Sunday, October 29, 2017


சர்க்கரை விலை உயர்வு எதிர்க்கட்சிகள் கண்டனம்


சென்னை, தமிழக அரசு, ரேஷன் சர்க்கரை விலையைஉயர்த்தியுள்ளதற்கு, எதிர்க்கட்சி தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.தி.மு.க., செயல்தலைவர், ஸ்டாலின்: ரேஷன் கடைகளில், சர்க்கரை விலையை, 13 ரூபாய், 50 காசில் இருந்து, 25 ரூபாயாக உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. தேசிய உணவு பாதுகாப்புசட்டத்தில் கையெழுத்திட்டதால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஏழைகளுக்கும், மத்திய பா.ஜ., அரசுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதை, மத்திய அரசின், ஒவ்வொரு நடவடிக்கையும் உணர்த்தி வருகிறது. ஏற்க முடியாதநிபந்தனைகளை விதித்து, பொது வினியோக திட்டத்தை ரத்து செய்து விடுவரோ என்ற அச்சம், மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.சர்க்கரை மானியத்தை ரத்து செய்வதை கைவிட்டு, தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.பா.ம.க., நிறுவனர்,
ராமதாஸ்: சர்க்கரைக்கு வழங்கப்பட்ட மானியத்தை, மத்திய அரசு ரத்து செய்ததும், பா.ம.க., கடுமையாக எதிர்த்தது. ஆனால், தமிழக அரசு, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்தது. ஐந்து மாதங்களில், வாக்குறுதியை பறக்கவிட்டு, நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர்.தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவர், திருநாவுக்கரசர்: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பிரிவினருக்குமட்டும், சலுகை
விலையில், சர்க்கரை வழங்கப்படும். மற்றவர்களுக்கு வழங்கப்படாது என கூறுவது, அப்பட்டமான மக்கள் விரோதநடவடிக்கை. இதைதிரும்பப் பெறவேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...