Sunday, October 29, 2017

சர்க்கரைக்கு பின் மண்ணெண்ணெய்ரேஷனில் அடுத்த விலை உயர்வு

ரேஷன் சர்க்கரையை தொடர்ந்து மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



தமிழக ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 13.60 ரூபாய் என்ற விலைக்கு வழங்கப்படுகிறது. இது வீடுகளில் உள்ள சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு சிலிண்டர் இருந்தால் இரண்டு லிட்டர்; சிலிண்டர் இல்லாத வருக்கு நகரம், கிராமம் என வசிக்கும் இடத்தை பொறுத்து இரண்டு முதல் ஆறு லிட்டர் வரை வழங்கப்படுகிறது. இரண்டு சிலிண்டர் இருந்தால் மண்ணெண்ணெய் கிடையாது.

தற்போது 1.30 கோடி பேர் மண்ணெண்ணெய் வாங்க தகுதி உடையவர்கள். ஆனால் 30 லட்சம்

மட்டுமே வாங்குகின்றனர். வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 45 ரூபாயாக உள்ளது. அதில் மத்திய அரசின் மானியம் சராசரியாக 30 ரூபாய்; மாநில அரசின் பங்கு 1.25 ரூபாய் வழங்கி மக்களுக்கு குறைந்தவிலைக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ 13.50 ரூபாய்க்கு விற்கப்படும் சர்க்கரை விலை வரும் 1ம் தேதியில் இருந்து 25 ரூபாய்க்கு விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷனில் தகுதியான அனைவருக்கும் வழங்க 5.90 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் தேவை. ஆனால் மத்திய அரசு தற்போது 1.70 கோடி லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது.மத்தியஅரசு மண்ணெண்ணெய் மானியத்தை நிறுத்த போவதாக அவ்வப்போது தகவல் வருகின்றன. மண்ணெண்ணெய்க்காக தமிழக அரசு ஆண்டுக்கு 40 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறது.குறைந்த விலையில் தரும் சர்க்கரையின் செலவை ஈடு செய்ய மத்திய அரசிடம் ஏற்கனவே வழங்குவதுடன்

கூடுதல் மானியம் தருமாறு கேட்கப்பட்டது; அது கிடைக்க வில்லை. சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய சுமை குறைப்பது குறித்து உயர்மட்ட குழு ஆலோசித்தது. அதில் இரண்டின் விலை யையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

ஒரே சமயத்தில் விலையை உயர்த்தினால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும். இதை தவிர்க்க முதலில் சர்க்கரை விலை உயர்த்தப் பட்டது. ஓரிரு மாதங்களுக்கு பின் மண்ணெண்ணெய் விலையும் 15 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...