Sunday, October 29, 2017

மகரவிளக்கு சீசன் முன்பதிவு துவக்கம்

சபரிமலை, சபரிமலையில், இந்தாண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கான, 'ஆன்லைன்' முன்பதிவு துவங்கியுள்ளது.கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, அம்மாநில போலீசார், 'விர்ச்சுவல் கியூ'-வை அறிமுகம் செய்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள், பம்பையில் முன்பதிவு சீட்டு மற்றும் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை காண்பித்து, அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.இந்த அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் பக்தர்கள், சபரிபீடத்தில், தனி வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவர். மரக்கூட்டத்தில் இருந்து, சரங்குத்தி செல்லாமல், சந்திராங்கதன் சாலை வழியாக பெரிய நடைப்பந்தலை அடையலாம். இங்கும் அதிக நேரம் காத்திருக்காமல், 18-ம் படியேறலாம்.படியேறிய பின், வழக்கமான வரிசையில் வரும் பக்தர்களுடன் நடைமேம்பாலத்தில் ஏறிச் சென்று, தரிசனம் செய்ய வேண்டும். இந்த ஆண்டு, மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. டிச., 23 வரை முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 06.12.2025