 1,864 metric tonnes (MT) for 18.64 lakh AAY cards. The Centre's decision had brought down the subsidy reimbursement to the State government from Rs. 20 crore per month to Rs. 3.45 crore per month.
“In order to control expenditure, the State [government] has decided to continue the supply of sugar at Rs. 13.50 per kg only for AAY cards for eligible quantity as stipulated by government of India and to revise the selling price of sugar for other cards to Rs. 25 per kg for the eligible quantity with effect from November 1, 2017,” the GO stated.
Even after the revision, there is a difference of Rs. 20 a kg between the market price of Rs. 45 per kg at which the government procures sugar and the subsidised rate of Rs. 25 per kg. The State government would have to bear the subsidy, it stated. “The amount of subsidy on account of sugar alone to the State government will be Rs. 839.29 crore per annum,”it added. Presently, sugar is supplied to all rice cardholders at the scale of 500 gram per head a month subject to a maximum of 2 kg a month and 1.5 kg per month for sugar cardholders.

Redeployment of Madras varsity faculty draws criticism

Controversial move:Decision to redeploy the faculty taken as there were 14 faculty members for 18 students.  

Seven teachers at the Nanoscience and Nanotech Centre were transferred

The decision of the Syndicate of the University of Madras to transfer seven faculty members recruited for the Nanoscience and Nanotechnology Centre to various other departments has drawn criticism.
Even as the university prepares for the Senate meeting on Saturday when the details of the redeployment will be reported, academics rue that the university has lost an opportunity to develop a world-class department.
University vice-chancellor, P. Doraisamy said the decision was taken as there were 14 faculty members for 18 students.
Amid high hopes, the National Centre for Nanoscience and Nanotechnology was set up at the university in 2006 with a grant of Rs. 100 crore to mark its 150th year celebrations. The State government also granted Rs. 5 crore. The university received Rs. 70 crore from the UGC and the entire State grant.
From the initial stages, the department faced trouble. The recruitment process was delayed by several years and finally in 2015, two professors, one associate professor and seven assistant professors were appointed. The university did not take the mandatory approval from the government and the appointments violated the State’s reservation roster and the University Grants Commission norms.
In December 2014, the then Higher Education Secretary Hemanth Kumar Sinha and the Director for Technical Education Praveen Kumar, as ex-officio members of the Syndicate, put the appointments on hold and sought the setting up of a three-member sub-committee to look into the lapses.
But the then vice-chancellor R. Thandavan went ahead with the appointments amid objections by some members in the next Syndicate. Subsequently, the Local Fund Audit and the Comptroller Auditor General audit also raised objections and insisted that the university get the required ratification of the appointments from the UGC.
The Syndicate in its October 3 meeting decided to transfer the excess faculty to various science departments in which the appointees had specialised in.
Former professors of the university term it an extreme step unbecoming of the institution. “What it shows is that not every appointment has been above board. In Annamalai University, teachers are being transferred within their specialisation. Madras university has transferred people selected for nanoscience and nanotechnology to other departments. This will not strengthen but kill the department,” said Michael Aruldas, former head of Endocrinology.
“The university should have got the government’s approval for the appointments. It is also affecting social justice as it is denying the chances of someone with specialisation in that subject,” he said.
However, the vice-chancellor, said, “We wanted to develop the centre and wrote to the UGC for sanctioning remaining funds. But they informed us that the programme had been closed in March 2015. The appointments were made when the programme was nearing closure. So, we have to redeploy the faculty.”

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...