Sunday, October 29, 2017


மெல்லிசைக்கு விடை கொடுத்தார் ஜானகி
மெல்லிசைக்கு விடை கொடுத்தார் ஜானகி
மைசூரு, பழம் பெரும் பின்னணி பாடகி ஜானகி, கர்நாடகா மாநிலம் மைசூரில் நேற்று தன் கடைசி இசை நிகழ்ச்சியில் பாடினார். இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்து அவரது பாடலை ரசித்தனர்.பிரபல சினிமா பின்னணி பாடகி ஜானகி, 80, கடந்த 1952ல் முதல் முறையாக பாடினார். அன்று முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான படங்களில் பின்னணி பாடல்களை அவர் பாடியுள்ளார்.கொஞ்சும் சலங்கை படத்தில் இவர் பாடிய சிங்கார வேலனே தேவா, 16 வயதினிலே படத்தில் பாடிய செந்துாரப்பூவே, தேவர் மகனில் பாடிய இஞ்சி இடுப்பழகி ஆகிய பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.சமீபத்தில் மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது. ஆனால் 'காலம் கடந்து தந்த இந்த அங்கீகாரத்தை ஏற்க மாட்டேன்' என அதிரடியாக அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். வயது முதிர்வினால் சமீபகாலமாக திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில், மைசூரு மானச கங்கோத்ரியிலுள்ள திறந்தவெளி அரங்கில், ஜானகியின் கடைசி இசை நிகழ்ச்சியை மன்னர் பரம் பரையை சேர்ந்த பிரமோதா தேவி, நேற்று துவக்கி வைத்தார். 
திரையுலகினர், வி.ஐ.பி.,க்கள் உட்பட பலர் வந்திருந்தனர்.
'இது தான், என் கடைசி இசை நிகழ்ச்சி; இதற்கு பின், இசை 
கச்சேரிகளில் பாடப் போவது இல்லை' என, ஜானகி ஏற்கனவே தெரிவித்திருந்ததால், இந்த நிகழ்ச்சிக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 
வந்திருந்தனர்.

No comments:

Post a Comment

Governor confers degrees on graduands at MKU’s convocation

Governor confers degrees on graduands at MKU’s convocation Governor R.N. Ravi conferring degree on a graduand at the convocation of Madurai ...