Sunday, October 29, 2017


சிறையில் சுவையான உணவு கைதிகள் எடை அதிகரிப்பு

இந்துார்: ம.பி., மாநிலம், இந்துாரில் உள்ள சிறையில் வழங்கப்படும் சுவையான உணவுகளால், பெரும்பாலான கைதிகளின் உடல் எடை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்துாரில் உள்ள சிறையில், 1,322 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில், சிறையில் நடந்த மருத்துவ முகாமில், கைதிகளின் உடல் எடை,கணிசமாக உயர்ந்துள்ளது தெரிந்தது.இது குறித்து, சிறை கண்காணிப்பாளர், ரமேஷ் சந்திர ஆர்யா கூறியதாவது:சிறையில் அடைக்கப்பட்ட பின், கைதிகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும். பெரும்பாலான கைதிகளுக்கு, சிறையில் வழங்கப்படும் உணவு பிடிக்காது; இதனால், அவர்களில் உடல் எடை குறையும். ஆனால், இங்கு, கைதிகளுக்கு, சிறந்த சமையல் நிபுணரை வைத்து, சமையல் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இதனால், கைதிகளே சுவையான காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தயாரிக்கின்றனர். சுவையான உணவுகள் தயாரிக்கப்படுவதால், நானும், இங்கு தான் சாப்பிடுகிறேன். சமீபத்தில் நடந்த மருத்துவ முகாமில், 70 சதவீத கைதிகளின் உடல் எடை, கணிசமாக அதிகரித்துள்ளது தெரிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Advisory against fake medical college website

Advisory against fake medical college website The Hindu Bureau KRISHNAGIRI  23.10.2024  District Collector K.M. Sarayu has issued a release ...